திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி உள்பட 6 அமைச்சர்களும், மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர் பதவி உள்பட 6 அமைச்சர் பதவிகளையும் தர காங்கிரஸ் இறுதியாக பேசியுள்ளது. இதற்கு இரு கட்சிகளும் ஒப்புக் கொள்ளும் எனத் தெரிகிறது.

திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை ஒதுக்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்தி வைத்துவிட்டார்.தாங்கள் கேட்கும் அமைச்சர் பதவிகள், துறைகளைத் தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப் போவதாகவும் காங்கிரசிடம் திமுக கூறிவிட்டது. இதையடுத்து சிக்கலைத் தீர்க்க தீவிர பேச்சு வார்ததை நடந்து வருகிறது.முன்னதாக இன்று காலை ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து நாளை தன்னுடன் பதவியேற்கும் அமைச்சர்களின் பட்டியலை தர இருந்தார் மன்மோகன் சிங்.

ஆனால், திமுகவுக்கு அமைச்சர் பதவிகள் ஒதுக்குவதில் பெரும் சி்க்கல் உருவாகியுள்ளதால் அமைச்சர்கள் பட்டியலை உருவாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.தங்களுக்கு எத்தனை கேபினட் அமைச்சர்கள் என்பதிலும் திமுக, மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் மூண்டுள்ளது.

கேட்டது 4+4 – கிடைப்பது 2+1+3:

திமுக 4 கேபினட் அமைச்சர் பதவிகளையும், இணையமைச்சர்களையும் கோரி வந்தது. இதுதொடர்பாக இழுபறி நீடித்தது. 2 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 4 இணையமைச்சர்களைத் தருவதாக காங்கிரஸ் கூறியது.இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன், ராசா ஆகியோர் பிரணாப் முகர்ஜி மற்றும் குலாம் நபி ஆசாத்தை சந்தித்துப் பேசினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர்கள், ஒரு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி மற்றும் 3 துணை அமைச்சர் பதவிகளைத் தருவதாக காங்கிரஸ் தீர்மானமாக கூறியது.இதற்கு தயாநிதி மாறன், ராசா உடனடியாக பதிலளிக்கவில்லையாம். இருப்பினும் திமுக தரப்பு, இந்த புதிய ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ளலாம் எனத் தெரிகிறது.

அதேபோ, மம்தா பானர்ஜி, திமுகவுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் தரப்படுகிறதோ அதே அளவுக்கு கேபினட்-இணையமைச்சர்களோடு கூடுதலாக ஒரு இணையமைச்சர் பதவி தர வேண்டும் என நிபந்தனை விதித்து வந்தார்.மேலும் ரயில்வே துறையையும் அவர் கேட்டு வந்தார். இதே துறையைத்தான் திமுகவும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் காங்கிரஸ் தரப்பு சற்று முன்பு மமதாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில், மமதா கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 3 துணை அமைச்சர் பதவிகள் கொடுப்பதாக காங்கிரஸ் கூறியதாம்.

திமுகவை விட கூடுதலாக ஒரு அமைச்சர் பதவி என்ற வறட்டுப் பிடிவாதத்தில் இருந்து வந்த மமதா, இப்போது அந்த நிலையிலிருந்து இறங்கியுள்ளார். திமுகவை விட கூடுதலாக ஒரு கேபினட் அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் கூறுவதால் இந்த இறக்கமாம்.கடந்தமுறையை விட 60 இடங்களில் அதிகமாக வென்றுள்ள காங்கிரஸ் தனக்கு இம்முறை கூடுதலாக அமைச்சர் பதவிகளை எடுத்துக் கொள்ளும் திட்டத்தில் உள்ளது.

பாலு-ராசாவுக்கு காங். எதிர்ப்பு?:

இதற்கிடையே, டி.ஆர்.பாலு, ராசாவுக்கு இம்முறை அமைச்சர் பதவியே தர மாட்டோம் என்று காங்கிரஸ் கூறுவதாகவும் அதை திமுக கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிகிறது.யாருக்கு அமைச்சர் பதவி என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம், இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலையிடவே கூடாது என்று திமுக கூறிவி்ட்டதாகத் தெரிகிறது.பாலுவுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில், பாலுவுக்கு சபாநாயகர் பதவியைத் தர வேண்டும் என வற்புறுத்தி வருகிறதாம் திமுக.

திமுகவைப் பொறுத்தவரை பாலு, தயாநிதி, ராசா, அழகிரி ஆகியோருக்கு என 4 கேபினட் அமைச்சர் பதவிகள், கனிமொழிக்கு ஒரு தனிப் பொறுப்புடன கூடிய இணையமைச்சர் பதவி, 3 இணையமைச்சர் பதவிகளையும் கோரி வந்த நிலையில், தற்போது தற்போது 6 பதவிகளே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது.எனவே மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு கேபினட் அமைச்சர் பதவிகளும், கனிமொழிக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியும் கிடைக்கலாம். டி.ஆர்.பாலு, ராசா ஆகியோர் திராட்டில் விடப்படலாம் என தெரிகிறது.

திமுகவுக்கு ரயில்வே இல்லை..

அதேபோல திமுக அழுத்தமாக வலியுறுத்தி வந்த ரயில்வே துறையும் கிடைக்காத நிலை உள்ளது. அந்தத் துறையை மமதாவுக்குக் கொடுக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அத்துறையை மமதாவே வகிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அதற்குப் பதில் திமுகவுக்கு சுகாதாரம் கொடுக்கப்படலாம். இந்தத் துறையை அழகிரி[^] க்கு திமுக கொடுக்கக் கூடும். அதேபோல தயாநிதி மாறனுக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை கிடைக்காது எனத் தெரிகிறது. அதற்குப் பதிலாக இரும்பு எஃகு துறை கிடைக்கக் கூடும்.திமுக முன்பு, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து, சுற்றுச்சூழல் ஆகியவையும், இணையமைச்சர் பதவிகளில் நலத்துறை, மின்துறை, உள்துறை, நிதி என பல துறைகளைக் கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியிலிருந்து ஆதரவு மிரட்டல்…

முன்னதாக தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், வெளியில் இருந்து ஆதரிக்கப் போவதாக திமுக கூறியதாகத் தெரிகிறது.கருணாநிதி மற்றும் மமதா பானர்ஜியின் இந்த பிடிவாதமான இழுபறியால்தான் மன்மோகன் சிங்கால் அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்தே ஜனாதிபதியை இன்று காலை சந்தித்து பட்டியலைத் தர இருந்த பிரதமர் அந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டார்.
பிரச்சனை தீர்ந்தால் இன்று மாலை அமைச்சர் பட்டியலை ஜனாதிதியிடம் பிரதமர் வழங்குவார்.

நன்றி தட்ஸ் தமிழ்

Advertisements

இதுவரை இலங்கையில் இப்படி ஒரு மோசமான, ரத்தக்களறியை நான் பார்த்ததில்லை என்று முல்லைத்தீவில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரசு டாக்டர் வி.சண்முகராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முழுவதும் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த பயங்கர பீரங்கித் தாக்குதலில் 2000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது இலங்கை ராணுவம்.

ஆயிரக்கணக்கானோர் கை, கால்களை இழந்து ரத்த வெள்ளத்தில் படுகாயமுற்றுள்ளனர். அவர்களை சிகிச்சைக்குக் கொண்டு செல்லக் கூட வழியில்லாத அவல நிலை காணப்படுகிறது.அங்கு காணப்படும் நிலை குறித்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரசு டாக்டர் வி.சண்முகராஜா கூறுகையில், எனது வாழ்நாளில் இப்படி ஒரு ரத்தக்களறியை நான் பார்த்ததில்லை. உடல்கள் வந்து கொண்டே உள்ளன. அதேபோல காயமுற்றவர்களும் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளனர். பலி எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என அஞ்சுகிறேன்.

சில உடல்களை எடுத்து வர முடியாத அளவுக்கு சிதைந்து போய் விட்டதால் அவற்றை ஆங்காங்கே புதைத்துக் கொண்டிருக்கின்றனர்.பீரங்கிக் குண்டுகளில் பல மருத்துவமனைக்கு வெகு அருகிலும் வந்து விழுந்துள்ளன. இதனால் மருத்துவமனையில் இருந்த பலரும் பதுங்கு குழிகளுக்கு மாற்றப்பட்டனர்.

எங்களிடம் தற்போது ஓரளவு மருந்துகள் உள்ளன. ஆனால் போதிய டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் இல்லை. எனவே காயமுற்று வருகிறவர்களுக்கு முதலில் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்து வருகிறோம். எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை.உயிரிழந்தவர்களின் உடல்களைப் புதைக்கக் கூட ஆட்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. இதற்காக தொண்டர்களைத் தேடி வருகிறோம் என்றார்.

நன்றி.. தட்ஸ் தமிழ்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அணிக்கும், அதிமுக அணிக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று  லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளுக்கும்  அடுத்த படியாக தேமுதிகவிற்கு  மக்களின் ஆதரவு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் மற்றும் தமிழ் வழி முதுகலை ஊடக கலைகள் துறை மாணவர்கள் பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலின் பேரில் இம்மாதம் 1-ந் தேதியிலிருந்து, 10-ந் தேதி வரை தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், மக்களை சந்தித்து கருத்துகளை சேகரித்துள்ளனர்.

ஆய்வு முடிவுகள் வெளியீடு
இந்த ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  அகில இந்திய கத்தோலிக்க மாணவர் சங்கத்தின் ஆலோசகர் ஹென்றி ஜெரோம் இந்த ஆய்வினை இன்று வெளியிட்டார்.  பேராசிரியர் ராஜநாயகம், ஆய்வுத் துறை மாணவி சங்கமித்திரை  ஆகியோர் இந்த களஆய்வு குறித்த விவரங்களை பத்திரிகையாளர் களிடம் விளக்கிக் கூறினார்கள்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான அணி 34.9 சதவிகிதம் வாக்குகள் பெறும் என்றும், திமுக தலைமையிலான அணி 34.5 சதவிகிதம் வாக்குகள் பெறும் என்றும் இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேமுதிகவுக்கு 3-ம் இடம்

இதற்கு அடுத்தபடியாக 12.3 சதவிகித வாக்குகளை தேமுதிக பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தனியாக 27.3 சதவிகித வாக்காளர்களின் ஆதரவையும், திமுக 26.5 சதவிகித  வாக்காளர்களின் ஆதரவையும் பெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக அணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 6.4 சதவிகிதம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகள் 1.2 சதவிகிதம், முஸ்லிம் லீக் கட்சிக்கு 0.4 சதவிகிதம் மக்களின் ஆதரவு உள்ளது. அதிமுக  அணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு 2.4 சதவிகிதம், பாமகவுக்கு 3 சதவிகிதம், சிபிஐ-1 சதவிகிதம், சிபிஎம் கட்சிக்கு 1.2 சதவிகிதம் ஆதரவு உள்ளது. பிஜேபிக்கு 3.1 சதவிகிதம் ஆதரவும் அந்த அணியில் சமக இடம் பெற்றால்  அவர்களுக்கு 0.4 சதவிகிதம் வாக்காளர்கள் ஆதரவு இருப்பதாக இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிறகட்சிகள் மற்றும் சுயேட்சை களுக்கு 1.7 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என்றும், 13.1 சதவிகித வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கவில்லை என்றும், அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.  3 ஆண்டு திமுக ஆட்சி திருப்தி அளிப்பதாக 47.5 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். அதிருப்தி அளிப்பதாக 44.6 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான 5 ஆண்டுகால மத்திய ஆட்சி திருப்தி அளிப்பதாக 43.3 சதவிகிதத்தினரும்,  அதிருப்தி அளிப்பதாக 42.2 சதவிகிதத்தினரும் கூறியுள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சனை

தமிழகத்தை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனைதான் இந்த தேர்தலில்  முதலிடம் பெறுவ தாகவும் (28.8 சதவிகிதம்) விலைவாசி உயர்வு (23.7 சதவிகிதம்), மற்ற பிரச்சனைகள் அடுத்தபட்சம்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் விலைவாசி உயர்வுதான் (24.1 சதவிகிதம்) முன்னணியில் உள்ளது. தீவிரவாதம், பயங்கரவாதம் (24.4 சதவிகிதம்), இலங்கை தமிழர் பிரச்சனை(19.4 சதவிகிதம்), மேலும் மின்வெட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவையும் முக்கிய பிரச்சனை களாக மக்கள் கருதுகிறார்கள்.

அதிமுக மீது நம்பிக்கை

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் ஆய்வுக்கு எடுத்து கொண்ட 5 பிரச்சனைகளில்,  இலங்கை தமிழர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கை பராமரித்தல், மின்வெட்டு ஆகிய பிரச்சனைகளை அதிமுக அணி வெற்றிபெற்றால்தான் தீர்க்க முடியும் என்றும், வேலை யில்லா திண்டாட்டத்தை மட்டுமே திமுக அணி தீர்க்க முடியும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அகில இந்திய அளவில் இலங்கை தமிழர் பிரச்சனை (31.4சதவிகிதம்), மின்சாரவெட்டு(24.6சதவிகிதம்), வேலையில்லா திண்டாட்டம் (28.9 சதவிகிதம்) இந்த பிரச்சனைகளை எந்த அணி வெற்றி பெற்றாலும் தீர்க்க முடியாது என்று அதிக அளவிலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சம பலத்தில் திமுக-அதிமுக

திமுக அணியும், அதிமுக அணியும் தற்போது சமவலுவுடன் களத்தில் நிற்பதாகவும், கட்சி ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் சமசெல்வாக்குடன் இருப்பதாலும், இதுவரையிலும் முடிவெடுக்காத நிலையில் உள்ள 13.1 சதவிகித வாக்காளர்களின் முடிவே இவர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.திருமங்கலம் தேர்தலை போல, தாங்கள் நன்கு ‘கவனிக்க’ப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பெரும்பான்மையான வாக்காளர் களிடம் இருப்பதாகவும், அந்த எதிர்பார்ப்பும் இலங்கை பிரச்சனையை கையாளும் முறையும், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்று லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

இலங்கை விவகாரத்தில் திடீர் திருப்பமாக விடுதலைப் புலிகள் ஆதரவு அரசியல் கட்சியான தமிழர் தேசிய கூட்டமைப்பை (TNA) இந்தியா பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால், போர் நிறுத்தத்துக்கு இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போருக்கும் உதவிக் கொண்டிருப்பதாகக் கூறி இந்த அழைப்பை ஏற்க அந்தக் கட்சி மறுத்துவிட்டது.இந்தக் கட்சிக்கு இலங்கை நாடாளுமன்றத்தி்ல் 22 எம்பிக்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் அமைச்சர்களையும் சந்தி்க்க காத்துக் கிடந்தும் கூட அவர்களை சந்திக்க யாரும் முன் வரவில்லை.

இந் நிலையில் தமிழகத்தில் இலங்கை விவகாரம் காங்கிரஸ்-திமுக கூட்டணியை மொத்தமாக பதம் பார்க்கப் போவது உறுதி என பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறுவதையடுத்து ‘டேமேஜ் கண்ட்ரோலில்’ குதித்துள்ளது மத்திய அரசு.இந்த வகையில் திடீரென வரும் 14, 15ம் தேதிகளி்ல் தன்னை சந்திக்க வருமாறு இந்திய வெளியுறுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இந்தக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பிரச்சனை பற்றிப் பேச பலமுறை இலங்கை சென்ற மேனன் ஒரு முறை இந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பு நிராகரிப்பு:

இந் நிலையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது பேச்சுவார்த்தைக்கான நேரமல்ல என அந்தக் கூட்டமைப்பின் எம்பியான ஸ்ரீகாந்தா கூறியுள்ளார்.அவர் கூறுகையில், இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல, போருக்கும் துணை புரிந்து கொண்டு்ள்ளது. இந்தப் போரில் அப்பாவி மக்கள் கொலையாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவுடன் பேச நாங்கள் விரும்பவில்லை.

போரை நிறுத்த இந்தியா ஏதாவது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்திய அதிகாரிகளை சந்திப்போம் என்றார்.அதே போல இந்தக் கூட்டமைப்பின் திரிகோணமலை எம்பியான துரைரத்தினசிங்கம் கூறுகையில், இது மிகத் தாமதமாக வந்துள்ள அழைப்பு. இந்திய அதிகாரிகளையும் தலைவர்களையும் நாங்கள் சந்திக்க வரும்போது மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் செத்து மடிந்திருப்பார்கள். பாதுகாப்பு வளையத்திலேயே ராணுவம் நடத்தும் குண்டு வீச்சுக்கு குழந்தைகளும் பெண்களும் பலியாகிக் கிடப்பார்கள்.இதனால் முதலில் பாதுகாப்பு வளையத்தில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று இலங்கையை இந்தியா தடுத்து நிறுத்தினால் வேண்டுமானால் பேச்சுவார்த்தை குறித்து யோசிக்கலாம். தாற்காலிக போர் நிறுத்தத்துக்காவது இந்தியா வழி செய்ய வேண்டும் என்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்

மக்களவை தேர்தலில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது மதுரை தொகுதியில் மு.க.அழகிரியும்,பெரம்பலூரில் நடிகர் நெப்போலியனும், ராமநாதபுரத்தில் நடிகர் ரித்தீஷûம் போட்டியிடுகின்றனர்.  மதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்த எல்.கணேசன், செஞ்சி ராமச் சந்திரன், மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.

மக்களவை தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் திமுக,காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் திமுகவுக்கு 21 இடமும், காங்கிரசுக்கு 16 இடங்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும், முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டன.

அதன்படி திமுக போட்டியிடும் 21 இடங்களுக்கு கடந்த 3 நாட்களாக  கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவால யத்தில் நேர்காணல் நடைபெற்றது. முதலமைச்சரும், திமுக தலை வருமான கருணாநிதி தலைமையில் இந்த நேர்காணல் நடந்து முடிந்தது. நேர்காணலுக்கு பின் செய்தியாளர் களிடம் பேசிய கருணாநிதி, திமுக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். அதன்படி இன்று 21 வேட்பாளர் களை கொண்ட திமுகவின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி மதுரை மக்களவை தொகுதியில் மு.க.அழகிரி போட்டி யிடுகிறார். நடிகர் நெப்போலியன் பெரம்பலூர் தொகுதியிலும், நடிகர் ரித்தீஷ் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், ஆ.ராசா நீலகிரி தொகுதியிலும், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சை தொகுதியிலும் போட்டியிடு கின்றனர். இந்த வேட்பாளர் பட்டியலில் பல புதுமுகங்களும் இடம் பிடித்துள்ளனர்.


வேட்பாளர் பட்டியல் வருமாறு:-

1. வடசென்னை-டி.கே.எஸ். இளங்கோவன். 2. மத்திய சென்னை- தயாநிதி மாறன். 3. தென் சென்னை-ஆர்.எஸ்.பாரதி.   4. ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு. 5.திருவள்ளூர்-காயத்ரி ஸ்ரீதரன். 6. அரக்கோணம்-ஜெகத் ரட்சகன்.   7. கிருஷ்ணகிரி-சுகவனம். 8. தர்மபுரி- தாமரைச் செல்வன். 9.நீலகிரி-ஆ.ராசா.  10. கள்ளக்குறிச்சி- ஆதிசங்கர்.   11. பொள்ளாச்சி-சண்முக சுந்தரம்.

12. பெரம்பலூர்-நடிகர் நெப் போலியன். 13. தஞ்சை-எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 14. திருவண்ணாமலை- வேணு கோபால். 15. நாமக்கல்-காந்தி செல்வன். 16.கரூர்-கே.சி. பழனிச்சாமி.

17.மதுரை- மு.க.அழகிரி. 18. நாகை- ஏ.கே.எஸ்.விஜயன், 19. ராமநாதபுரம் – நடிகர் ஜே.கே.ரித்தீஷ். 20. தூத்துக்குடி-எஸ்.ஆர்.ஜெயதுரை. 21. கன்னியாகுமரி ஹெலன் டேவிட்சன். இந்த பட்டியலை முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.
மதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்த எல். எல்.கணேசன், செஞ்சி ராமச் சந்திரன், மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு சீட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் யாருக்கும் திமுக பட்டியலில் இடம் ஒதுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 மந்திரிகளுக்கு  சீட் இல்லை
திமுக வேட்பாளர் பட்டியலில் நான்கு மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.  மேலும் சில எம்.பி.க்களுக்கும் சீட் அளிக்கப்படவில்லை. முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்ட திமுக வேட்பாளர் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பழனி மாணிக்கம் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, வெங்கடபதி, ராதிகா செல்வி ஆகியோருக்கு இந்த முறை இடம் அளிக்கப்படவில்லை.
மேலும் செ.குப்புசாமி, கிருஷ்ண சாமி, பவானி ராஜேந்திரன் ஆகி யோருக்கும் சீட் கிடைக்கவில்லை.

மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா டுடே-மார்க்-எசி நீல்சன் ஆகியவை இணைந்து நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கூட்டணிக்கு 190 முதல் 199 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 172 முதல் 181 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.மூன்றாவது அணிக்கு 169-178 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு 21 இடங்களும், திமுக கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. திமுக, சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜன் சக்தி மற்றும் இடதுசாரிகள், பாமக ஆகியவை ஆதரித்தால் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும் என்கிறது கருத்துக் கணிப்பு.

உத்தரப் பிரதேசத்தில்…:

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கடந்த தேர்தலில் 11 இடங்களில் வென்றது. இம்முறை அவர் 30 இடங்களைப் பிடிப்பார். சமாஜ்வாடிக் கட்சி 29 இடங்களில் வெல்லும். இது கடந்த தேர்தலைவிட 6 இடங்கள் குறைவு. பாஜகவுக்கு 14 இடங்கள் கிடைக்கும். இது கடந்த தேர்தலைவிட 4 இடங்கள் அதிகம். காங்கிரசுக்கு 2 இடங்கள் குறைவாகக் கிடைக்கும்.

பஞ்சாபில்..

பஞ்சாபில் பாஜக-சிரோமணி அகாலிதளம் கூட்டணி 10 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் மட்டும் வெல்லும்.

 ஹரியாணாவில்…

 ஹரியாணாவில் காங்கிரஸ் 8 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் மட்டுமே வெல்லும். தமிழகத்தில்…

தமிழகத்தி்ல் அதிமுக கூட்டணிக்கு 21 இடங்களும் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும். தேமுதிக பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது.

 டெல்லி…

டெல்லியில் காங்கிரஸ் 6 இடங்கள், பாஜக ஒரு இடத்தில் வெல்லும்.

ஆந்திரா..

ஆந்திராவில் காங்கிரஸ் 21 இடங்களிலும், தெலுங்கு தேசம்-டி.ஆர்.எஸ். கூட்டணி, சிரஞ்சீவி கட்சி ஆகியவை 18 இடங்களிலும் வெல்லும். இதன்மூலம் காங்கிரசுக்கு கடந்த தேர்தலைவிட 8 தொகுதிகள் குறையும். கடந்த முறை தெலுங்கு தேசத்துடன் இணைந்து 5 இடங்களில் வென்ற பாஜகவுக்கு இம்முறை ஒரு இடமும் கிடைக்காது.

கர்நாடகம்…

 கர்நாடகத்தில் ஆளும் பாஜக 18 இடங்களில் வெல்லும். காங்கிரசுக்கு 6 இடங்களும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 4 இடமும் கிடைக்கும். இதன்மூலம் காங்கிரஸ் 2 இடங்களை இழக்கிறது. பாஜக கடந்த தேர்தலில் வென்ற அதே இடங்களை வெல்கிறது.

 கேரளா..

கேரளத்தில் இடதுசாரிக் கூட்டணிக்கு 8 இடங்களே கிடைக்கும். கடந்த தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்லாத காங்கிரக்கு இம்முறை 12 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது.

மேற்கு வங்கம்..

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-மம்தா பானர்ஜி கூட்டணிக்கு 16 இடங்களிலும் இடதுசாரிகளுக்கு 26 இடங்களும் கிடைக்கும். இதன்மூலம் இடதுசாரிகளுக்கு 9 இடங்கள் இழப்பு ஏற்படும். காங்கிரசுக்கு 10 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் வென்ற பாஜகவுக்கு இம்முறை அதுவும் கிடைக்காது.

பிகார்..

 பிகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணிக்கு 21 இடங்கள் கிடைக்கும். லாலு-பாஸ்வான் கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்கும். காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைக்காது.

 ஒரிஸ்ஸா..

 ஒரிஸ்ஸாவில் கடந்த முறை 2 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரசுக்கு இம்முறை 9 இடங்களும் ஆளும் பிஜூ ஜனதா தளத்துக்கு 10 இடங்களும் கிடைக்கும். கடந்த முறை 7 இடங்கள் வென்ற பாஜகவுக்கு இம்முறை 2 இடங்களே கிடைக்கும்.

மகாராஷ்டிரா..

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்-சரத்பவார் கூட்டணி 26 இடங்களில் வெல்லும். பாஜக-சிவசேனா கூட்டணி 21 இடங்களில் வெல்லும். இதன்மூலம் இம்முறை பாஜக-சிவசேனா கூட்டணிக்கு 3 இடங்கள் குறையும்.

 குஜராத்…

 குஜராத்தில் பாஜக 17 இடங்களில் வெல்லும். இது கடந்த தேர்தலை விட 3 தொகுதிகள் அதிகமாகும். கடந்த முறை 12 இடங்களில் வென்ற காங்கிரஸ் இப்போது 9 இடங்களில் வெல்லும்.

ராஜஸ்தான்..

ராஜஸ்தானில் பாஜக 13 இடங்களில் மட்டுமே வெல்லும். கடந்த முறை இங்கு 21 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 4 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் இம்முறை 12 இடங்களில் வெல்லும். இவ்வாறு கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களிலும் பாஜக கூட்டணி 184 இடங்களிலும் இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் 125 இடங்களிலும் வென்றது நினைவுகூறத்தக்கது

நன்றி தட்ஸ் தமிழ்…

அதிருப்தியில் கதர் சட்டைகள்

சூரியக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நடந்து முடிந்து விட்டாலும் சலசலப்பு இன்னமும் ஓயவில்லை.காலம் காலமாக தங்கள் வசமிருந்த ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி (முன்பு நாகர்கோயில்) மக்களவைத் தொகுதிகள் தற்போது சூரியக் கட்சி எடுத்துக் கொண்டிருப்பது, கதர் சட்டைகள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளதாம். இதனால், சம்மந்தப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் கதர் சட்டைப் பிரமுகர்கள் சோர்ந்து போயுள்ளனராம். தொகுதி ‘கை’விட்டு போனதன் பின்னணியில், தென் மாநில விவகாரங்களை கவனிக்கும் அஞ்சா நெஞ்சர் இருக்கலாம் என்பது அவர்களது சந்தேகமாம். அஞ்சா நெஞ்சரின் மகள் கன்னியாகுமரியில் நிறுத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களிலும் பேசப்படுகிறது.

***

நொந்துபோயிருக்கும் புயல்

இலைக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தைகள் ஜரூராக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மீது புயல் தலைவர் அதிருப்தியில் இருக்கிறாராம். நேற்று வந்த மாம்பழக் கட்சித் தலைவருக்கு ராஜ மரியாதை அளித்து, கேட்ட தொகுதிகளை வாரி வழங்கியுள்ள தலைவி, தனது விஷயத்தில் இன்னமும் சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறதாம். கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் எதிர் முகாமிற்குத் தாவி வருவதால் இம்முறை இடங்கள் கேட்டுப் பெறுவதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறதாம். தோட்டத்தில் நேற்றிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்க, 5 தொகுதிகள் என்ற முடிவு இன்று மாலை வெளியாகும் என்கிறார்கள்.

***

அடுத்த பிரமுகருக்கு குறி

இதுவும் புயல் கட்சியைப் பற்றிய தகவல்தான். ஏற்கனவே தொகுதிப் பங்கீடு விஷயத்தில் கவலையில் ஆழ்ந்திருக்கும் கலிங்கப்பட்டியாருக்கு, மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பம்பரக் கட்சியின் தென் மாவட்ட எம்.எல்.ஏ. ஒருவரை தங்கள் பக்கம் இழுக்க அறிவாலய வட்டாரம் தீவிரம் காட்டி வருகிறதாம். இதற்காக, சம்மந்தப்பட்ட நபரை அஞ்சாநெஞ்சரே தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம். விரைவில், அடுத்த இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

***

இடம் மாறும் சிறுத்தை?

சிதம்பரத்தில்தான் போட்டி என்ற உறுதிப்பாட்டில் இருந்த சிறுத்தைத் தலைவர், தற்போது விழுப்புரத்தில் களமிறங்கலாமா என்று யோசித்து வருகிறாராம். இதுவரை உறவாடி வந்த மாம்பழக் கட்சியை எதிர்த்து சிதம்பரத்தில் நிற்பது சங்கடமாக இருக்கும் என்பதால், இந்த யோசனையைப் பரிசீலித்து வருவதாக சிறுத்தைக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நன்றி வெப்துனியா

டாக்டர் ராமதாஸை ‘டாக்டர் அண்ணன்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறிப்பிட்டார். அதே போல ஜெயலலிதாவை பாமக நிறுவனரும் மீண்டும் ‘அன்புச் சகோதரி’ என்றார்.
போயஸ் தோட்டத்தி்ல் தன்னை ராமதாஸ் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:

மக்களைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று அதிமுக-பாமக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.பாமக நிறுவனர் அண்ணன் டாக்டருக்கும் எனக்கு நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்குவது என்றும் 2010ம் ஆண்டில் ஒரு ராஜ்யசபா இடத்தை அவர்களுக்கு ஒதுக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று ஒரு மகிழ்ச்சியான நாளாகும். 8 வருடங்களுக்குப் பிறகு அண்ணன் என்னை சந்தித்து கூட்டணி உடன்பாட்டை செய்து கொண்டுள்ளார்.

நாடெங்கும் இது ஒரு வெற்றிக் கூட்டணி, வெல்ல முடியாத கூட்டணி என்பதை உணர்ந்துள்ளார்கள் என்றார்.மற்ற கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்து கேட்டபோது, மற்ற தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒரு சில தினங்களில் உடன்படிக்கை ஏற்பட்டு விடும் என்றார்.

(மீண்டும்) ‘அன்புச் சகோதரி’:

பின்னர் ராமதாஸ் கூறுகையில், அதிமுக பொதுச் செயலாளர் அன்புச் சகோதரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது வெற்றிக் கூட்டணியாகும். புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெல்லும்.

அது சாதாரண வெற்றியாக இருக்காது. மாபெரும் வெற்றியாக இருக்கும் என்றார்.

1999ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது முதல் பாமக இதுவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்ற கணக்கில் அணிகளை மாற்றி வந்துள்ளது.

2001 …

2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக.ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பாமக.

காரணம்: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் அவரை சந்திக்க கோட்டைக்கு சென்றார் ராமதாஸ். முதல்வர் அறைக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவே இல்லை. காரணம் அவர் ஜெயலலிதாவை சந்திக்கப் போனது பாமகவுக்கு ராஜ்யசபா சீட் கோரி. இதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் ராமதாஸ்.அடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து திமுக கூட்டணிக்கு வந்தார்.

2004…

2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது.இந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரானார்.

2006…

2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ்.ஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும்.

2008 …

2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.

2009…

2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஒருமுறை அணி மாறியுள்ளது பாமக. இந்த முறை அதிமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்..

திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளன. காரணம் தேமுதிகவும், பாமகவும் தங்களது நிலையை முடிவு செய்யாததே.இரு கட்சிகளையும் இழுக்க திமுக, அதிமுக ஆகியவை பல வழிகளில் படு தீவிரமாக உள்ளன. ஆனால் கழுவிய நீரில் நழுவிய மீன் போல இரு கட்சிகளும் தங்களது பேரத்தில் பிடிவாதமாக இருப்பதால் இரு கட்சிகளையும் சேர்த்துக் கொள்வதில் திமுக, அதிமுக தரப்பில் குழப்பம் நிலவுகிறது.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் நிலையை இன்று காஞ்சிபுரத்தில் அறிவித்தார். இன்று பிற்பகல் அவர் காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். பெருமளவில் திரண்டிருந்த தேமுதிக தொண்டர்களுக்கு மத்தியில் விஜயகாந்த் பேசினார்.

பலத்த வரவேற்புக்கு மத்தியில் விஜயகாந்த் பேச்சை தொண்டர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். தொண்டர்கள் கடலுக்கு மத்தியில் விஜயகாந்த் பேசுகையில்,

பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கினார். தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், நான் வருகிற 26ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன்.தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்யப் போகிறேன். நான் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளேன். யாருடனும் கூட்டணி சேர மாட்டேன்.

நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு நீங்கள் வாக்களியுங்கள். ஆட்சிக்கு வந்தால் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை கொடுக்க ஏற்பாடு செய்வேன் என்றார் விஜயகாந்த்.தனித்துப் போட்டி என்ற முடிவை விஜயகாந்த் அறிவித்து விட்டதால் அரசியல் களத்தில் நிலவி வந்த பெரும் குழப்பத்திற்கு பெரும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிக முதல் முறையாக மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தில் பல முக்கிய பிரச்னைகள் மத்திய அரசின் மூலமே தீர்க்க வேண்டியுள்ளது. குறிப்பாக, காவிரி நதிநீர் பங்கீடு, பாலாற்று அணை, முல்லைப் பெரியாறு நீர் தேக்கம், ராமேஸ்வரம் மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்னை போன்றவை மத்திய அரசின் மூலமே தீர்க்கப்பட வேண்டும். இதுவரையில் இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. தமிழகத்துக்கென உள்ள தனிப் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையிலும், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், ஊழல் போன்றவற்றைப் போக்கும் வகையிலும் மக்களவைத் தேர்தல் வெற்றியின் மூலம் தேமுதிக முக்கிய கடமையாற்ற வேண்டியுள்ளது என்று அவர் கூறியிருந்தார்.

மத்திய அரசின் மூலமாக மட்டுமே என்ற வார்த்தையை தேமுதிக அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்ததால் கூட்டணிக்கு விஜயகாந்த் தயாராகி விட்டதாக கருதப்பட்டது.ஆனால் மக்களுடன்தான் கூட்டணி என்று விஜயகாந்த் இன்று கூறியுள்ளார். இருப்பினும் நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறியுள்ளது சூசகமாக எதையோ உணர்த்துவது போல உள்ளதாக கருதப்படுகிறது.இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் மறைமுகமாக விஜயகாந்த் ஆதரவு தெரிவிக்கலாம் என்று கருதப்படுகிறது.

வன்னிப் பிரதேசத்தில் பல முனைகளிலிருந்தும் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்தின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.முல்லைத்தீவு மாவட்டத்தில் இரணைப்பாலை செந்தூரன் சிலையடி பகுதியில் புதன்கிழமை இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டளை மையங்களை நோக்கி முன்னகர்ந்த படையினர் மீதும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் மிகக்குறுகிய இடைவெளியில் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.இதேவேளையில் இரணைப்பாலை அமலன் வெதுப்பகச்சந்தி, டயர் கடைச் சந்தி ஆகிய இடங்களில் புதன்கிழமை முன்நகர்வில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் படையினரின் நகர்வு முறியடிக்கப்பட்டது. இதில் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்றனர்.

மந்துவில் சந்தி பகுதியை நோக்கி இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.ராணுவ கமாண்டோக்கள் இந்த முன்நகர்வில் ஈடுபட்டனர். ஆனால் புலிகளின் கடுமையான தாக்குதலால் ஏஅது முறியடிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு சிவன் கோவிலடிக்கு அருகாமையில் நேற்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன. இரண்டு ராணுவத்தினரின் உடல்களையும், படையினரின் ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றினர்.

நன்றி
தட்ஸ் தமிழ்

ிறு‌த்தை மறுத்தது ஏன்?
மாம்பழம்-இலைக் கட்சி கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், ஈழப் பிரச்னையில் தன்னுடன் தோளோடுதோள் நின்று கூட்டாக குரல் கொடுத்து வந்த சிறுத்தைத் தலைவரையும் தன்பக்கம் அழைத்திருக்கிறார் மருத்துவர். ஆனால், அறிவாலயக் கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணமில்லை என அவர் மறுத்துவிட்டாராம்.

ஏற்கனவே ஆளுங்கட்சியின் தொடர் நெருக்கடிகளால் நொந்து போயிருந்த அவரை, தற்போது அறிவாலயத் தரப்பு கவனிக்க வேண்டிய வகையில் கவனித்து திருப்தி செய்து விட்டதாம். முன்பு ’40’ என்று கிண்டலடித்தவர்கள் இம்முறை ’23’ என்று நக்கல் செய்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.

***

‘தாராள நிதி’ பட்டுவாடா!
கூட்டணி பேரத்தில் படிய தயக்கம் காட்டும் கட்சிகளை இழுக்கும் பொறுப்பு, முன்னாள் அமைச்சரான பேரனிடம் ஒப்படைத்திருக்கிறாராம் அவரது தாத்தா.

அந்த வகையில் சிறுத்தைத் தலைவரை தங்கள் கூண்டில் ஏற்ற வேண்டிய பொறுப்பை கச்சிதமாக நடத்தி முடித்துவிட்டாராம், தாராள நிதி கொண்ட அந்த முன்னாள் அமைச்சர். அடுத்து யாரை வளைக்க வேண்டும் என்று தலைவரிடம் கேட்டு, அவரது உத்தரவிற்காகக் காத்திருக்கிறாராம். இதற்கான ‘நிதி’ பட்டுவா செய்யும் பொறுப்பையும் அவரே ஏற்றிருப்பதாகக் கேள்வி.

***

அம்மா போட்ட நிபந்தனை!
தோட்டத்துப் பக்கம் சாய்ந்துவிட்ட மருத்துவருக்கு, அவர் கேட்டபடியே தொகுதிகளை ஒதுக்கித்தர மே(லி)டம் ஒப்புக் கொண்டார்களாம். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாம்.

எதிர் முகாமைச் சேர்ந்த தலித் தலைவர், தில்லையரசனின் ஊரில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து மாம்பழக் கட்சியும் கட்டாயம் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே அம்மாவின் அன்பு உத்தரவாம்.

நன்றி வெப் துனியா…

டெல்லி சென்றுள்ள தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணிச் செயலாளரும் விஜய்காந்தின் மச்சானுமான சுதீஷ் ஆகியோர் அங்கு தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமத் படேல் ஆகிய மூத்த காங்கிரஸ் தலைவர்களை இன்று சந்தித்துப் பேசுவர் என்று தெரிகிறது.திமுக, அதிமுகவை எதி்ர்க்கும் விஜய்காந்துக்கு விழும் வாக்குகளில் பெரும்பாலானவை தனது வாக்குகள் என்று கருதும் காங்கிரஸ், தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட தீவிரமாக உள்ளது.

இது தொடர்பாக விஜய்காந்த் தரப்புடன் மறைமுகமாக பேச்சி நடத்தி வருகிறது.இந் நிலையில் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தங்களது கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையச் செயலாளரை சந்திக்க பண்ருட்டி ராமச்ச்திரனும் சுதீசும் டெல்லி வந்துள்ளனர்.

செயலாளரை சந்தித்து அவர் கோரிக்கையும் வைத்தனர். ஆனால் சின்னம் குறித்து இப்போதே முடிவு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. வரும் 27ம் தேதி இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதால் அங்கு சென்று முறையிடுமாறு ஆணையம் தெரிவித்துவிட்டது.இதைத் தொடர்ந்தும் டெல்லியிலேயே தங்கியுள்ள ராமச்சந்திரன், சுதீசுடன் காங்கிரஸ் தரப்பு சில நபர்கள் மூலம் பேச்சு நடத்தியது. அப்போது தங்களது கட்சிக்கு கோவை, கள்ளக்குறிச்சி, வேலூர், உள்ளிட்ட 8 தொகுதிகளை ஒதுக்கும்படி தேமுதிக தரப்பு கோரியதாகத் தெரிகிறது.

ஆனால், தேமுதிக தரப்பு கோரிய பல தொகுதிகளும் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகள் என்பதால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்தத் தொகுதிகளை விட்டுத் தர இயலாதே என்று காங்கிரஸ் கூறியதையடுத்து அப்படியென்றால் கூட்டணியும் சாத்தியமாகாதே என்று தேமுதிக தரப்பு கூறியதாகத் தெரிகிறது.இதையடுத்து தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டுவிட்டு மற்ற தொகுதிகளில் மட்டும் போட்டியிட முடியுமா என்று தேமுதிகவிடம் காங்கிரஸ் பேச ஆரம்பித்துள்ளது. தான் நிற்கும் தொகுதிகளி்ல் தேமுதிக நிற்காவிட்டால் தனக்கு போட்டி குறையம் என காங்கிரஸ் கருதுகிறது. இதைப் பற்றி யோசிக்க விஜய்காந்த் தயாராக உள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து இன்று மீண்டும் பண்ருட்டி, சுதீசுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தலாம் என்று தெரிகிறது. கூட்டணியா அல்லது காங்கிரசுக்கு சாதமாக போட்டியா என்பது குறித்து இதில் பேசப்படவுள்ளது.இதில் எதுவும் சரிப்படாவிட்டால் தனித்து நிற்கவும் தேமுதிக ரெடி தான் என்கிறார்கள். அதே நேரத்தில் அதிமுகவும் விஜய்காந்துக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் டெல்லியில் பண்ருட்டி ராமச்சந்திரனை நிருபர்கள் சந்தித்தபோது, கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பேசி வருவதால், வரும் 21ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார் என்றார்.காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினீர்களா என்று கேட்டதற்கு, அழைப்பு வந்தது உண்மை. ஆனால், இதுவரை பேச்சு ஏதும் நடக்கவில்லை என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆனார்.

இந் நிலையில் சில தொகுதிகளை விட்டுக் கொடுத்தாவது விஜய்காந்தை கூட்டணிக்குள் எப்படியும் இழுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக சுதீசும் பண்ருட்டியும் நடத்தும் பேச்சுக்கள் முன்னேற்றமடைந்தால் விஜய்காந்தே டெல்லிக்கு விரைந்து சோனியை சந்தித்து கூட்டணியை முடிவு செய்வார் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.இல்லாவிட்டால் குலாம்நபி ஆசாத் சென்னை வந்து காங்கிரஸ்-தேமுதிக தொகுதி பங்கீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவின் கோட்டை போல திகழ்ந்த தென் மாவட்டங்கள் பக்கம் ஜெயலலிதா தனது கவனத்தை தீவிரமாக திருப்புகிறார். இந்த முறை தென் மாவட்டங்களில் அதிக அளவில் போட்டியிட்டு அவற்றை அதிமுகவின் கோட்டை என நிரூபிக்க அவர் உறுதியுடன் இருக்கிறார்.எம்.ஜி.ஆருக்கு ஆரம்ப காலத்திலிருந்தே கை கொடுத்த தெய்வங்களாக இருந்தவை தென் மாவட்டங்கள்தான். அவர் நடிகராக இருந்தபோதும் சரி, பின்னர் அதிமுகவைத் தொடங்கிய பின்னரும் சரி, தென் மாவட்டங்கள் அதிமுகவின் எஃகுக் கோட்டையாக திகழந்தன.திண்டுக்கல் தொகுதியில் நடந்த இடைத் தேர்தல்தான் அதிமுகவின் முதல் வெற்றிக்குப் பிள்ளையார் சுழி போட்டதாகும். அங்கு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மாயத் தேவர்.

எனவே தென் மாவட்டங்கள் மீது எம்.ஜி.ஆரும் தனிப் பாசத்துடன் இருந்தார். அதேசமயம், வட மாவட்டங்கள், குறிப்பாக சென்னை உள்ளிட்டவை திமுகவுக்கு கோட்டை போல இருந்தன.ஆனால் இந்த நிலை கடந்த சில வருடங்களாக மாறிப் போய் விட்டது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்கள்தான் அதிமுகவை கடுமையாக கவிழ்த்து விட்டன. மாறாக சென்னையின் பல தொகுதிகளை அதிமுக கைப்பற்றி, திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.இந்த நிலையில் மீண்டும் தென் மாவட்டங்கள் பக்கம் தனது தீவிர கவனத்தை ஜெயலலிதா செலுத்தியிருப்பதாக தெரிகிறது.

இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன ..

இலங்கைப் பிரச்சினை. இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழகத்தின் வட பகுதிகளை விட தென் மாவட்டங்களில்தான் ஈழத் தமிழர்கள் மீதான அனுதாபம் அதிகம் உள்ளது. இப்பகுதிகளில் பெருமளவில் போராட்டங்கள் நடந்துள்ளதை இது காட்டுகிறது.

மேலும், காங்கிரஸ் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் கைகழுவும் வகையில் நடந்து கொண்டது தென் மாவட்டங்களில்தான் அதிக அளவிலான கண்டனத்தை ஈர்த்துள்ளது.இலங்கைக்கு அருகில் உள்ள பகுதிகள் என்ற அடிப்படையிலும், ஆரம்பத்திலிருந்தே ஈழப் பிரச்சினையில் தென் தமிழக மக்கள் அதீத பாசத்துடன் இருந்து வருவதாலும், காங்கிரஸ் மீது இந்தப் பகுதிகளில் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும், கோபமும் காணப்படுகிறது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதா நினைப்பதாக தெரிகிறது. எனவே இந்தப் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்யும்போது இலங்கைப் பிரச்சினையை பெரிதாக கிளப்புவார் எனத் தெரிகிறது.அடுத்து, திமுக கூட்டணியின் வடிவம். திமுக கூட்டணியில் பாமக சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து விட்டது. ஒரு வேளை பாமக திமுக அணியில் இணைந்தால், வட மாவட்டங்களில் திமுக கூட்டணி பலமாகி விடும்.

பாமகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தென் பகுதிகளில் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. அங்கு புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி தலித் வாக்குகளைப் பிரிக்கக் கூடிய நிலையில் உள்ளார். அவர் தற்போது அதிமுக அணியில் இடம் பெற தீவிரமாக உள்ளார். ஜெயலலிதா நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் அவர் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே பாமக, விடுதலைச் சிறுத்தைகள் திமுக அணியில் இடம் பெற்றிருப்பதால், வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களி்ல் அதிக கவனம் செலுத்தினால் லாபம் அதிகம் என்பது ஜெயலலிதாவின் கணக்கு.

மேலும் தென் மாவட்டங்களில் உள்ள எம்.ஜி.ஆர். வாக்கு வங்கி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. பலர் விஜயகாந்த் பக்கம் திரும்பியுள்ளனர். இருப்பினும் முற்றிலும் அது அதிமுகவுக்குப் பாதமாக மாறி விடவில்லை. ஒரு வேளை விஜயகாந்த் அதிமுக பக்கம் வந்தால் நிச்சயம் தென் மாவட்டங்கள் மீண்டும் அதிமுக கோட்டையாகும் என்றும் நினைக்கிறார் ஜெயலலிதா.தென் மாவட்டங்களில்தான் அதிமுகவுக்கு அதிக சீட்கள் கிடைக்கும் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசின் உளவுப் பிரிவு தகவல்கள் கூறுகிறதாம்.எனவே கடந்த முறையை விட இந்த முறை கூடுதலான இடங்களில் தென் மாவட்டங்களி்ல அதிமுக போட்டியிடலாம்.

கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழகத்தின் வடக்கு, மேற்கு அல்லது மத்தியப் பகுதிகளி்ல் அதிக சீட்களை ஒதுக்கி விட்டு தென் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளி்ல அதிமுக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.மதுரை உள்ளிட்ட சில கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளையும் கூட அதிமுகவே எடுத்துக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அதிமுக இப்படிக் கணக்குப் போடும் என்று எதிர்பார்த்துத்தான் மு.க.அழகிரியை தென் மண்டல அமைப்புச் செயலாளராக ஏற்கனவே நியமித்துள்ளார் கருணாநிதி. மேலும், அவர் மதுரையில் போட்டியிடக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அழகிரி தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் அவரது ஆதரவாளர்கள், மதுரையில் மட்டுமல்லாது தென் மாவட்டங்கள் முழுவதிலும் திமுக அணியை வெற்றி பெற வைக்க உயிரைக் கொடுத்து உழைப்பார்கள் என்பது உறுதி.எனவே திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இந்தத் தொகுதிகளைக் கைப்பற்றுவதில் கிட்டத்தட்ட போரே நடைபெறும் சூழ்நிலை காணப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தப்பி ஓடவில்லை. அவர் வன்னியில் பதுங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.போர் முற்றி, பல பகுதிகளை ராணுவம் பிடித்து விட்டதால் மலேசியாவுக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ பிரபாகரன் தப்பிப் போயிருக்கலாம் என இலங்கை மீடியாக்கள் சில செய்தி வெளியிட்டன.

ஆனால் பிரபாகரன் தப்பவில்லை. அவர் வன்னிப் பகுதியிலேயே பதுங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், பிரபாகரன் வன்னிப் பகுதியில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.பிரபாகரன் அப்பகுதியில் இருப்பதால்தான் புலிகள் கடும் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம்.தற்போது விடுதலைப் புலிகள் வசம் 35 சுதர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியே உள்ளது. இந்த பகுதியில்தான் பிரபாகரன் பதுங்கியிருக்கக் கூடும்.

புதுக்குடியிருப்பைச் சுற்றிலும் கடும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இது எத்தனை நாள் நீடிக்கும், எப்போது புதுக்குடியிருப்பு வீழும் என்று தெரியவில்லை (முன்னதாக புதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டதாக இரண்டு முறை ராணுவம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது).கடந்த வாரம் புதுக்குடியிருப்பில் உள்ள புலிகளின் மருத்துவமனை பிடிபட்டது. அங்கிருந்த புலிகளின் காவல் நிலையமும் பிடிக்கப்பட்டது என்றார் நாணயக்காரா.இதற்கிடையே, ராணுவத்திடம் உயிருடன் பிடிபடுவதில்லை என்று பிரபாகரன் உறுதி எடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலிய வானொலிக்கு அளித்த விடுதலைப் புலிகள் இயக்க செய்தித் தொடர்பாளர் திலீபனும், பிரபாகரன் எங்கும் ஓடவில்லை. போர் முனையில்தான் இருக்கிறார். அவருடன் அவரது குடும்பத்தினரும் இருக்கிறார்கள். அனைவரும் வீரர்களுடன் சேர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் போரில் தமிழ் மக்களை‌ப் படுகொலை செய்து வரு‌ம் இலங்கை அரசு‌க்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய நாடுகள் அவை‌யின் மனித உரிமைகளுக்கான ஆணையர் கலாநிதி நவநீதம் பிள்ளை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெனீவாவில் நேற்று கலாநிதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்குள் ராணுவம் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறது. பொது மக்கள் தங்கியுள்ள இடங்கள் மீதும் குண்டுகளை வீசி வருகின்றது.அப்பாவி‌த் தமிழர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பிடித்து வைத்திருப்பதாகவும், தப்பிச் செல்ல முயற்சிப்பவர்களை சுட்டுக் கொல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்கள் சிறுவர்களை பலாத்காரமாக இயக்கத்தில் சேர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இத்தகைய செயல்கள், ச‌ர்வதேச மனித உரிமை, மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானவை. இவை போர் குற்றங்களாகவும் கருதப்படும்.நட‌ந்து வரும் மோதல்களில் கடந்த ஜனவரி 20 ஆம் தே‌தி‌யில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 800 அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். 7 ஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட்டோ‌ர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு வளய பகுதிக்குள் இருந்தவர்கள் ஆவர். நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பலியாகி உள்ளனர். இவ்வளவு குழந்தைகள் பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.இதே ரீதியில் போர் நீடித்தால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை பேரழிவு நிலைக்கு சென்று விடும் என்று அஞ்சுகின்றோம். உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடும், மனிதாபிமான சூழ்நிலையை மேலும் சீர்குலைத்து விடும்.

எனவே, அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளும் தாக்குதலை நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் அவையும் இதர த‌ன்னா‌ர்வ அமைப்புக்களும் நிலைமையை கண்டறிய அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலைக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசுதான் காரணம் எ‌ன்று பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி கு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றியுள்ளா‌‌ர்.

பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரம், இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்கியது.நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எல்.கே.அத்வானி பேசியதாவது:
இலங்கையில் வாழும் தமிழர்கள், மலேசியாவில் வாழும் தமிழர்கள் தொடர்பாக கவலைப்படும் தமிழக மக்களை நான் பாராட்டுகின்றேன்.இலங்கையில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம்.அவர்களை பாதுகாக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, தமிழகத்தில் உள்ள மக்கள் இலங்கையில் கொல்லப்படும் தங்கள் சகோதரர்களுக்காக படும் வேதனைகளை, கவலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.பாகிஸ்தானில் இருந்து வருகிற பயங்கரவாதமானாலும் சரி, வங்காளதேசத்தில் இருந்து வரும் தீவிரவாதமாக இருந்தாலும் சரி, இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படும் பிரச்சனையாக இருந்தாலும் சரி இவை அனைத்திலும் காங்கிரஸ் அரசு நிர்வாகம் தோற்றுப்போய்விட்டது.

எனவே, முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமர் கையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் ‌நினை‌த்தா‌ல், வருகிற தேர்தலில் பா.ஜனதா‌வி‌ற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அத்வானி.

இலங்கையில் இயங்கும் பிரபல தமிழ் புத்தகக் கடைகளின் உரிமையாளரும் விகடன் விற்பனைப் பிரதிநிதியுமான ஸ்ரீதர்சிங் நேற்று இலங்கை போலீசாரால் திடீரெனக் கைது செய்யப்பட்டார்.விடுகலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி மற்றும் அவர் தலைமையில் இயங்கும் புலிகளின் விமானப் படை, அது சமீபத்தில் கொழும்பில் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்த செய்திகள் ஆனந்த விகடனில் விரிவாக வெளியாகியுள்ளது.

இந்த இதழ்களை அவர் விற்பனை செய்ததால் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்கிசை காவல் நிலையத்தில் அவரை அடைத்துவைத்துள்ளனர்.கொழும்பில் பத்திரிக்கையாளர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறை கையாளப்பட்டு வருகிறது. பல பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் பந்தாடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பத்திரிக்கை விற்பனையாளர்களையும் இலங்கை போலீஸார் குறி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆனந்த விகடன்’ வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ள ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான கட்டுக்களை இரத்மலானை விமான நிலையத்திற்கு அனுப்பியபோது, அதனை சோதனையிட்ட காவல்துறையினர், அதில் பிரசுரமாகியிருந்த வான் தாக்குதல் குறித்த கட்டுரைகள் மற்றும் படங்கள் இருப்பதைக் கண்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.பின்னர், வியாழக்கிழமை மாலை விகடன் கொழும்பு விற்பனைப் பிரதிநிதியான ஸ்ரீதர்சிங்கின் வெள்ளவத்தை வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் கல்கிசை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றதாக ஸ்ரீதர்சிங்கின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

நன்றி தட்ஸ் தமிழ்..

கடந்த 30 ஆண்டுகளுக்கும் ‘ஆனந்த விகடன்’ வார இதழை ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலை தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

1981 ஆம் ஆண்டு ஆவணி மாதம் யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், யாழ். பொது நூல் நிலையம் ஆகியவை சிங்கள காடையர்களாலும் படையினராலும் திட்டமிடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டபோது யாழ். நகரின் மத்தியில் இருந்த ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலையும் பெருந்தொகையான நூல்களுடன் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது

நன்றி தட்ஸ் தமிழ்…….

 

இலங்கையின் வன்னி பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் உக்கிரமான சண்டையில் 900 சிங்களப் படையினர்  கொல்லப் பட்டதாக விடுதலைப்புலிகளின்  செய்தி தெரிவிக்கிறது.  மேலும் 2000 பேர் காயமடைந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரை  கைப்பற்ற  இலங்கைப்படையினர் 6வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  விடுதலைப்புலிகள் ராணுவத்தை எதிர்த்து கடும் சண்டையிட்டு வருவதால் ராணுவத்தின் முன்நகர்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக இருதரப்பின ருக்கும் இடையே நடந்த சண்டையில்,  900  இலங்கைப்படை யினர் கொல்லப்பட்டதாகவும், 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் புதினம் செய்தி  கூறுகிறது. விடுதலைப்புலிகள் கடும் எதிர் தாக்குதலை நடத்தி வருவதால் சிங்கள ராணுவம் தொடர்ந்து முன்னேற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே முல்லைத்தீவு பகுதியில் குண்டுவீச வந்த இலங்கை விமானப்படையின் போர் விமானம் திடீரென நடுவானில் வெடித்து சிதறியது.  முல்லைத்தீவு பகுதியில் இரானாய்ப் பாளை என்னுமிடத்தில் குண்டுவீச அந்த விமானம் வந்த போது,  திடீரென பெரும் தீப்பிழம்புடன் வெடித்துசிதறி  தரையில் விழுந்ததை அப்பகுதியில் உள்ள மக்கள் கண்டனர். இந்த விமானம் தானாக வெடித்து சிதறியதா? அல்லது  விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது குறித்த உறுதியான தகவல்  என்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.  இதனிடையே  வன்னி பகுதியில் உணவு, குடிதண்ணீர், மருத்துவ வசதிகள்  அடியோடு இல்லாத காரணத்தால் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பால் இல்லாமல் வதைபடும் நிலையில் உள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

வன்னிபகுதியில் உள்ள பாதுகாப்பு வளையத்தில் குடிக்க கூட தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. உணவு மற்றும் மருந்து கிடைக்காத தால் அங்கே தங்கியுள்ள மக்களும், குழந்தைகளும்,  வாந்தி, பேதி,  அம்மை நோய், வைரஸ் காய்ச்சல் போன்ற கடுமையான வியாதிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக மருந்து கடைகளில் எந்த மருந்தும் கிடைக்கவில்லை என செய்திகள்  தெரிவிக்கின்றன. அவ்வாறு ஏதாவது மாத்திரைகள் கிடைத்தாலும், ஒரு மாத்திரைக்கு ஆயிரம் ரூபாய் கேட்கும் அவலமும் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக வந்த கப்பல்களில் சிறிதளவே உணவு வந்ததாக கூறப்படுகிறது.  கடந்த புதன்கிழமை 17 டன் மாவு மட்டும் வந்துள்ளது. அங்கு தங்கியுள்ள 17,000 குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ மாவு, 50 கிராம் சர்க்கரை, 50 கிராம் பருப்பு வீதம் ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. காய்கறி எதுவும் கிடைக்கவில்லை என்றும், இந்த உணவு பொருட்களை வாங்க  நீண்ட வரிசைகளில் காத்திருந்த பெண்கள் சிலர் உணவு பற்றாக்குறையால் மயக்கமடைந்து விழுந்ததாக அந்த செய்திகள் கூறுகின்றன. பரிசோதனை வசதி எதுவும் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகும் அவலமும் உள்ளதாக கூறப்படுகிறது.

cartoon_300

அய்யா காங்கிரசுக்காரங்களே சுப்பிரமணியசாமிய எதித்தாவது ஒரு அறிக்கை கொடுங்க… இல்லனா நீங்க தமிழ்நாட்டுல இருக்கீங்களா? இல்லையான்னு ஒரு சந்தேகம் வந்திடும்

நன்றி குமுதம்.காம்

புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த 3 நாட்களில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 1,000 ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரம் விடுதலை புலிகளின் கைவசம் உள்ளது. இதை கைப்பற்ற இலங்கை ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருகின்றனர். இருந்தாலும் புலிகள் அவர்களை எதிர்த்து கடுமையாக போரிட்டு வருகின்றனர்.

இலங்கை ராணுவத்தின் 53வது, 58வது, 59வது படைப் பிரிவுகளும் மற்றும் இரண்டு சிறப்பு படைப்பிரிவு என மொத்தம் ஐந்து பிரிவுகள் இந்நகரில் ஐந்து முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.புதுக்குடியிருப்பு நகரைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளபோதிலும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அங்கு விடுதலை புலிகள் அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுமார் 1000 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் படுகாயம் அடைந்துவிட்டதாகவும் விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நடந்த ராணுவத் தாக்குதலில் 21 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.மாத்தளன் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று காலை 5 மணியளவில் சிறிலங்கா படையினர் பீரங்கி தாக்குதலை நடத்தினர்.

இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.இத்தாக்குதலின் போது மருத்துவமனையின் சுவர் மற்றும் கூரை ஆகியவை சேதமடைந்தன. சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று பிற்பகல் சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

யாருடைய உத்தரவின்பேரில் போலீசார் உயர்நீதிமன்றத்திற்குள் புகுந்து, வழக்கறிஞர்களை தாக்கினார்க்ள் என்பது குறித்து 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், போலீஸாருக்குமிடையே ஏற்பட்ட வன்முறைக்கான காரணம் குறித்து நீதி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடக்கோரியும், தமிழகத்தில் அரசு எந்திரம் செயலிழந்துவிட்டதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக ச‌ட்டப்பேரவை உறு‌ப்‌பினருமான டி.ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உ‌ச்ச ‌நீ‌தி‌ம‌ன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம் ஆகியோர் கொண்ட அம‌ர்வு, சென்னை உயர் நீதிமன்ற மோதல் சம்பவம் மிகவும் தீவிரமானதும், துயரமானதுமாகும் என்று கூறியது.

யாருடைய உத்தரவின்பேரில் போலீசார் உயர்நீதிமன்றத்திற்குள் புகுந்து, வழக்கறிஞர்களை தாக்கினார்க்ள் என்பது குறித்து 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்த முறையான ஆணையை நாளை பிறப்பிப்பதாகவும் தெரிவித்தனர். விசாரணைக் குழுவில் யார் யார் இடம்பெறுவது என்பது குறித்து தமிழக அரசு மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்களுடன் ஆலோசித்த பின்னர் நாளை விசாரணைக் கமிட்டி அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

உயர்நீதிமன்ற வன்முறை சம்பவம் மிஅவும் தீவிரமானது.இந்த மோதலில் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சொத்துக்களுக்கும் ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளது.நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் வாகனங்கள் சேதமடைந்துள்ளனர்.அவற்றை பழுதுபார்ப்பதற்காக தமிழக அரசு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும். மேலும் வன்முறையில் காயமடைந்த வழக்கறிஞர்களுக்கான சிகிச்சை செலவையும் தமிழக அரசே ஏற்கவேண்டும்.

நீதிமன்ற வளாகத்தில் எந்த ஒரு காவல் நிலையம் இருப்பதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது.உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் காவல் நிலையம் அகற்றப்பட வேண்டும். நீதிமன்ற வன்முறைக்கு காரணமான குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தங்களது பணியை தொடங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் மேலும் தெரிவித்தனர்.

முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்னாள் திமுக எம்.எல்.ஏவுமான ராஜ.கண்ணப்பன் திமுகவை விட்டு விலகி விட்டார். தனது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். மீண்டும் அவர் அதிமுகவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக திகழ்ந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார் கண்ணப்ன்.ஜெயலலிதாவுக்கு அடுத்து சக்தி வாய்ந்த தலைவராக விளங்கினார். 1996-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில் கட்சியை தொடர்ந்து நடத்த முடியாமல் மீண்டும் அதிமுகவில் சேர விரும்பினார். ஆனால் ஜெயலலிதா அதற்குப் பச்சைக் கொடி காட்டவில்லை. இதையடுத்து 2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.பின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார். 2006ம் ஆண்டு இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அமைச்சர் பதவி தனக்குக் கிடைக்கும் என ஆவலோடு இருந்தார். ஆனால் அமைச்சர் பதவி அவருக்குக் கிட்டவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வந்தார் கண்ணப்பன்.

மேலும் இனியும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்குப் போய் விட்டது. இதனால் தான் சிரமப்பட்டு திரட்டி வைத்துள்ள யாதவ சமூகத்தினரின் நம்பிக்கையை இனியும் வீணடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த கண்ணப்பன் திமுகவிலிருந்து விலக முடிவு செய்து இன்று தனது முடிவை அறிவித்தார். எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்து விட்டார்.
மீண்டும் அதிமுகவில் இணைய ராஜ கண்ணப்பன் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக நேற்று யாதவ சமூகத் தலைவர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அதிமுகவி்ல் இணைவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.தமிழகத்தின் தென் மாவட்டங்களில் யாதவ சமுதாயத்தினர் பெருமளவில் உள்ளனர். இங்கு கண்ணப்பனுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. யாதவ சமுதாயத்தினர் கண்ணப்பனை திடமான தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முயன்று பார்த்தும் முடியாத நிலையில் கண்ணப்பனால் மட்டுமே யாதவ சமுதாயத்தினரை ஓரணியில் திரட்ட முடிந்தது.

கிட்டத்தட்ட 10 தென் மாவட்ட தொகுதிகளில் கண்ணப்பனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இங்கு கண்ணப்பன் கை காட்டுவோருக்கே வாக்குகள் விழக் கூடிய நிலை. இந்தத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவில் யாதவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. தென் மாவட்டங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு கை கொடுக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமே அதிமுகவைக் காப்பாற்றியது.எனவே கண்ணப்பனின் விலகல் திமுகவுக்கு நிச்சயம் சற்று பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

யாதவ சமுதாயத்திலிருந்து இதுவரை எந்த வலுவான தலைவரும் இல்லை – கண்ணப்பனைத் தவிர என்பதால், அவரும் விலகியிருப்பது யாதவ சமுதாயத்தினரின் வாக்குகளை இடம் மாற்றும் என்றும் நம்பப்படுகிறது.மேலும் கண்ணப்பன் திறமையான பீல்டு ஒர்க்கர். களப்பணியாற்றுவதில் திறமையானவர். திட்டமிட்டு நேர்த்தியாக செய்து முடிப்பவர். காசு, பணம் பார்க்காமல் செலவழிக்கக் கூடியவர். அந்த அடிப்படையில்தான் கண்ணப்பனை தனது முதலாவது ஆட்சிக்காலத்தில், ஜெயலலிதா முக்கியப் பொறுப்புகளை கொடுத்து வைத்திருந்தார்.

தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கண்ணப்பன் போன்ற திறமையான உழைப்பாளிகள் அருகில் இருந்தால் நலமாக இருக்கும், உறுதுணையாக இருக்கும் என்பதால் அவரை நிச்சயம் ஜெயலலிதா சேர்த்துக் கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கண்ணப்பனுக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்தால் அவர் மேலும் ஊக்கத்துடன் செயல்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.கண்ணப்பனின் விலகலால் அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

கொழும்பில் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி உயிரிழந்த வான் கரும்புலி, ‘இலங்கை தமிழர்களும், விடுதலைப்புலிகளும் வேறுவேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம்’ என்று உலகத்தமிழர்களுக்கு உருக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு  விடுதலைப்புலிகளின் 2 சிறிய  விமானங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை வெற்றி கரமாக மேற்கொண்ட வான் கரும் புலிகள்   ரூபன் மற்றும் சிறித்திரன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்பாக புலிகள் தலைவர் பிரபாகரனுடன் அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியானது. இவர்களில் வான் கரும்புலி ரூபன்  உலகத்தமிழர் களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், ‘விடுதலைப்புலி களும் இலங்கை தமிழர்களும் வேறு வேறு அல்ல. இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்துவது  ஒரு மக்கள் போராட்டம். இதனை உலகத்திற்கு எடுத்துக்கூறுங்கள்’  என்று உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இலங்கையில் தினம் தினம் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அதிலும் கொடுமை இறந்தவர்களைக் கூட எடுத்து அடக்கம் செய்ய முடிய வில்லை. மருந்தில்லை. உண வில்லை. உடையில்லை. வீடு, வாசல் இல்லை. இவ்வளவு கொடுமை களையும் இலங்கை ராணுவமும், அரசும் செய்கின்றது.

 வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து  தமிழினத்தை இலங்கை அரசு அழித்து வருவதாகவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும்  ஒன்று சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல, உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழர்களுக்கென்று தனியாக தமிழீழ நாட்டை உருவாக்க விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதற்காக விடுதலைப்புலிகள் நடத்தும் போராட்டத்திற்கு இலங்கை யில் உள்ள தமிழர்களும், தமிழகத் தலைவர்களும், உலகத் தமிழர்களும் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நன்றி மாலைச்சுடர்

முல்லைத்தீவு பகுதியில் 100  சதுர கி.மீ. எல்லையில் புலிகள் சுற்றிவளைக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறிவரும் நிலையில், விடுதலைப்புலிகள் விமானத்தின் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தி இலங்கை ராணுவத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். வான் புலிகள் பிரிவைச் சேர்ந்த கரும்புலிகள் தற்கொலைப்படை வீரர்கள்    இந்த அதிரடி தாக்குதலை நடத்தியதாக புலிகள் அறிவித்துள்ளனர்.

.

கொழும்புவில் உள்ள வான் படைத்தளம் மற்றும் காட்டுநாயகா வில் உள்ள வான்படை தளத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 பேருக்கு மேல் படுகாயமடைந்ததாக வும் புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.வான் தாக்குதலில் ஈடுபட்ட 2 விமானங்களையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் ராணுவம் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய ராணுவம், முல்லைத்தீவில் புலிகளை சுற்றவளைத்துள்ளது.  100 சதுர கி.மீ. எல்லைக்குள் மட்டுமே விடுதலைப்புலிகள் இருப்பதாகவும் இலங்கை ராணுவம் கூறி வருகிறது. விடுதலைப்புலிகள் வான் தாக்குதலுக்காக பயன்படுத்தி வந்த விமான ஓடுபாதைகளையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் நேற்றிரவு கொழும்பு நகரில் விமானங்களின் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். கொழும்புவில் உள்ள வான்படை தளம் மற்றும் காட்டுநாயக்காவில் உள்ள வான்படை தளங்களின் மீதுவான்புலிகளின் கரும்புலிகள் நேற்றிரவு 9.30 மணியளவில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.புத்தளம் பகுதி வழியாக சென்று, அதிகபட்ச பாதுகாப்பை கொண்ட பகுதியில் நுழைந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது விமானங்கள் உள்ளே வருவதை வானூர்தி எதிர்ப்பு முறையை கொண்டு இலங்கை ராணுவம்  கண்டுபிடித்து பதில் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் உடனடியாக கொழும்பு நகர் முழுவதும் மின்தடை அமல் செய்யப்பட்டு, நகரமே இருளில் மூழ்கியது.  விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மூலம் பதில் தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர். 50 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்  இலங்கை விமானப்படையைச் சேர்ந்தவர்கள் என்று விடுதலைப்புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புலிகளின் இந்த திடீர் தாக்குதல் இலங்கை ராணுவத்தை   அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடைசியாக விடுதலைப்புலிகள் கடந்த அக்டோபர் மாதம் வான் தாக்குதல் நடத்தினர். அதன் பிறகு புலிகள் பெரும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், நேற்று இந்த வான் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.  மேலும் விடுதலைப்புலிகளின் விமான ஓடுபாதைகளை கைப்பற்றி விட்டதாக ராணுவம் அறிவித்த நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கொழும்புவில் உள்ள வான்படை தலைமையகம் மற்றும் காட்டுநாயகா வான்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விடுதலைப்புலிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதியில் உள்ள அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் இந்த 2 தளங்களைச் சேர்ந்த விமானங்களே ஈடுபட்டதாக  புலிகள் தெரிவித்துள்ளனர்.
கரும்புலிகள் தற்கொலை படை வீரர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக, இதில் ஈடுபட்ட 2 கரும்புலிகள் ரூபன் மற்றும் சிரித்திரன் ஆகியோர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து வாழ்த்து பெற்று  சென்றுள்ளனர். இவர்கள் ஏற்கனவே நீலப்புலிகள் விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  தாக்குதலில் இந்த இருவரும் வீர மரணம் அடைந்து விட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இலங்கை ராணுவம், தாக்குதலில் ஈடுபட்ட புலிகள் விமானத்தை பதில் தாக்குதல் நடத்தி வீழ்த்திவிட்டதாக அறிவித்துள்ளது.  கொழும் நகருக்குள் பிரவேசித்த இந்த 2 விமானங்களையும் உரிய நேரத்தில் கண்டறிந்து பதில் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒரு விமானம் வருமானவரி அலுவலகம் அருகே மோதி, தீப்பிடித்து எரிந்ததாக ராணுவத்தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல மற்றொரு விமானம் காட்டு நாயகா  ராணுவ தளம் அருகே சுட்டு வீழ்த்தப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ராணுவ தளம் அருகே பலத்த வெடி சத்தம் கேட்டதாக பொது மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்ததாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. விடுதலைப்புலி களின் இந்த துணிகர தாக்குதல் இலங்கை முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் நான் பேசுவதை நிறுத்த மாட்டேன்.தமிழீழ விடுதலை கிட்டும் வரை தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பேன் என்று திரைப்பட இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்; அவர்கள் விடுதலை பெற வேண்டும் என்ற எழுச்சி தமிழகத்தில் எழுந்துள்ளது. இது அடங்காது. நான் உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் எழுச்சி பெருகத்தான் செய்யும்.

எதற்காக சீமான் கைது செய்யப்பட்டான்? ஏன் சிறையில் அடைக்கப்பட்டான் என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் எழும். அதற்கு விடை தேடுவார்கள். அதுவே எழுச்சியாக மாறும். என் இனத்தைக் காப்பாற்றக் குரல் கொடுக்கிறேன். ஆனால் நான் பேசுவது சிலருக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இவன் பேசினால்தானே எழுச்சி ஏற்படுகிறது என்று எனது குரலை ஒடுக்க நினைக்கிறார்கள்.அதனால் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கிறார்கள். நான் பேசினால் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்று இளைஞர்களும், மக்களும் கூடுகின்றனர். அது சிலருக்குப் பிடிக்கவில்லை. என்னை சிறைப்படுத்துகின்றனர்.

தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை அரசியல் ரீதியாக கொண்டு செல்லலாம் என்று தமிழறிஞர்கள் பலரும் கூறுகின்றனர். ஆனால் தேர்தல் அரசியல் சரிப்பட்டு வராது. அது சில இடங்களுக்காக கூட்டணிக் கட்சிகளிடம் பேசுவது என்றெல்லாம் இருக்கும். இந்த எழுச்சி ஒரே நோக்கத்தை மட்டுமே கொண்டது. அது தமிழீழத்தின் விடுதலை.ஆனா‌ல், ஒ‌ன்று ‌நி‌ச்சய‌ம். இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சிதான் தேர்தல் களத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். ஈழத் தமிழினத்திற்கு ஆதரவான கட்சிகளே வெற்றி பெறும். எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் நான் பேசுவதை நிறுத்தப் போவதில்லை. தமிழீழ விடுதலை கிட்டும் வரை நான் பேசுவேன், பேசிக் கொண்டே இருப்பேன்.

இவ்வாறு சீமான் கூறினார்.

வ‌ன்‌னி‌யி‌ல இரு‌ந்து வெ‌ளியே‌றி வவு‌னியா‌வி‌‌ற்கு வரு‌ம் த‌மிழ‌ர்க‌ளி‌ல் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்க‌ப் படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக “புதினம்” செய்தி தெரிவிக்கிறது.

தனது உயிராபத்தைக் கருத்தில் கொண்டு தனது பெயரை வெளியிட வேண்டாம் என வேண்டிக்கொண்ட – வவுனியா மருத்துவமனையில் உயர் பொறுப்பு வகிக்கும் மருத்துவ அதிகாரி ஒருவர், இந்த அதிர்ச்சித் தகவலை சனிக்கிழமை இரவு தனது செய்தியாளரிடம் தெரிவித்தார் எ‌ன்று ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ஆதரவு இணைய‌த் தளமான பு‌தின‌ம் கூறு‌கிறது.ஏற்கெனவே போரினால் அவலப்பட்டு வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்க‌ள், கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றி கருக்கலைப்புக்கு உடன்பட வைக்கப்படுவதாக மரு‌த்துவ அ‌திகா‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.சில பெண்கள், சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதி விண்ணப்ப படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைக்கப்பட்ட பின்பு கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.

நிம்மதி இல்லாமையாலும், நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதாலும், ஏமாற்றப்பட்டதாலும் பல பெண்கள் ஏற்கெனவே கருக்கலைப்பு செய்து கொண்டு விட்டதாக அந்த மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
சிறிலங்க அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில், சிறிலங்க‌ப் படை அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு உட்பட்டு செய‌ல்பட வேண்டியிருப்பதால் – தமிழர்களாக இருந்துகொண்டே இளம் தமிழ் சந்ததி ஒன்றை அழிக்கும் வேலைக்கு துணை போக வேண்டி இருப்பதாக வவுனியா மருத்துமனை தமிழ் மருத்துவ அதிகாரிகள் பலர் வேதனைப்படுவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மருத்துவ அதிகாரி “புதினம்” செய்தியாளரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த மகனான சார்ல்ஸ் அந்தோணி தலைமையி்ல தற்போது வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் சண்டையிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிரபாகரன் வன்னிப் பகுதியில்தான் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவத்திடம் சரணடைந்ததாக கூறப்படும் இரு தற்கொலைப் படை விடுதலைப் புலிகள் இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழ் கூறுகிறது.

இவர்கள் இருவரும் ஜனவரி 28ம் தேதி தெருமுரிகண்டி என்ற இடத்தில் ராணுவத்திடம் சரணடைந்தனராம். இரணமடு குள அணைக்கட்டை தகர்க்க முயன்றபோது ராணுவத்தினரிடம் சிக்கியதால் சரணடைந்தார்களாம்.இருவரும் சண்டே அப்சர்வருக்கு அளித்துள்ள பேட்டியில், விடுதலைப் புலிகள் தற்போது சார்ல்ஸ் அந்தோணி தலைமையில் போரிட்டு வருகின்றனர். புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களான பானு, லட்சுமணன் ஆகியோருடன் இணைந்து சார்ல்ஸ் அந்தோணி செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

2006ம் ஆண்டு அயர்லாந்திருந்து இலங்கை திரும்பினார் சார்ல்ஸ் அந்தோணி. ஏரோநாட்டிகல் என்ஜீனியரிங் படித்துள்ளார் சார்ல்ஸ். புலிகள் அமைப்பின் விமானப் பிரிவுக்கும், கம்ப்யூட்டர் பிரிவுக்கும் அவர் தான் தலைவராக உள்ளார்.சார்ல்ஸ் அந்தோணிதான் புலிகள் அமைப்பின் விமானப்படையை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே விமானப்படையை கொண்டிருக்கும் ஒரே போராளி இயக்கம் எல்டிடிஇ மட்டுமே.2007ம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை புலிகள் தங்களது விமானம் மூலம் தாக்கி உலக நாடுகளை அதிர வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.

இலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது இந்தியாவில் அந்த நாட்டு தூதரகம் இருக்க வேண்டுமா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை தூதரகத்தை மூடா விட்டால் அடுத்த மாதம்  மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். இலங்கை தமிழர்களுக்காக எம்ஜிஆர் கருப்புச் சட்டை அணிய சொன்னபோது, கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்தாரா? இன்று எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறுகிறார். அப்போது அவர் ஏன் அந்த ஒற்றுமையை காட்டவில்லை.

இலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது மத்திய அரசும், சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று பேசு கிறார்கள். இலங்கை அரசு கத்தி வைத்துள்ளது. புலிகளிடம் கேடயம் தான் உள்ளது. அதை வைத்து இலங்கையின் போரை புலிகள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் கேடயத்தை போடு என்று சொன்னால் கத்தி வைத்திருப்பவன் சும்மா இருப்பானா?இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒட்டு மொத்த உணர்வையும் காட்ட மிகப் பெரிய போராட்டம் தேவை. இதில் ஐ.நா. சபையும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தலையிட வேண்டும். அவர்களுக்கு தமிழர்கள் அனைவரும் தந்திகளும், எஸ்எம்எஸ்சும் அனுப்ப வேண்டும். இரண்டு நாளில் நான் அதற்கான முகவரியை தருவேன்.வரும் 21ந் தேதி இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒபாமா தலையிட வேண்டும் என்று கோரி அமெரிக்க தூதரகத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். அப்போது இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் செத்துக்கொன்றிருக்கும் எங்கே இலங்கை தூதரகம் எதற்கு? இருநாடுகளுக்கிடையே சுமுக உறவு வேண்டும் என்பதற்காக தான் தூதரகம் வேண்டும். தமிழினம் அழியும் போது இங்கு சிங்களவன் ஏசி அறையில் சொகுசாக இருப்பது தேவையா? என்று எண்ணி பார்க்க வேண்டும். மார்ச் மாதத்திற்குள் இலங்கை தூதரகத்தை மூடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்.பதவியை துறந்தால் தனிஈழம் கிடைக்குமா என்று முதலமைச்சர் கேட்கிறார். இதிலிருந்தே தனிஈழம் கிடைக்காது என்று அவர் எண்ணுகிறார் போலும். 2 மாதத்தில் முடிய போகின்ற மத்திய அரசிலில் இருந்து நாங்கள் பதவி விலகினால் என்ன ஆகப்போகிறது என்று கேட்கிறார்கள்.

எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் பதவியில் இருந்து கொள்ளையடிக்கவே அவர்கள் என்னுகிறார்கள்.இலங்கை பிரச்சனையில் பிரதிபலன் எதிர்பாராமல் அன்றிலிருந்து பாடுபடுபவர் நெடுமாறன் ஒருவர் தான். அவரை நான் பாராட்டுகிறேன். மதிக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்ற இலங்கை பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள்.கருணாநிதி நான் உழைக்கவே பிறந்தவன் என்கிறார். ஜெயலலிதாவோ முற்றும் துறந்த துறவி என்கிறார். முற்றும் துறந்தவருக்கு முதல்வர் பதவி எதற்கு? திருமங்கலத்தில் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். ரேஷனில் ஒரு ரூபாய் அரிசி போடுகிறார்கள். ஆனால், 50 ரூபாய் பொருட்கள் வாங்கினால் தான் ஒரு ரூபாய் அரிசி தருவேன் என்று கடைக்காரான் சொல்கிறான்.தேமுதிகவில் இருந்து யாரும் மற்ற கட்சிகளுக்கு செல்லவில்லை. மற்ற கட்சியில் இருந்து வந்தவர்கள் தான் போகிறார்கள். எங்கள் கட்சி வளர்ந்துக் கொண்டிருக்கிறது.என்று அவர் கூறியுள்ளார்.

rp_31_01_2009_036

   
பயங்கரவாத சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் ஆதாரங்கள் – [எச்சரிக்கை: இதய பலவீனமானவர்களும் குழந்தைகளும் இதை தவிர்க்கவும்
கடந்த 31ஆம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள்.

ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் ,  தஞ்சை வெண்மணியில் நிகழ்ந்ததை விட கொடூரமான இனப்படுகொலைகளை பயங்கரவாத சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகளே ஆதாரங்கள்.

rp_31_01_2009_012rp_31_01_2009_005

 

cartoon_285

 

ஈழப்பிரச்சினையில் தன்னுடைய முடிவுதான் முதல் முடிவாக இருக்கவேண்டும் என்பது கலைஞரின் விருப்பம்.. அதற்கேற்றார்போல் எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அதில் ஈழப்பிரச்சினையில் தமிழர்களுக்கு நல்வழி காட்டும் காங்கிரசும் இருக்கு!!!!!!!!!!!!!! இதுதான் உச்சக்கட்ட காமெடி….நாடாளுமன்றதேர்தல் தேதி இம்மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என்பதால் கலைஞரிடம் இருந்து ஒரு ஆச்சரியமான அறிவிப்பு பிப்ரவரி20ஆம் தேதிக்குள் வரலாம்/…………………..

நன்றி குமுதம்

முல்லைத்தீவில் கடுமையான போர் நீடித்து வரும் நிலையில் இலங்கை ராணுவத்தின் ஆயுத கிடங்கு ஒன்றை  புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக புலிகளின் ஆதரவு இணைய தளம் தெரிவித்து உள்ளது.இலங்கையின் முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் முப்படைகளையும் கொண்டு கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் விடுதலைப் புலிகள் பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கை ராணுவத்தின் ஒரு ஆயுத கிடங்கை விடுதலைப் புலிகள் கைப்பற்றியிருப்பதாக அவர்களின் ஆதரவு இணைய தளமான “தமிழ் நெட்’ தெரிவித்து உள்ளது.

இலங்கை ராணுவத்தின் நூற்றுக்கணக்கான கமாண்டோ படை வீரர்களை புதுக்குடியிருப்பின் மன்னக்காந்தல், கீப்பப்புலவு ஆகிய பகுதிகளுக்கு முன்னேறி வரும்படி விடுதலைப் புலிகள் செய்துள்ளனர். அங்கு அவர்களுக்கான அனைத்து சப்ளையும் துண்டிக்கப்பட்டு, சிக்கிக்கொண்டதும் அவர்கள் மீது பெண் விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள்.புலிகளின் இந்த அதிரடி தாக்குதலில் இம்மாதம் 1ம் தேதியிலிருந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்த இணைய தள செய்தி தெரிவிக்கிறது.

அத்துடன் ஏராளமான பீரங்கிகள், துப்பாக்கிகள் அடங்கிய ராணுவத்தின் மிகப்பெரிய ஆயுத கிடங்கையும் புலிகள் கைப்பற்றியதாக அவர்களுக்கு நெருக்கமான தகவல்களை மேற்கோள்காட்டி “தமிழ் நெட்’ செய்தி வெளியிட்டுள்ளது.அந்த ஆயுத கிடங்கில் இருந்து 20 பீரங்கிகள், ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகள், ஏராளமான துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

அந்த இடத்தில் இலங்கை விமானப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, அங்கிருந்த எல்லா ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் விடுதலைப்புலிகள்  காலி செய்து விட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே கடந்த செவ்வாய்க் கிழமையன்று விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை பிரிவான கரும்புலிகள், கீப்பப்புலவு பகுதியில் நடத்திய அதிரடி தாக்குதலில் 100 இலங்கை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக விடுதலை புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளிவரும் ஒரே நாளிதழான ஈழநாதம் தெரிவித்துள்ளது.  அதில் கரும்புலிகளின் படங்களையும் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இலங்கை நிலைமை படு மோசமாகி வருகிறது. லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை மகா மோசமாக உள்ளது. அவர்களின் உயிர் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக சர்வதேச உதவிக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இலங்கைப் படைகள் கண்மூடித்தனமாக தாக்கி வருவதாகவும் அவை கவலை தெரிவித்துள்ளன. குடியிருப்புகள், மருத்துவமனை என பாரபட்சம் பார்க்காமல் தாறுமாறாக விமான தாக்குதலையும், பீரங்கித் தாக்குதலையும் இலங்கைப் படைகள் நடத்தி வருவதால் அப்பாவித் தமிழர்கள் பெருமளவில் உயிர்ச்சேதத்தை சந்தித்து வருவதாகவும் அவை கூறியுள்ளன.முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை மீது இலங்கைப் படைகள் மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வீஸ் கூறியுள்ளார்.

அங்கு மொத்தம் 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். எத்தனை பேர் இதில் உயிரிழந்தனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் பெரும் உயிர்ச் சேதத்திற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே காயம்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இந்த மோசமான தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.பெண்களும், குழந்தைகளும் இந்த மோசமான தாக்குதலில் உயிரிழந்துளளனர். இறந்தவர்களின் உடல்களை தொடர்ந்து எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் வீஸ்.

யுனிசெப் அமைப்பின் சாரா குரோ கூறுகையில், தாக்குதல் நடந்து வரும் பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சரியான முறையில் இலங்கை அரசு வாய்ப்பளிப்பதில்லை. அப்பாவி குழந்தைகளும், பெண்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி காப்பாற்ற வேண்டியது அவசியமாகும். ஆனால் அதற்கு வழிதான் இல்லை என்றார்.
கடந்த 3 நாட்களில் மட்டும் 200 அப்பாவித் தமிழர்கள் காயமடைந்துள்ளனராம். இவர்களில் 30 பேர் குழந்தைகள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை மீட்கும் முயற்சியில் ஐ.நா. ஊழியர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முழுமையாக அவர்களால் மீட்பு மற்றும் சிகிச்சைப் பணியில் ஈடுபட முடியாத நிலை உள்ளது.பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதி குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் அப்பாவித் தமிழர்களின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. எதிர் வரும் நாட்களில் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சுகிறோம் என உதவிக் குழுக்களில் இருப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது இரண்டரை லட்சம் தமிழர்கள் பெரும் கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளனர். அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
முகம நிறைய அதிர்ச்சி, பயத்துடன் தமிழர்கள் காணப்படுகின்றனர். அடுத்த நிமிடம் உயிருடன் இருப்போமா என்ற உத்தரவாதம் அவர்களிடம் இல்லை என்கிறார் லிசபெத் லிஸ்ட் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனப் பெண்மணி.

சுத்தமான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாத நிலையில் மிகவும் நெருக்கடியான சூழலில் தமிழர்கள் தவித்து வருவதாக ஒரு தொண்டு நிறுவனப் பெண் கூறுகிறார்.
லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இலங்கைப் படையினரின் தாக்குதல் இன்னும் வேகம் பிடித்தால் நிலைமை மிக மிக மோசமாகி விடும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.
ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.
மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் – அதுதான், இந்திய உளவுத்துறை – ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே…
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.
தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?
ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா – என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எஅடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.

ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்?

தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.

ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி!சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99.

…….?

இலங்கை தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார், மரண வாக்குமூலம் போன்று விநியோகித்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர்.தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.
தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?

கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).
பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் – இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?
ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.

உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!
விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது – இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!
ஆக இந்திய – இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.

‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?

சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

நன்றி யாஹூ தமிழ்

இலங்கையில் இன்றே போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தினால், திமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் பொதுக்குழு கூடி முடிவு செய்யும்” என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சனை தொடர்பாக, மத்திய அரசுக்கு, ‘இறுதி வேண்டுகோள்’ விடுக்கும் தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். தீர்மானத்தை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது. ஐ.நா.வே கண்டனம் தெரிவிக்கும் வகையில் அங்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழர் பகுதிகள் தற்போது சுடுகாடாக மாறி வருகின்றன. எனவே, அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கண்ணீர் மல்க கேட்கிறோம். தமிழ்நாடு மாநிலம் என்பது இந்தியாவில்தான் உள்ளது. இந்த மாநில மக்களை அரவணைத்து பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. தமிழ் இனத்தின் தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுக்கிறோம். அங்கு உடனடி போர் நிறுத்தம் செய்ய ஆவண செய்ய வேண்டும்.இலங்கையில் இன்றே போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இதையடுத்து, இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும். இதன் மறுநாள் அங்கு அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறுதியாக கோரிக்கை விடுக்கிறோம். இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தினால், எங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, திமுகவின் பொதுக்குழு கூடி முடிவு செய்யும்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து, பாமக உறுப்பினர்கள் அனைவரும் இன்று பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

செ‌ன்னை பாக்ஸ் ஆபி‌ஸ்: டாப் 5 படங்கள் பொங்கலுக்கு வெளியான மூன்று படங்களில் ‘காதல்னா சும்மா இல்ல’ மட்டும் பரவாயில்லை ரகம் என்ற விமர்சனத்தை பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘வில்லு’, ‘படிக்காதவன்’ இரண்டும் வழக்கமான பார்முலாவை கொண்டுள்ளதே தவிர, எந்த விதத்திலும் புதுமை இல்லை. இதிலும், படிக்காதவனுக்கே ரசிகர்கள் கூட்டம் அதிகம். பொங்கல் படங்கள் பற்றிய சென்னை பாக்ஸ் ஆபிஸ் பட்டியல் இது:

1. படிக்காதவன்

 சுரா‌ஜின் இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டும் முதல் 5 நாளில் முக்கால் கோடியை வசூலித்து முதல் இடத்தில் உள்ளது.

 2. வில்லு

 சென்னையில் இதுவரை ரூ.1 கோடியை வசூலித்திருக்கிறது. சென்ற வாரம் ரூ.43 லட்சங்களை வசூலித்தது. ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் குறைவது ‘வில்லு’வின் தோல்வியை உறுதி செய்கிறது.

 3. காதல்னா சும்மா இல்ல

 பிரபல நடிகர்கள் இல்லாதது படத்தின் வசூலில் பிரதிபலிக்கிறது. இதுவரை ரூ.13 லட்சம் வசூலித்திருக்கிறது. படத்தை பற்றிய நல்ல விமர்சனங்கள் பார்வையாளர்களை அதிகரிக்கலாம்.

 4. அபியும் நானும்

 நான்கு வார இறுதியில் இப்படம் ரூ.1 கோடியை தாண்டியுள்ளது. சென்றவார வசூல், ஏறக்குறைய ஆறரை லட்சம் ரூபாய்.

 5. அஆஇஈ

குடும்பப் பின்னணியில் அமைந்த இந்த காதல் படம் சென்றவார இறுதியில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் நாலரை லட்சம் வசூலித்துள்ளது. இதுவரை இதன் மொத்த வசூல் ரூ.20 லட்சம்.

(மூலம் – வெப்துனியா)

cartoon_271

சுதந்திர போராட்ட காலத்துல காந்திஜி உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களைத்தான் பயன்படுத்தனும்.வெளிநாட்டு பொருட்களை தூக்கி எறியுங்கன்னு சொன்னாரு. இன்னைக்கு தமிழக காங்கிரசு உள்நாட்டு பொருளான “கள்” ளை எதிர்த்து பூரண மதுவிலக்கு போராட்டம் நடத்தி முடித்து விட்டார்கள். காங்கிரசு கட்சி தமிழ் நாட்டுல இருக்கு அப்படின்றதை காட்டுவதற்காக இந்த டுபாக்கூர் போரட்டத்தை நடத்திவிட்டார்கள். இந்தப் போராட்டத்துல காங்கிரசுல உள்ள எத்தனை கோஷ்டிகள் கலந்துகிச்சின்னு யாருக்காவது தெரியுமா?.

நன்றி குமுதம்.காம்

பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம். கலைஞர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்த ஒரு திட்டம். எழுபதுகளில் அவர் முதல்முறையாக முதலமைச்சரானபோதே உருவாக்கிய திட்டம் இது. எழுபதுகளில் கூவம் சீரமைப்புத் திட்டத்தை அவர் உருவாக்கி `நிறைவேற்றி’ய பிறகும் எப்படி கூவம் இன்னமும் நாறிக் கொண்டிருக்கிறதோ, அதேபோல 37 வருடங்களுக்குப் பிறகும் இன்னமும் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கையில் குறைவின்றி தமிழகத்தின் திருவீதிகளில் வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

பாலாவின் `நான் கடவுள்’ படப்பிடிப்புக்கு அசல்  பிச்சைக்காரர்கள் தேவைப்பட்டபோது, நூற்றுக்கணக்கில் எளிதாகத் திரட்ட முடிந்ததற்காக, அவர் படத்தின் ஆரம்பத்தில் தனியே  கலைஞருக்கு நன்றி கார்ட் போட்டிருப்பார் என்று நம்புகிறேன்.கூவம் நாறிக் கொண்டே இருந்தால்தான் திரும்பத் திரும்ப அதையொட்டி மணக்கும் திட்டம், பறக்கும் சாலைத் திட்டமெல்லாம் போட முடியும். அதேபோல பிச்சைக்காரர்கள் இருந்துகொண்டே இருந்தால்தான், தொடர்ந்து மறு வாழ்வுத் திட்டங்களும்  (யாருடைய மறுவாழ்வு என்று கேட்கக்கூடாது) போடமுடியும்.

ஒட்டு மொத்தத் தமிழர்களையே பிச்சைக்காரர்களாக மாற்றிவிட்டால் அதைவிட சிறந்த வழி ஏது? தொடர்ந்து மாநிலம் தழுவிய மறு வாழ்வுத் திட்டங்கள் போடலாமே. அதனால்தான் இலவச டி.வி. பிச்சை வாங்கும் தமிழர்கள் முதல், வெள்ள நிவாரணத்துக்கு காரில் வந்து பிச்சை எடுக்கும், ரேஷன் அட்டை உள்ள ரோஷ உணர்ச்சி இல்லாத விதவிதமான தமிழகப் பிச்சைக்காரர்களை இன்று நாம் காண முடிகிறது.

சமத்துவப் பொங்கலை சமைத்துண்டு மகிழ வசதியாக சலுகை விலையில் பொங்கல் பொருட்களையெல்லாம் இந்தத் தையில் வழங்கியுள்ள கலைஞர், வரவிருக்கும் கிறிஸ்துமஸுக்கு கேக் பேக் செய்ய அடுப்பும், ரம்ஜானுக்கு குர்பானிக்கு வீட்டுக்கொரு ஒட்டகமும்  கொடுத்து, ஜாதி, மத வேறுபாடு இன்றி தமிழர்களை பிச்சைக்காரர்களாக சமத்துவப்படுத்துவார் என்று நம்புகிறேன்.அடுத்த பொங்கலுக்கு தமிழக விவசாயிகள் எல்லாரும் பிச்சைக்காரர்கள் பட்டியலில் சேர்வதற்கான சிறப்பான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன. மான்சான்ட்டோ போன்ற பன்னாட்டு விதை வியாபாரிகளுடன் தமிழக வேளாண் பல்கலைக்கழகம் கூட்டுச் சேர்ந்துவிட்டது. மரபணு மாற்றம் (ஜெனடிக்கலி மாடிஃபைட் – ஜி.எம்) செய்யப்பட்ட விதைகளை பல்வேறு பயிர்களில் அறிமுகம் செய்யும் ஏற்பாடுகள் படுவேகமாக நடந்து வருகின்றன. பருத்திக்கு அடுத்தபடியாக, பப்பாளி, கத்தரிக்காயில் கைவைத்திருக்கிறார்கள்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயில் உருவாகும் விஷச்சத்து (டாக்சின்), வேகவைத்து சமைத்தபின் இல்லாமற் போய்விடுமா என்று  மத்திய மரபணு மாற்றியல் அங்கீகாரக் குழுவின் கண்காணிப்பில் இந்திய அளவில் செய்யப்பட்ட சோதனைகளில், சமைத்தபிறகும் விஷச்சத்து நீடிப்பது கண்டறியப்பட்டது.உணவுப் பயிர்களில் மரபணு மாற்றம் செய்வது பற்றிய சர்ச்சைகள் உலகெங்கும் நீடிக்கின்றன. பல ஐரோப்பிய நாடுகள் இதற்குத் தடை விதித்திருக்கின்றன. பூச்சி தாக்குதலில் இருந்து பயிரின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது, விளைச்சல் அளவைப் பெருக்குவது ஆகிய இரு காரணங்களுமே பெரும்பாலும் மரபணு மாற்றத்தை நியாயப்படுத்த முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 400 விஞ்ஞானிகளும் 40 நாடுகளின் அரசுகளும் இந்தக் காரணங்களை மறுத்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். உலக அளவில் அமெரிக்க அரசு மட்டும்தான் மரபணு மாற்றப் பயிர்களை ஆதரிக்கிறது. ஐரோப்பியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்து வருகிறது. அண்மையில் ஆஸ்திரியாவில் எலிகளுக்கு மரபணு மாற்றச் சோளத்தை உணவாகக் கொடுத்துச் செய்த சோதனை முடிவுகள் வெளியாகின. இனப்பெருக்க ஆற்றலையே மரபணு மாற்ற உணவு பாதித்திருப்பதாகவும் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து இந்தச் சோதனைகளை மனிதர்கள் மீதும் செய்து பார்த்தபின்னர்தான் இறுதி முடிவுகளுக்கு வர முடியும்.

பிரச்னை என்னவென்றால் , மரபணு மாற்றப் பயிர்கள் பற்றிய சோதனைகள் , முடிவுகள் இன்னமும் இறுதியானவை அல்ல. எப்படிப்பட்ட பின்விளைவுகள் தொலைநோக்கில் ஏற்படக்கூடும் என்பதெல்லாம் இன்னமும் முழுமையாக அறியப்படாமலே உள்ளன. அது தவிர, சுயேச்சையான ஆய்வுகள் நடப்பதற்கான சூழல் இன்னமும் இல்லை. மரபணு மாற்ற விதைத் தயாரிப்பில் இருக்கும் சர்வதேச கம்பெனிகள்தான்  பணம் கொடுத்து ஆய்வையே நடத்துகின்றன. இதே கம்பெனிகள் அரசாங்கங்களுடனும் விவசாயப் பல்கலைக்கழகங்களுடனும் ஒப்பந்தம் போடுகின்றன. முதல் கட்டத்தில் விதைகளை இலவசமாக ராயல்டி இல்லாமல் தருவதாக ஆசை காட்டுகின்றன.மரபணு மாற்றப் பயிர்கள் அறிமுகம் செய்யப்படும் பகுதிகளில் இன்னொரு பிரச்னையும் ஏற்பட்டிருக்கிறது. சுற்றுப்பகுதிகளில் இருக்கும் சாதாரணப் பயிர்களை இவை பாதிக்கின்றன. மகரந்தத் தூள்கள் காற்றில் பரவுவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் விவசாயிகளிடமே உண்மையைச் சொல்லாமல், மரபணு மாற்றப் பயிர்களை அவர்களுடைய நிலங்களில் விளைவித்துச் சோதனை செய்து பார்த்த அராஜக சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

மரபணு மாற்றப் பயிர்களின்  விளைவாக, இயற்கையில் இருந்து வரும் உயிர்ச் சங்கிலித் தொடர் சீர்குலையும் ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது. சில பூச்சிகள், புழுக்கள் ஒரேயடியாக இல்லாமற்போய்விட்டால், அவற்றை உண்டு உயிர் வாழும் சில வகைப் பறவைகளும் இல்லாமற் போய்விடும். அவற்றின் அழிவு, தொடர் விளைவை ஏற்படுத்தும்.மரபணு மாற்றப் பயிர்களால் விவசாயிக்கு லாபம் இல்லை என்பதை பருத்தி உணர்த்திவிட்டது. மரபணு மாற்றப் பருத்தியையும் சாதாரணப் பருத்தியையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் சாகுபடிச் செலவுகள்  ஜி.எம். பருத்திக்கு 67 சதவிகிதம் அதிகமாகவும், வருவாய்  35 சதவிகிதம் குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் லட்சக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலைக்கான முக்கியக் காரணங்கள் அநியாய வட்டியும், அந்த வட்டிக்கு கடன் வாங்கவேண்டிய அளவுக்குச் செலவு செய்யவைத்த மரபணு மாற்றப் பருத்தியும்தான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டில் எந்த விவாதமும் இல்லாமல், பன்னாட்டு கம்பெனிகளும் வேளாண் பல்கலைக்கழகங்களும் அரசு ஆதரவுடன் மரபணு மாற்றப் பயிர்களைப் பரப்புவதில் இறங்கி யிருக்கின்றன. தமிழக அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில் இப்படிப்பட்ட விஷயங்கள் பற்றி தெளிவான ஆராய்ச்சியோ கொள்கை முடிவுகளோ கிடையாது. எனக்கு எவ் வளவு கமிஷன் கிடைக்கும் என்ற ஒற்றைப்பார்வைதான் சர்வகட்சிப் பார்வை.மரபணு மாற்றப் பயிர்களை எங்கள் கட்சி எதிர்க்கும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார். சுற்றுச் சூழலில் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் ஒரே தமிழகக் கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான். ஆனால் அணு மின்சாரத்தை ஆதரிக்கும்; அணுக்கழிவுகள் பற்றியெல்லாம் அது எந்தக் கருத்தையும் சொல்லாது.
 
தி.மு.க.வுக்கு அறிவியல், தொழில்நுட்பம் போன்ற நவீன துறைகளில் எதுவும் கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை.  ஐ.டி துறையில் முதலீடு செய்யவேண்டாம் என்று என்.ஆர்.ஐ.களிடம் பகிரங்கமாகச் சொல்கிறார் ஆற்காடு வீராசாமி. அந்தத் துறைகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளைத் தம் அரசு உருவாக்கியிருப்பதாக கலைஞர் ஒவ்வொரு மல்ட்டி நேஷனல் கம்பெனியுடன் புரிந்துணர்வு (என்னத்தைப் புரிஞ்சுக்குவாங்களோ?) ஒப்பந்தம் போடும்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மரபணு மாற்றப் பயிர்கள் பிரச்னையின் முழு ஆழமும் தமிழகத்தில் இன்னமும் உணரப்படவில்லை. விவாதிக்கப் படவில்லை. அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டால், அந்த பாதிப்பு காவிரியும் , சாயப்பட்டறைக் கழிவுகளும், மணற்கொள்ளையும்  ஏற்படுத்தி வரும் பாதிப்பளவுக்குக் கடுமையாக இருக்கும். தமிழக விவசாயிகளுக்கு இன்ஷ்யூரன்ஸ் அறிவு மிகக் குறைவு. மற்ற மாநிலங்களில் 40 சதவிகிதம் வரை பயிர் இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் பரவியிருக்கின்றன. இங்கே வெறும் 3 சதவிகிதம்தான்.
அடுத்த பொங்கலுக்கு முன், `மான் சாண்ட்டொ உதவியுடன் இலவசமாக கத்தரிக்காய் விதைகள் தருகிறேன்’ என்று கலைஞர் கூவ ஆரம்பிப்-பதற்குள் விவசாயி கள் விழித்துக் கொள்ளாவிட்டால், எவ்வளவு வெல்லம் போட்டாலும் பொங்கல் கசக்கும்.

றவைகள் சரணாலயம்’ என பொருள்தரும் கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து கைப்பற்றியபின்  உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறது சிங்கள ராணுவம். `விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்’ என்று கொக்கரித்துள்ளார், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே. ஆனால், “ஈழத்தமிழர்களின் தலைவராக இருக்கும் பிரபாகரனை சிங்கள ராணுவத்தால் ஒருநாளும் பிடிக்கமுடியாது” என்கிறார், யாழ்ப்பாணத் தமிழ் எம்.பி.யான பத்மினி சிதம்பர நாதன்.

சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த அவர் நமக்களித்த பிரத்யேக பேட்டி.

ஈழத்தில் தற்போதைய போர் நிலவரம் என்ன?

“இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தான்  என்ற அடிப்படையில் ஓர் இனத்தையே (தமிழ் இனத்தையே) சிங்கள அரசு அழித்துவருகிறது. கிளிநொச்சி பகுதியிலுள்ள அனைத்து தமிழர்களையும் அது புலிகளாகவே பாவிக்கிறது. யாழ்ப்பாணத்தில் முழத்திற்கு முழம் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களிடம் சோதனை நடத்தி வருகிறது. ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ நினைக்கும் சமூக சேவகர்களை இலங்கை ராணுவம் கடத்துகிறது. ஈழத் தமிழர்கள் `செயலற்றவர்களாக’ இருக்க வேண்டும் என்பதே சிங்கள அரசின் ஆசை.

ஈழத்தின் வன்னிப்பகுதியில் அகதிகளாக இடம் பெயர்ந்த மக்கள் ஓலைக்கீற்றுகளால்தான் குடில் அமைத்துத் தங்க வேண்டும் என்று சிங்கள அரசு நிர்ப்பந்தப்படுத்துகிறது. மேற்கூரைக்கு பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் ஷீட் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதியில்லை. தமிழ் அகதிகளுக்காக தமிழக அரசு உணவுப்பொருள்களைக் கொடுத்தனுப்பியதால், உலக உணவுத்திட்டம் (டபிள்யூ.எஃப்.பி) கொடுத்தனுப்பிய  உணவுப்பொருள்களை இலங்கை அரசு திருப்பியனுப்பி, அதன்மூலம் அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துள்ளது.

தமிழர் வாழும் பகுதிகளில் தினமும் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை சிங்கள ராணுவம் வீசுகிறது. அவை சில இடங்களில் முப்பதடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அதனால் நிலத்துக்கடியிலிருந்து தண்ணீர்கூட வந்து விடுகிறது. இதுபோக சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் (கொத்து) குண்டுகளையும் இலங்கைப்படை வீசுகிறது. இந்தக் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் நான்கு லட்சத்து அறுபதாயிரம் பேர் இன்று நான்கு ஊர்களில் மிகநெருக்கமாக வாழும் நிலை உள்ளது. இதுதான் இலங்கைப் போரின் இப்போதைய நிலை.”

கிளிநொச்சியை சிங்கள ராணுவம் கைப்பற்றியது புலிகளுக்குப் பின்னடைவுதானே?

“அப்படிச் சொல்ல முடியாது. தங்கள் தற்காப்புக்காக புலிகளும், மக்களும் கைவிட்டுச் சென்ற இடங்களைத்தான் சிங்கள ராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து புலிகள்  பின்வாங்கிச் சென்றது, அவர்களின் போர்த்தந்திரமாக இருக்கலாம்.”

மக்களை கேடயமாகப் பயன்படுத்தத்தான் பிரபாகரன் அவர்களை முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே?

“அப்படியெதுவும் இல்லை. கிளிநொச்சிப் பகுதி தமிழர்களின் அடையாள அட்டையை வைத்து, அவர்களை புலிகளாகவே சிங்கள ராணுவம் பார்க்கிறது. அத்தியாவசிய மருந்துகளை வாங்க அருகிலுள்ள பகுதிகளுக்குக் கூட மக்கள் நிம்மதியாகச் சென்று வர முடியாத நிலை உள்ளது.

மன்னார் பகுதியில்,  சிங்கள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை என்ன? அவர்கள் கிட்டத்தட்ட ராணுவக் கட்டுப்பாட்டில் சிறைக்கைதிகள் போலத்தான் உள்ளனர். முள்வேலி களுக்கு நடுவில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள ராணுவம் உரிய பாதுகாப்பு, சுதந்திரம் தந்தால் அவர்கள் ஏன் புலிகளுடன் செல்ல வேண்டும்?”

ஈழப்பிரச்னையில் இந்திய அரசு எந்த விதத்தில் உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

“இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், ஈழத்  தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இதனால்தான் அங்கே துப்பாக்கிச் சத்தம் கேட்டால், இங்குள்ள தமிழர்கள் துடிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தமிழர்கள், ஈழ மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தந்து ஈழத் தமிழர்களின் சுய உரிமைகளையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் இந்திய அரசின் மூலம் பெற்றுத்தர வேண்டும். அவர்களால்தான் அது முடியும்.”

`பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீரப்பமொய்லி கூறியிருக்கும் போது, இந்தியஅரசிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

“ஈழத் தமிழர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால்தான் அவர்களால் சுதந்திரமாக சுவாசிக்க,  யோசிக்க, முடியும். உலக ரீதியாக சுதந்திரத்தை மதிப்பவர்கள் யாரும் ஈழ மக்களின் சுதந்திரத்தையும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் பார்த்தால்,  ஈழ மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் வல்லமை  உடைய அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்புதான். எனவே ஈழத்து மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற  இந்தியாதான் உதவி புரிய வேண்டும்.”

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டார். தற்போது பிரணாப் முகர்ஜி வருவதை இலங்கை விரும்பவில்லை. இந்தநிலையில் அழையா விருந்தாளியாக அவர் எப்படி இலங்கை செல்வது என மத்திய அரசு கூறியுள்ளதே?

“கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எங்களது அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இலங்கை வர இருக்கிறார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லகமா அறிவித்திருந்தாரே!”

தமிழர் பகுதியில் சிங்கள ராணுவத்தின் முன்னேற்றத்துக்கு புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற கருணா அமைத்துக்  கொடுக்கும் வியூகமும் ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?

“அப்படி நினைக்கவில்லை. ஏழை நாடான இலங்கைக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி புரிகின்றன. இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்கிறது. சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசும் தொழில்நுட்ப உதவி புரிவதாகக் கூறப்படுகிறது.”

பிரபாகரனை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறதே?

“கடந்த முப்பது வருடங்களாக சுதந்திர தாகத்தோடு சிங்கள ராணுவத்தினரை எதிர்த்து புலிகள் போராடி வருகிறார்கள். மக்களும் அவர்களது அனுபவ தந்திரத்தால் சிங்கள ராணுவத்தின் குண்டுமழையில் இருந்து  தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த குண்டுவீச்சு லட்சக்கணக்கான தமிழர்களை இன்று ஒரே இடத்தில் குவித்துள்ளது. புலிகளின் தலைவராக உள்ள பிரபாகரனை ஒருநாளும் பிடிக்க முடியாது.

நன்றி ரிப்போர்ட்டர்

cartoon_257

நன்றி குமுதம்.காம் .பாலா

திருமங்கலம் இடைத்தேர்தல் ரொம்பவே சூடா போய்கிட்டு இருக்கு. திமுகவும் அதிமுகவும் பரஸ்பர குற்றசாட்டுக்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா மீது திமுக புகார் கொடுத்திருக்கிறது. பாமக ஆதரவு யாருக்கு என்பது நேற்று வரை சஸ்பென்ஸா இருந்தது… ஐயா ராமதாசு நேற்று தன்னுடைய மவுனத்தை மிகத்திறமையாக, தெளிவாக அறிவித்துவிட்டார். யாருக்கும் ஆதரவு கிடையாது என்று அறிவித்துவிட்டு ஆழம் பார்ப்பதற்காக ஒதுங்கிவிட்டார். இந்த அறிவிப்பு திமுகவுக்கு அதிர்ச்சி, அதிமுகவுக்கு மகிழ்ச்சி (உள்ளூர மகிழ்ச்சி, அதிர்ச்சி). இந்த சூழ்நிலையில் மதுரைக்கார  சாமிதான் வழிகாட்டனும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது திமுக. மதுரைக்கார சாமியும் அவ்ளோ எளிதில் எந்த விசயத்தையும் விட்டு கொடுக்காது. இன்னும் பல நாடகங்கள் அரங்கேறும் வாய்ப்புகள் அதிகமா இருக்கு ……

pg1

னித வெடிகுண்டு தாக்குதல் புலிகளுக்கு மறந்து விட்டதோ?’ என்ற சந்தேகம் பலருக்கு முளை விட்டிருந்த நிலையில், இலங்கைத் தலைநகரம் கொழும்பு அருகே வத்தளை என்ற இடத்தில்  ஒரு மனிதகுண்டு தாக்குதலை நடத்தி அதிர வைத்திருக்கிறார்கள் புலிகள்.  அந்தத் தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் ஆறு பேர் பலியாகி, பதினேழு பேர் படுகாயமடைந்துள்ளனர். வன்னிப்பகுதியில் வகைதொகை இல்லாமல்  ராணுவம் குண்டுமழை பொழியும் நிலையில், ஓர் எச்சரிக்கையாக புலிகள் தரப்பிடமிருந்து வெடித்திருக்கிறது இந்த மனித வெடிகுண்டு.

இதற்கிடையே நம் மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்தது ஒரு வீடியோ காட்சி.  `இதயபலம் இருந்தால் மட்டும் பாருங்கள்’ என்ற எச்சரிக்கையுடன் அதை அனுப்பியிருந்தார் இலங்கை வாசகர் ஒருவர். அந்த வீடியோ காட்சியை நாம் பார்த்தபோது, கிளிநொச்சியில் விழுந்து வெடிக்கும் ஆயிரமாயிரம் குண்டுகளின் அதிர்வை விட நம் நெஞ்சில் பேரதிர்வு!

அந்த வீடியோ காட்சியில் பதுங்கு குழிகளுக்குள்  சில பெண்புலிகள் சடலமாக விழுந்து கிடக்கிறார்கள்.  அவர்களைச் சுற்றிசுற்றி வந்து எகத்தாளமாக குரல் எழுப்புகிறார்கள் சிங்கள ராணுவத்தினர். பெண் புலிகளின் உடைகளை உரித்து, முழுநிர்வாணமாக்கி அதை சிறியரக கேமராவில் படம்பிடித்தபடி சிரிக்கிறார்கள். ஒரு சிங்கள `வீரன்’ சடலமாய் கிடக்கும் பெண்புலியின் மீது அமர்ந்து, கேமராவைப் பார்த்து வெறியுடன் கெக்கலிக்கிறான். அவன் என்ன செய்திருப்பான் என்பது நமக்குப் புரிந்து போக உள்ளமே அருவருப்பாகிறது நமக்கு.

மீண்டும் கேமரா பெண்புலிகளின் உடல்களைக் காட்டுகிறது. அங்கே அவர்களின் மார்பகம், பிறப்புறுப்புகளில் கத்திமுனையால் ரத்தக் கோலம் போடப்பட்டிருக்கிறது. சற்றுத் தொலைவில் மேலும் இரண்டு பெண்புலிகள் சடலமாகக் கிடக்கிறார்கள். `அந்த உடைகளையும் கழட்டுடா கழட்டுடா’ என சிங்களம் கலந்த தமிழில் ஒருவன் கத்துகிறான். கேமரா, இலக்கில்லாமல் பெண் புலிகளின் நிர்வாணத்தின் மீது மேய்கிறது. இறந்த பெண்புலிகளின் உடல்கள்மீது ஆபாச வெறியாட்டம் நடத்தி…… இல்லை, இதற்குமேல் நம்மால் சொல்ல முடியவில்லை. சிங்கள சிப்பாய்களின் சிரிப்புச் சத்தத்தோடு முடிகிறது அந்த வீடியோ. சர்வதேச விதிமுறைகள் ஒருபுறமிருக்க, சாதாரண மனிதகுணங்கள் கூட மகிந்த ராஜபக்ஷேவின் ராணுவத்திற்கு இருக்காதா? என்ற சந்தேகத்தில் நமது விழிகள் அப்படியே நிலை குத்தி நிற்கின்றன. சிங்களச் சிப்பாய்களின் இந்த சின்னப்புத்திக்கு என்ன காரணம்? என்ற நம் கேள்விக்கு வன்னிப் போர் நிலவரம் குறித்த சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு விளக்கமளித்தனர் இலங்கை வட்டாரத்தினர் சிலர்.

“இந்தியாவிலிருந்து போர்நிறுத்தம் என்ற கோரிக்கையுடன் பிரணாப் முகர்ஜி வருவதற்குமுன் எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட வேண்டும்’ என்பது சிங்கள ராணுவத்திற்கு பிரதமர் ராஜபக்ஷே இட்டிருக்கும் கட்டளை. பிரணாப் முகர்ஜியின் வருகை தாமதமாவதற்கும் இதுதான் காரணம். இந்நிலையில், கிளிநொச்சியைப் பிடிக்க, சந்திரசிறீ, ஜெகத், ஜெயசூரிய என்ற மூன்று மேஜர் ஜெனரல்கள், ஐந்து பிரிகேடியர்கள், ஏழு கர்னல்கள், பதினேழு லெப். கர்னல்கள் மற்றும் பல்வேறு டிவிஷன்களைச் சேர்ந்த எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் அங்கே குவிக்கப்பட்டனர்.கிளிநொச்சியைச் சுற்றி மலையாளபுரம், குஞ்சு பரந்தன், புலிக்குளம், முறிகண்டி ஆகிய நான்கு இடங்களில் நள்ளிரவு தாண்டி இரண்டுமணியளவில்  கடும்மழையில், கும்மிருட்டில் இந்தப் படைகள் காத்திருந்தன. யாழ் மாவட்டம் கிளாலியில் ஒரு தாக்குதலைத் தொடங்கி புலிகளின் கவனத்தை அங்கே திசைதிருப்பி விட்டு, இந்த நான்கு முனைகள் வழியாகவும் புகுந்து கிளிநொச்சியைப் பிடிப்பது ராணுவத்தினரின் திட்டம்.

அதன்படி கிளாலியில் போர் தொடங்கியதாகப் போக்குக் காட்டிவிட்டு, இந்த நான்கு இடங்களிலும் புலிகளின் முன்னணி காவலரண்களை உடைத்துக் கொண்டு ஆரவாரமாக முன்னேறியது சிங்கள ராணுவம். அவ்வளவுதான், அவர்கள் மேல் ஆக்ரோஷமாக வந்து அடித்தது ஒரு புலியலை! சுதாரிப்பதற்குள் சுனாமியாக வந்து அடித்தது மற்றொரு அலை. அந்த பலத்த அடியால் பஞ்சு பஞ்சாகச் சிதைந்து, சின்னாபின்னமாகிப் பறந்தது சிங்களப் படை.

அதிகாலை நேரம்! `கிளிநொச்சி பிடிபட்டது’ என்ற இன்பச் செய்திக்காக காதுகளைத் தீட்டிக் கொண்டு கொழும்பில் காத்திருந்தது ராணுவ உயர்வட்டம்.  ஆனால் ஹெலிகாப்டர்கள் இரைச்சலோடு பறக்க, ஆம்புலன்ஸ்கள் அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓட, சண்டையின் ரிசல்ட் என்ன என்பது ராணுவத்  தளபதி சரத் பொன்சேகாவிற்குப் புரிந்து விட்டது.
அடம்பன் பகுதியில் கிளிநொச்சியை நோக்கி முன்னேறிய ஐநூறு பேர் அடங்கிய ராணுவம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. முறிகண்டியில் முழுக்க முழுக்க பெண்புலிகளின் அணி மட்டுமே களமாடி பலத்த உயிர்ச்சேதத்தை ராணுவத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறது. பல இடங்களில் புலிகளின் மண் அரண்களை ஒட்டிய அகழித் தண்ணீரில் செத்து மிதந்து கொண்டிருந்தன சிங்களச் சிப்பாய்கள் பலரது உடல்கள். எதிர்பார்க்காத மரண அடி இது!

நான்காவது ஈழப்போர் என்று கூறப்படும் இந்தச் சண்டையில் இதுவரை பன்னிரண்டாயிரம்  சிப்பாய்கள் பலியாகியிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட எம்.பி. பாலித்த ரங்க பண்டார என்பவரே  கூறியிருக்கிறார். புலிகள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று முழக்கமிடும் இவரே இப்படிக் கூறியிருப்பது அதிர்ச்சியின் உச்சம். இன்னொரு எம்.பி.யான மங்கள சமரவீர என்பவரோ, கொழும்பு, அநுராதபுரம் மருத்துவமனைகளில் முறையே 1,265 மற்றும் 700 படையினர் இருப்பதாகக் கூறியுள்ளார். பொல நறுவை, காலி, காரம்பிட்டிய, களுத்துறை, நாகொட, வவுனியா, மன்னார் மருத்துவமனைகளில்  உள்ள ராணுவச் சிப்பாய்களின் கணக்கு அவருக்குக் கிடைக்கவில்லை போலும்.

“இதுவரை பதினான்காயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இதில் பன்னிரண்டாயிரம் பேர் புலிகளின் பீரங்கி மற்றும் மார்ட்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள். இவர்களில் எட்டாயிரம் பேர்  மீண்டும் களத்திற்குச் செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார் ராணுவத் தளபதி பொன்சேகாவின் ஊடகர் திஸ்ஸ ரவீந்திர பெரேரா. இதன்மூலம், எஞ்சிய ஆறாயிரம் பேர் இனி நடமாட முடியாதவர்கள் என அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.இவ்வளவு `தெளிவாக’ அடிவாங்கிய பிறகும் `கிளிநொச்சியைப் பிடித்தே தீருவோம்’ என்று கொழும்பில் பாதுகாப்பாக உள்ள அரசு உயர்வட்டம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்க, களத்தில் தொடர்ந்து அடிவாங்கும் ராணுவத்தினரோ ஆற்றமுடியாத ஆதங்கத்தில் இருக்கிறார்கள். அந்த வெறித்தனம், கோபம், கொந்தளிப்பைத்தான் வீரமரணமடைந்த பெண்புலிகளிடம் அவர்கள் `காட்டி’ வருகிறார்கள். இப்படிச் சில்லுண்டித்தனம் செய்வதற்காகவே சிங்கள சிப்பாய்கள் பலர் சிறிய ரக கேமராக்களைச் சொந்தமாக வைத்திருக்கிறார்கள்” என்றார்.

கடந்த வாரம் வாங்கிய உச்சகட்ட அடிக்குப் பிறகு வான்வழித்தாக்குதலை அதிகப்படுத்தியிருக்கிறது இலங்கைப்படை. பெரும்பாலும் இரவுநேரத்தில் பறந்து முதலில் ஒரு வெளிச்ச குண்டையும், பிறகு நிஜ குண்டையும் அது வீசிவருகிறது. முன்பு விமானத் தாக்குதல்களின் போது வன்னித் தமிழர்களுக்குப் பதுங்கு குழிகள் ஓரளவு பாதுகாப்பாக இருந்தன. இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. `பாராசூட் குண்டு’ என்ற பெயரில் விமானப்படை வீசும் புதுவகை குண்டுகள் தரையிலிருந்து மேலே ஐம்பது மீட்டர் தொலைவிலேயே வெடித்துச்சிதறி கீழே விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பாராசூட் குண்டு விழுந்து வெடித்தால் தரையில் படுத்திருப்பவர்கள், பதுங்கு குழிகளில் இருப்பவர்கள் கூட தப்ப முடியாது. கடந்த வியாழனன்று விசுவமடு என்ற இடத்தில் வீசப்பட்ட பாராசூட் குண்டால் பல வீடுகள் சேதமாகின. ஓடிப் பதுங்க முடியாத எண்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் கொத்துக்கொத்தாக மடிந்து போயின.இதற்கிடையே புலிகள் அரசியல் பிரிவுத் தலைவரான நடேசன், “வன்னி நிலப் பரப்பிற்கு ஊடாக வரும் ராணுவத்தினரை மீள திரும்ப விடுவதற்கில்லை. அந்த சபதத்தை ஏற்று புலிகள் நிற்கிறார்கள். இது இறுதியான காலகட்டம்” என்று பேசி, ராஜபக்ஷே தரப்புக்கு மேலும் பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார்.

நிலைமை இவ்வாறிருக்க, புலிகளின் பிரதம ஆயுத முகவரான கண்ணாடி பத்மன் (கே.பி.) என அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன், அவர் பங்குக்கு ஓர் அதிரடியை நடத்திக் காட்டியிருக்கிறார்.   மூன்று புலி பிரதிநிதிகளை கனடாவிலிருந்து உக்ரேன் நாட்டுக்கு அனுப்பி, அதிநவீன ஆயுதங்களை வாங்கிய அவர், ஒரு கப்பல் மூலம் அவற்றை முல்லைத்தீவு கடல்பகுதியில் மர்மமான முறையில் இறக்கிக் காட்டியிருக்கிறார். தகவலை தாமதமாகத் தெரிந்து, இலங்கை விமானப்படை மற்றும் கடற்படைக் கப்பல்கள் அங்கே விரைந்த போது அந்த `ஆயுதக் கப்பல்’ மாயமாகி விட்டது. அதில் அதிநவீனரக ஆயுதங்களைத்  தவிர, புலிகளின் விமானப் படைக்குத் தேவையான எரிபொருளும் வந்து இறங்கியிருப்பதாகக் கேள்வி. இலங்கைப் படையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு புலிகள் எப்படி ஆயுதங்களை இறக்கினார்கள் என்று புரியாமல் விழிக்கிறார்கள் சிங்கள அதிகாரிகள்.இந்தநிலையில,் கடந்த சனிக்கிழமை காலை ஐந்து மணியளவில் முல்லைத்தீவை நோக்கி பெரும்படையை  நகர்த்தி அங்கும் முதுகு முறிபட்டுத் தவிக்கிறது சிங்கள ராணுவம்.  அங்கு நடந்த சண்டையில் அறுபது ராணுவத்தினர் பரலோக பிராப்தியடைந்து, எழுபத்தைந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்குப் பதிலடியாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் விமான குண்டுவீச்சு நடத்தியிருக்கிறது இலங்கைப்படை.

வன்னிப் போர் உச்சகட்ட நிலையை அடைந்திருக்கும் இந்தநிலையில், இந்திய `ரா’ உளவு அமைப்பின் முன்னாள் செயலாளரான பி.ராமன், “ராணுவத்தினருக்கு மரண முற்றுகைக் களமாக கிளிநொச்சி இருக்கிறது” என்று கருத்துக் கூறியிருக்கிறார்.“இனிமேலும் தாங்காது என்ற நிலையில் தமிழர் திருநாளான பொங்கலுக்கு முன் `போர் நிறுத்தம்’ என்று இலங்கை அரசு பெருங்குரலெடுத்து கத்தப்போவது நிஜம்” என்கிறார்கள் வன்னிப் போரை உன்னிப்பாக கவனித்து வரும் போர்க்கள அவதானிகள். நாமும் அதைப் பார்க்கலாம்.

 

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

pg2a1

தமிழக காங்கிரசு தலைவர்களை பற்றி என்ன சொல்ல…. கார்ட்டூனை பாத்து ஏதாவது சொல்லிட்டுப்போங்க..

நன்றி குமுதம்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக சீமானும்,மணியும் கைது செய்யப்பட்டிருக்கிறனர். சீமானின் கார் எரிக்கப்பட்டது. சத்தியமூர்த்திபவனில் கல் வீச்சு சம்பவம், மறியல், அறிக்கை என தமிழக அரசியல் களம் மீண்டும் இலங்கைப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இவ்வளவு நாளும் அமைதியா இருந்த காங்கிரசு தலைவர்கள் ஓலமிடிகிறார்கள். “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது” என்ரு. எங்கு போயிருந்தார்கள் இவ்வளவு நாளும்??/. தூங்கியவன் திடீரென்று விழித்து பயத்தில் கத்துவதைப் போல் ஆளாளுக்கு தனியாக நின்று கத்திக்கொண்டு இருக்கிறார்கள்.( இதில் கூட அவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது.)

ஒரு பதிவர் தனது பதிவில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருந்தார் பதிவரின் பெயர் மறந்துவிட்டது.
“கட்சியின்னு இருந்தா தொண்டர்களிருக்கனும். ஆனா இருக்குற எல்லோரும் தலைவர்களாக இருப்பது காங்கிரசு கட்சியில் மட்டும்தான்”. அவர் சொன்னது சரிதான்.தங்களுடைய சகோதர இனம் அழிக்கப்படுவதை கண்டித்து யார் பேசினாலும் அது தடை செய்ய்ப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பது போன்றதாம்”. இது காங்கிரசின் எண்ணம். ஓட்டுக்கு மட்டும்தான் தமிழன் தேவை. மற்றதுக்கெல்லாம் தேவையில்லை.ராஜிவின் ஆன்மா மன்னித்தாலும் இவர்கள் மன்னிக்கமாட்டார்களாம்.உங்க கட்சியையும் நம்பி ஓட்டு போட்ட எங்களுக்கு இதுவும் வேணும்,,இன்னமும் வேணும்.

இந்த வார ரிப்போர்ட்டரில் ராஜிவின் கொலையாளியை சோனியாகாந்தி சந்தித்து பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது. உங்க மூஞ்சிய எங்க கொண்டு வைக்கப்போறீங்க.?????. ஒரு பக்கம் போரை நிறுத்த இலங்கையுடன் பேசப்போவதாகவும்,மறுபுறம் இலங்கைக்கு ஆயுத உதவி, இந்திய ராண்வ அதிகாரிகளின் ஆலோசனை அப்படினு பலமுகம் காட்டுறீங்க…….. ஐயா காங்கிரசுத்தலைவர்களே இப்ப நீங்க எதுக்கு போராடணும் தெரியுமா.. கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 39 டாலர் கம்மி ஆயிடிச்சாம்…  அதனால பெட்ரோல் டீசல் விலையை குறைக்கச்சொல்லி போராடுங்க.. ஈழத்தமிழர்கள் விசயத்துல நீங்கள் காட்டும் போலி முகத்தை மக்கள் அமைதியா பாத்துகிட்டு இருக்காங்க….

ஏதாவது ஒரு விசத்துலயாவது நீங்க கோஷ்டிகானம் இல்லாம ஒன்னா சேருங்க அதுக்கப்புறம் நீங்க எல்லா விசயத்தை பற்றியும் பேச வாங்க

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி எந்த அணியில் இடம்பெறும்?

இதுவரை தேர்தல் அணிபற்றி டாக்டர்  ராமதாஸ் என்னென்ன கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார் என்பதனைத் தொகுத்துப் பார்த்தாலே அந்தக் கட்சி எந்த அணியில் என்பதை அரசியல் மாணவனும் அறிந்து கொள்வான்.

`அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் அல்லாத ஒரு அணியை காங்கிரஸ் அமைக்க வேண்டும். அதில் பா.ம.க.வும் இடம் பெறும்’ என்றார்.`காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க.வும் அணி அமைக்க வேண்டும். அதில் பா.ம.க.வும் இடம் பெறும்’ என்றார்.`எமது சுற்றுப்பயணங்களில் ஒரு நிலையைத் தெரிந்து கொண்டேன். அ.தி.மு.க. ஆட்சியையும் தி.மு.க. ஆட்சியையும் பார்த்து மக்களுக்கு அலுத்துப் போய்விட்டது. ஆகவே, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்க வேண்டும்’ என்றார்.

இந்தக் கருத்தோட்டங்களில் ஓர் உண்மையை உணர்ந்து கொள்ளலாம். தி.மு.க.வை ஓரம் கட்ட வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருக்கிறார். அதற்காக அண்ணா தி.மு.க.வோடும் அவர் கரம் கோக்கக் காத்திருக்கிறார் என்பதுதான்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் அணி உறுதி என்ற நிலையில்தான் அந்த அணிக்கு பா.ம.க. வந்தது. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், கடுமையான தி.மு.க. எதிர்ப்பு நிலையை எடுத்தது. சென்னை துணை நகரத் திட்டம் முதல் எல்லா தொழில்வளங்களுக்கான திட்டங்களையும் எதிர்த்தது. அதனால் ஆளும் கட்சிக்குத்தான் லாபம் என்ற நிலைப்பாட்டில் இத்தகைய விமர்சனங்கள் வெடித்தன என்றே அரசியல் நோக்கர்கள் கருதினர்.

தி.மு.க. அரசின் சாதனைகளுக்கு பூஜ்யம் மார்க் போட்டார் டாக்டர் ராமதாஸ். `கலைஞருக்கு ஆளத் தெரியவில்லை’ என்று அவர்களுடைய தொலைக்காட்சி ஒரு கருத்தரங்கம் நடத்தியது. `தி.மு.க. ஆட்சியில் தொழில் வளமே இல்லை’ என்று இன்னொரு முறை குற்றம் கூறினார். `உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சில இடங்களில் பா.ம.க. தோற்றதற்கே கருணாநிதிதான் காரணம்’ என்றார். அவர் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவே ராமதாஸ் மூன்றுமுறை முழங்கினார்.

எல்லை கடந்த விமர்சனங்களில் ஆவேசம் தொனித்தது.  எனவே, இதற்கு மேல் பொறுப்பதற்கு இல்லை என்று முடிவுகட்டி பா.ம.க.வை கூட்டணியிலிருந்து விலக்குவதாக முதல்வர் அறிவித்தார். அந்த அதிரடியை பா.ம.க. எதிர்பார்க்கவில்லை. அதன் பின்னர் அறிக்கைகளில் வேகம் தணிந்தது. முதல்வருக்கு ஆலோசனைகளாக வந்தன. ஆனாலும் தி.மு.க. உறவை முறித்துக்கொள்வதில் காலம் கருதி பா.ம.க. காத்துக் கொண்டிருக்கிறது.அதன்பின்னர் இரு தரப்பிலும் இணக்கம் ஏற்படுவது போன்ற ஒரு தோற்றம் உருவானது.
`காடுவெட்டி குருவை கைது செய்து பார்’ என்று சவால்கள் எழுந்தன. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் எந்தப் பிரளயமும் ஏற்பட்டுவிடவில்லை. அவரைக் கைது செய்தது சரியே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் அவர் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும்  கூட்டணிக்கான அச்சாரமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், அவசரமாக சில காரியங்களை முடிப்பதில் பா.ம.க. முனைப்பாக இருக்கிறது. அதில் ஒன்றுதான் காடுவெட்டி குருவின் விடுதலையாகும்.

`எத்தனையோ சுகாதாரத் திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி இருக்கிறோம். அவற்றைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு வேகம் காட்டவில்லை’ என்று அன்புமணி பலமுறை குற்றம் கூறினார்.`அன்புமணியின் அவசரத்திற்கெல்லாம் ஆடமுடியாது. முறைப்படி பணிகள் நடைபெறுகின்றன’ என்று தமிழக அரசே நீண்ட விளக்கம் அளித்தது.தற்போது தமிழக ரயில்வேதுறை விழாக்களுக்கெல்லாம் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கின்ற அன்புமணிதான் கதாநாயகன். அவருடைய வேகத்தைப் பாராட்ட வேண்டும். அண்மையில் திண்டிவனம் _ திருவண்ணாமலை ரயில் பாதைத்திட்டத்திற்கு அன்புமணி அடிக்கல் நாட்டினார். அடுத்த இரண்டு வாரங்களிலேயே  ரயில்வேதுறை காண்ட்ராக்ட் கோரிவிட்டது.

லாபம் தராத திட்டங்களை உடனடியாக ரயில்வேதுறை செயல்படுத்தாது. அப்படிப் பல ரயில்வே திட்டங்களுக்கான பாதிச் செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அதாவது, 750 கோடி ரூபாயை தமிழக அரசு தர வேண்டும் என்கிறார்கள். அப்படித் தந்தால் 1500 கோடி ரூபாய் பணிகளுக்கான காண்ட்ராக்டுகளை விட்டுவிடலாம்.உதாரணத்திற்குத்தான் இவற்றைக் குறிப்பிடுகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னர், இன்னும் பல தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி தரப்படும். அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

இத்தகைய பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும். அதன் பின்னர்தான் அ.தி.மு.க. அணிக்குச் செல்வது பற்றி பா.ம.க. அதிகாரபூர்வமாக அறிவிக்கும். ஆனால், நமக்குக் கிடைத்த தகவல்படி அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து தொகுதிகளும் தீர்மானிக்கப்பட்டுவிட்டனவாம்.அதே சமயத்தில் பா.ம.க.வின் இரண்டு சாதனைகள் சரித்திரம் படைத்தவை. குன்னூர், கிண்டி மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி நிலையங்களை மூடிவிட்டு, தற்போது தனியாரிடம் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு அதே மருந்துகளை வாங்குகிறார்கள். இந்த நிலையங்கள் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களாகும். உலகத்தரம் வாய்ந்த மருந்துகளை உற்பத்தி செய்து வந்தன.இந்த நிலையங்கள் மூடப்பட்டதை எதிர்த்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராடி வந்தன.

அன்புமணியின் இன்னொரு சாதனை உலகப் புகழ்பெற்றது. ஆணும் ஆணும் கல்யாணம் செய்துகொள்வதை, பெண்ணும் பெண்ணும் குடும்பம் நடத்துவதை அதாவது ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க இந்தியாவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று போராடி வருகிறார். அந்தப் போர்க்குணத்தோடு அ.தி.மு.க. அணியில் அங்கம் பெறப் போகிறார்கள்.அகில இந்திய அளவில் மூன்றாவது அணி என்று மாயாவதி தலைமையில் ஓர் அணியும் தமிழகத்தில் செல்வி ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியும் அமைகின்றன. இந்த அணி கடந்த ஐந்து ஆண்டுகால மன்மோகன்சிங் அரசின் செயல்பாடுகளை எதிர்த்துத்தான் இயங்கும். இயங்கியாக வேண்டும். மன்மோகன்சிங் அரசிற்கு வெளியிலிருந்து துணை நின்ற இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டன. மன்மோகன் சிங்கின் அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டைக் கடுமையாக எதிர்த்தன. ஆகவே, கொள்கைரீதியாக அவை ஆதரவை விலக்கி மூன்றாவது அணி முயற்சியில் இடம் பெறுகின்றன.

ஆனால் கடைசி நிமிடம் வரை மன்மோகன்சிங் அரசில் அங்கம் பெற்று வலுவான இரண்டு இலாகாக்களைப் பெற்றிருக்கும் பா.ம.க., அணி மாறினால் அதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறது? அணுசக்தி உடன்பாட்டை உடனே ஆதரித்து அறிக்கை வெளியிட்டவர் டாக்டர் ராமதாஸ்தான்.நாளை மன்மோகன்சிங் அரசு மீது கூறப்போகும் குற்றச்சாட்டுக்களில் பா.ம.க.விற்கும் பங்கு உண்டு அல்லவா? எனவே, `எங்கள் தலைமையில் கூட்டணி அமையுங்கள் என்று காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து கோரி வந்தோம். அந்தக் கட்சி முன்வரவில்லை. ஆகவே, அ.தி.மு.க. அணிக்குச் செல்கிறோம்’ என்று பா.ம.க. விளக்கம் தரலாம்.  

நன்றி ரிப்போர்ட்டர்

cartoon_243காவிரி பிரச்சினை பேச்சுவார்த்தையே இன்னும் ஒரு முடிவில்லாம போய்க்கிட்டு இருக்கு. இந்த லட்சணத்துல கர்நாடக முதல்வர் ஒகேனெக்கல் பிரச்சினைக்கு இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ஏற்பாடு செய்யனும்னு சொல்லியிருக்கார்.

பேச்சுவார்த்தையின்னு சொல்லி கர்நாடக அரசு அல்வா கொடுப்பது ஒன்னும் புதுசில்ல.
ஒகேனெக்கல் பிரச்சினையில எத்தனை ரவுன்ட் பேச்சுவார்த்தை நடக்கும்னு பாக்கலாம்.

வாழ்க டமிழன்.
நன்றி குமுதம் பாலா.

 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் காங்கிரசுக்கு நிம்மதியை கொடுத்து, பிஜேபிக்கு நிம்மதியை கெடுத்திருக்கிறது. இந்த எதிர்பாரத வெற்றியின் மூலம் காங்கிரஸ் மக்களவைத்தேர்தலை பிப்ரவரி மாதத்தில் வைத்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இந்த எதிர்பாராத வெற்றியின் மூலம் காங்கிரஸ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை மறக்கலாம்.

அதில் ஒன்று விலைவாசி ஏற்றம். இந்த வருடம் ஏப்ரல் மாதம் உயர்ந்த விலைவாசி இன்னும் குறையவில்லை. பணவீக்கம் அதிகமானதால் விலைவாசி அதிகமாகியது என்று மத்திய அரசு கூறியது. தற்போது பணவீக்கம் பழைய நிலைக்கே வந்துவிட்டது. ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லை. போன வாரம் ஏதோ வரியைக் குறைக்கோம்னு சொல்லி எந்த பொருளோட வரிய குறைச்சாங்கன்னு தெரியல.

மின்வெட்டு இந்தியா முழுக்க இதான் பேச்சு. தமிழ்நாட்டுல இதுதான் மூச்சு. இப்ப இந்த பிரச்சினை எங்க போச்சின்னு தெரியலை.மின்வெட்டை மறைக்கிறதுக்கு இலங்கை பிரச்சினையை கொன்டு வந்தாங்க. ஆனா நிஷா புயல் வந்து அதையும் மறக்கவைத்துவிட்டது. சின்ன புள்ளைங்களுக்கு கையில லாலிபாப் கொடுத்து ஏமாற்றுற மாதிரி பெட்ரோல்,டீசல் விலைய குறைச்சிருக்கிறாங்க.

இப்படியே ஒவ்வொரு விசயமும் ஒரு சில நிகழ்வுகளால் மக்களிடையே மறக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது.

pg2a

அப்படி இப்படினு மாறன் சகோதரர்களும்,கலைஞரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. இதனால பல விசயங்கள் அந்தரத்துல தொங்கும் நிலை வந்துடிச்சி. முக்கியமா இந்த ரெண்டு குடும்பமும் அடிச்சிக்கிட்டதுல சம்பந்தமே இல்லாத மூன்று உயிர் போச்சு. இனிமே அந்த வழக்கு விசாரணை எந்த மாதிரி நடக்குமோ?. ரெண்டு மாததிற்கு முன்னாடிதான் இந்த வழக்கை வேற இடத்துகூ மாத்தனும் அப்படினு பாதிக்கப்பட்ட தரப்புல இருந்து ஒரு கேஸ் போட்டாங்க. அதுவும் என்னாகுமோ?

மொத்ததில் இவர்களின் குடும்ப பகையின் மூலம் மக்களை இளிச்சவாயர்கள் ஆக்கிவிட்டார்கள்

நன்றி குமுதம்.காம்

cartoon_236

கலைஞரும், மாறன் சகோதரர்கள் சேர்ந்தது பற்றி பலவிதமான தகவல்கள் வெளிவருகின்றன. இந்த இணைப்புக்கு பிறகு சன் நெட்வொர்க்கின் பங்குகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்திருக்கிறதாம். இதில் அதிகம் பாதிக்கப்படும் அமைச்சர் ஆற்காட்டார் தான். குடும்பச்சண்டையில் மாறன் சகோதரர்களுக்கு அனைத்துவிதமான நெருக்கடிக்கு பின்னாலில் இருந்தவர்தான் இந்த அமாவாசை அமைச்சர்.இனி அவர் நிலைமை இருதலைக்கொள்ளி எறும்பு தான்.

நன்றி குமுதம் பாலா.

cartoon_234

 

பாமக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியவுடன் காடுவெட்டி குருவை தூக்கி உள்ள போட்டு ஒரு வழி பண்ணிட்டாங்க.இப்ப கூட்டணி வேணும்னதும் ஜாமீன் முதற்கொண்டு எல்லாமே கிடைக்குதுப்பா.

வாழ்க கலைஞரின் ராசதந்திரம்.

நன்றி குமுதம்.காம்

தமிழக மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும், தேர்தலில் தமிழகத்திலிருந்து அதிக எம்.பிக்களைப் பெற வேண்டும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸும் திமுகவும் தனிமைப்பட்டு விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே மேனனையும், நாராயணனையும் கொழும்புக்கு அனுப்ப காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்ததாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து இலங்கையை போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்ற கோரிக்கை வந்தால் போனில் பேசுவார்கள் அல்லது அறிக்கை விடுவார்கள். அத்துடன் நின்று கொள்ளும் இந்திய அரசு.
ஆனால் திடுதிப்பென நேற்று முடிவெடுத்து, இன்றே மேனனையும், நாராயணனையும் இலங்கைக்கு அனுப்பி படு சுறுசுறுப்பாக செயல்பட்டுள்ளது மத்திய அரசு. ஆனால் இதன் பின்னணியில் அரசியல் இருப்பது அரசியல் தெரியாதவர்களுக்கும் தெளிவாகப் புரியம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

உள்ளூரில் தேர்தல் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற கவலையால்தான் ஒன்றுக்கு இரண்டு தூதர்களை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது என்பது அவர்களின் கருத்து.
இதுகுறித்து பிரபல அரசியல் பத்திரிக்கையாளர் கரன் தாப்பர் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் திமுகவுக்கு தற்போது பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக இரு கட்சிகளும் ஒதுக்கப்பட்டு விடும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. எனவேதான் ஓட்டுக்கள் போய் விடக் கூடாது என்ற காரணத்தால் தூதர்களை அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இலங்கையில் வெடிப்பது தமிழகத்தின் மூலமாக தங்களைப் பாதித்து விடக் கூடாது என்ற ஒரே நோக்கம்தான் இதன் பின்னணியில் இருப்பதாக நான் கருதுகிறேன் என்றார்.முன்னாள் இந்தியத் தூதரும், பாதுகாப்புத்துறை நிபுணருமான பத்ரகுமார் கூறுகையில், தற்போது, இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தமாக செயல்படவில்லை என்ற கருத்து தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறை, இனப்படுகொலை நடவடிக்கைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்தத் தவறி விட்டதாக தமிழக மக்கள் பெரும்பான்மையாக கருதுகிறார்கள் என்றார்.

இந்தியா இப்போது அவசரம் அவசரமாக தூதர்களை அனுப்பியுள்ள போதிலும் கூட, ஒரு வேளை நாளையே போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் கூட கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டு விட்ட ஆயிரக்கணக்கான உயிர்கள் திரும்ப வரப் போவதில்லை. எனவே இந்தியாவின் தற்போதைய நடவடிக்கையால் உண்மையான பலன் ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை என்றும் இந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இருப்பினும் கடைசி வரைக்கும் ஒன்றுமே செய்யாமல் விட்டு விட்டார்களே என்ற பேச்சு வந்து விடக் கூடாது என்ற பயத்தால்தான் தூதர்களை அனுப்பியுள்ளது மத்திய அரசு என்றும் இவர்கள் கருதுகிறார்கள்.அதேசமயம், இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்பதில் ஏன் இந்தியா இதுவரை காட்டியிராத அளவுக்கு இவ்வளவு வேகம் காட்டுகிறது என்பதை பெயர் சொல்ல விரும்பாத ஒரு மத்திய அரசு அதிகாரி ஒருவர் இப்படி விளக்குகிறார்..

தெற்காசியாவில் யார் பெரியண்ணா என்பதில் பெரிய போட்டியே நடக்கிறது. இந்தியா தனது ஆதிக்கத்தை யாரிடமும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இந்தியா உதவியிருக்காவிட்டால் அந்த இடத்தில் இப்போது சீனா இருந்திருக்கும். இன்னேரம் ஒட்டுமொத்த தமிழினமும் கூட அழிந்து போயிருக்கும்.அதனால்தான் இந்தியா தலையிட்டது. யாரையும் உள்ளே அனுமதித்து விடக் கூடாது என்ற ராஜதந்திரமும் இதில் அடங்கியிருக்கிறது என்கிறார்.ஆனால் பாதித் தமிழினத்தின் நாடி அடங்கிப் போய் விட்டதே என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

நன்றி தட்ஸ் தமிழ்