திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி உள்பட 6 அமைச்சர்களும், மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர் பதவி உள்பட 6 அமைச்சர் பதவிகளையும் தர காங்கிரஸ் இறுதியாக பேசியுள்ளது. இதற்கு இரு கட்சிகளும் ஒப்புக் கொள்ளும் எனத் தெரிகிறது.

திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை ஒதுக்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்தி வைத்துவிட்டார்.தாங்கள் கேட்கும் அமைச்சர் பதவிகள், துறைகளைத் தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப் போவதாகவும் காங்கிரசிடம் திமுக கூறிவிட்டது. இதையடுத்து சிக்கலைத் தீர்க்க தீவிர பேச்சு வார்ததை நடந்து வருகிறது.முன்னதாக இன்று காலை ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து நாளை தன்னுடன் பதவியேற்கும் அமைச்சர்களின் பட்டியலை தர இருந்தார் மன்மோகன் சிங்.

ஆனால், திமுகவுக்கு அமைச்சர் பதவிகள் ஒதுக்குவதில் பெரும் சி்க்கல் உருவாகியுள்ளதால் அமைச்சர்கள் பட்டியலை உருவாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.தங்களுக்கு எத்தனை கேபினட் அமைச்சர்கள் என்பதிலும் திமுக, மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் மூண்டுள்ளது.

கேட்டது 4+4 – கிடைப்பது 2+1+3:

திமுக 4 கேபினட் அமைச்சர் பதவிகளையும், இணையமைச்சர்களையும் கோரி வந்தது. இதுதொடர்பாக இழுபறி நீடித்தது. 2 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 4 இணையமைச்சர்களைத் தருவதாக காங்கிரஸ் கூறியது.இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன், ராசா ஆகியோர் பிரணாப் முகர்ஜி மற்றும் குலாம் நபி ஆசாத்தை சந்தித்துப் பேசினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர்கள், ஒரு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி மற்றும் 3 துணை அமைச்சர் பதவிகளைத் தருவதாக காங்கிரஸ் தீர்மானமாக கூறியது.இதற்கு தயாநிதி மாறன், ராசா உடனடியாக பதிலளிக்கவில்லையாம். இருப்பினும் திமுக தரப்பு, இந்த புதிய ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ளலாம் எனத் தெரிகிறது.

அதேபோ, மம்தா பானர்ஜி, திமுகவுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் தரப்படுகிறதோ அதே அளவுக்கு கேபினட்-இணையமைச்சர்களோடு கூடுதலாக ஒரு இணையமைச்சர் பதவி தர வேண்டும் என நிபந்தனை விதித்து வந்தார்.மேலும் ரயில்வே துறையையும் அவர் கேட்டு வந்தார். இதே துறையைத்தான் திமுகவும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் காங்கிரஸ் தரப்பு சற்று முன்பு மமதாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில், மமதா கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 3 துணை அமைச்சர் பதவிகள் கொடுப்பதாக காங்கிரஸ் கூறியதாம்.

திமுகவை விட கூடுதலாக ஒரு அமைச்சர் பதவி என்ற வறட்டுப் பிடிவாதத்தில் இருந்து வந்த மமதா, இப்போது அந்த நிலையிலிருந்து இறங்கியுள்ளார். திமுகவை விட கூடுதலாக ஒரு கேபினட் அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் கூறுவதால் இந்த இறக்கமாம்.கடந்தமுறையை விட 60 இடங்களில் அதிகமாக வென்றுள்ள காங்கிரஸ் தனக்கு இம்முறை கூடுதலாக அமைச்சர் பதவிகளை எடுத்துக் கொள்ளும் திட்டத்தில் உள்ளது.

பாலு-ராசாவுக்கு காங். எதிர்ப்பு?:

இதற்கிடையே, டி.ஆர்.பாலு, ராசாவுக்கு இம்முறை அமைச்சர் பதவியே தர மாட்டோம் என்று காங்கிரஸ் கூறுவதாகவும் அதை திமுக கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிகிறது.யாருக்கு அமைச்சர் பதவி என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம், இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலையிடவே கூடாது என்று திமுக கூறிவி்ட்டதாகத் தெரிகிறது.பாலுவுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில், பாலுவுக்கு சபாநாயகர் பதவியைத் தர வேண்டும் என வற்புறுத்தி வருகிறதாம் திமுக.

திமுகவைப் பொறுத்தவரை பாலு, தயாநிதி, ராசா, அழகிரி ஆகியோருக்கு என 4 கேபினட் அமைச்சர் பதவிகள், கனிமொழிக்கு ஒரு தனிப் பொறுப்புடன கூடிய இணையமைச்சர் பதவி, 3 இணையமைச்சர் பதவிகளையும் கோரி வந்த நிலையில், தற்போது தற்போது 6 பதவிகளே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது.எனவே மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு கேபினட் அமைச்சர் பதவிகளும், கனிமொழிக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியும் கிடைக்கலாம். டி.ஆர்.பாலு, ராசா ஆகியோர் திராட்டில் விடப்படலாம் என தெரிகிறது.

திமுகவுக்கு ரயில்வே இல்லை..

அதேபோல திமுக அழுத்தமாக வலியுறுத்தி வந்த ரயில்வே துறையும் கிடைக்காத நிலை உள்ளது. அந்தத் துறையை மமதாவுக்குக் கொடுக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அத்துறையை மமதாவே வகிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அதற்குப் பதில் திமுகவுக்கு சுகாதாரம் கொடுக்கப்படலாம். இந்தத் துறையை அழகிரி[^] க்கு திமுக கொடுக்கக் கூடும். அதேபோல தயாநிதி மாறனுக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை கிடைக்காது எனத் தெரிகிறது. அதற்குப் பதிலாக இரும்பு எஃகு துறை கிடைக்கக் கூடும்.திமுக முன்பு, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து, சுற்றுச்சூழல் ஆகியவையும், இணையமைச்சர் பதவிகளில் நலத்துறை, மின்துறை, உள்துறை, நிதி என பல துறைகளைக் கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியிலிருந்து ஆதரவு மிரட்டல்…

முன்னதாக தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், வெளியில் இருந்து ஆதரிக்கப் போவதாக திமுக கூறியதாகத் தெரிகிறது.கருணாநிதி மற்றும் மமதா பானர்ஜியின் இந்த பிடிவாதமான இழுபறியால்தான் மன்மோகன் சிங்கால் அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்தே ஜனாதிபதியை இன்று காலை சந்தித்து பட்டியலைத் தர இருந்த பிரதமர் அந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டார்.
பிரச்சனை தீர்ந்தால் இன்று மாலை அமைச்சர் பட்டியலை ஜனாதிதியிடம் பிரதமர் வழங்குவார்.

நன்றி தட்ஸ் தமிழ்

இதுவரை இலங்கையில் இப்படி ஒரு மோசமான, ரத்தக்களறியை நான் பார்த்ததில்லை என்று முல்லைத்தீவில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரசு டாக்டர் வி.சண்முகராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முழுவதும் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த பயங்கர பீரங்கித் தாக்குதலில் 2000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது இலங்கை ராணுவம்.

ஆயிரக்கணக்கானோர் கை, கால்களை இழந்து ரத்த வெள்ளத்தில் படுகாயமுற்றுள்ளனர். அவர்களை சிகிச்சைக்குக் கொண்டு செல்லக் கூட வழியில்லாத அவல நிலை காணப்படுகிறது.அங்கு காணப்படும் நிலை குறித்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரசு டாக்டர் வி.சண்முகராஜா கூறுகையில், எனது வாழ்நாளில் இப்படி ஒரு ரத்தக்களறியை நான் பார்த்ததில்லை. உடல்கள் வந்து கொண்டே உள்ளன. அதேபோல காயமுற்றவர்களும் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளனர். பலி எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என அஞ்சுகிறேன்.

சில உடல்களை எடுத்து வர முடியாத அளவுக்கு சிதைந்து போய் விட்டதால் அவற்றை ஆங்காங்கே புதைத்துக் கொண்டிருக்கின்றனர்.பீரங்கிக் குண்டுகளில் பல மருத்துவமனைக்கு வெகு அருகிலும் வந்து விழுந்துள்ளன. இதனால் மருத்துவமனையில் இருந்த பலரும் பதுங்கு குழிகளுக்கு மாற்றப்பட்டனர்.

எங்களிடம் தற்போது ஓரளவு மருந்துகள் உள்ளன. ஆனால் போதிய டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் இல்லை. எனவே காயமுற்று வருகிறவர்களுக்கு முதலில் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்து வருகிறோம். எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை.உயிரிழந்தவர்களின் உடல்களைப் புதைக்கக் கூட ஆட்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. இதற்காக தொண்டர்களைத் தேடி வருகிறோம் என்றார்.

நன்றி.. தட்ஸ் தமிழ்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அணிக்கும், அதிமுக அணிக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று  லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளுக்கும்  அடுத்த படியாக தேமுதிகவிற்கு  மக்களின் ஆதரவு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் மற்றும் தமிழ் வழி முதுகலை ஊடக கலைகள் துறை மாணவர்கள் பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலின் பேரில் இம்மாதம் 1-ந் தேதியிலிருந்து, 10-ந் தேதி வரை தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், மக்களை சந்தித்து கருத்துகளை சேகரித்துள்ளனர்.

ஆய்வு முடிவுகள் வெளியீடு
இந்த ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  அகில இந்திய கத்தோலிக்க மாணவர் சங்கத்தின் ஆலோசகர் ஹென்றி ஜெரோம் இந்த ஆய்வினை இன்று வெளியிட்டார்.  பேராசிரியர் ராஜநாயகம், ஆய்வுத் துறை மாணவி சங்கமித்திரை  ஆகியோர் இந்த களஆய்வு குறித்த விவரங்களை பத்திரிகையாளர் களிடம் விளக்கிக் கூறினார்கள்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான அணி 34.9 சதவிகிதம் வாக்குகள் பெறும் என்றும், திமுக தலைமையிலான அணி 34.5 சதவிகிதம் வாக்குகள் பெறும் என்றும் இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேமுதிகவுக்கு 3-ம் இடம்

இதற்கு அடுத்தபடியாக 12.3 சதவிகித வாக்குகளை தேமுதிக பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தனியாக 27.3 சதவிகித வாக்காளர்களின் ஆதரவையும், திமுக 26.5 சதவிகித  வாக்காளர்களின் ஆதரவையும் பெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக அணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 6.4 சதவிகிதம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகள் 1.2 சதவிகிதம், முஸ்லிம் லீக் கட்சிக்கு 0.4 சதவிகிதம் மக்களின் ஆதரவு உள்ளது. அதிமுக  அணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு 2.4 சதவிகிதம், பாமகவுக்கு 3 சதவிகிதம், சிபிஐ-1 சதவிகிதம், சிபிஎம் கட்சிக்கு 1.2 சதவிகிதம் ஆதரவு உள்ளது. பிஜேபிக்கு 3.1 சதவிகிதம் ஆதரவும் அந்த அணியில் சமக இடம் பெற்றால்  அவர்களுக்கு 0.4 சதவிகிதம் வாக்காளர்கள் ஆதரவு இருப்பதாக இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிறகட்சிகள் மற்றும் சுயேட்சை களுக்கு 1.7 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என்றும், 13.1 சதவிகித வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கவில்லை என்றும், அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.  3 ஆண்டு திமுக ஆட்சி திருப்தி அளிப்பதாக 47.5 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். அதிருப்தி அளிப்பதாக 44.6 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான 5 ஆண்டுகால மத்திய ஆட்சி திருப்தி அளிப்பதாக 43.3 சதவிகிதத்தினரும்,  அதிருப்தி அளிப்பதாக 42.2 சதவிகிதத்தினரும் கூறியுள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சனை

தமிழகத்தை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனைதான் இந்த தேர்தலில்  முதலிடம் பெறுவ தாகவும் (28.8 சதவிகிதம்) விலைவாசி உயர்வு (23.7 சதவிகிதம்), மற்ற பிரச்சனைகள் அடுத்தபட்சம்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் விலைவாசி உயர்வுதான் (24.1 சதவிகிதம்) முன்னணியில் உள்ளது. தீவிரவாதம், பயங்கரவாதம் (24.4 சதவிகிதம்), இலங்கை தமிழர் பிரச்சனை(19.4 சதவிகிதம்), மேலும் மின்வெட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவையும் முக்கிய பிரச்சனை களாக மக்கள் கருதுகிறார்கள்.

அதிமுக மீது நம்பிக்கை

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் ஆய்வுக்கு எடுத்து கொண்ட 5 பிரச்சனைகளில்,  இலங்கை தமிழர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கை பராமரித்தல், மின்வெட்டு ஆகிய பிரச்சனைகளை அதிமுக அணி வெற்றிபெற்றால்தான் தீர்க்க முடியும் என்றும், வேலை யில்லா திண்டாட்டத்தை மட்டுமே திமுக அணி தீர்க்க முடியும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அகில இந்திய அளவில் இலங்கை தமிழர் பிரச்சனை (31.4சதவிகிதம்), மின்சாரவெட்டு(24.6சதவிகிதம்), வேலையில்லா திண்டாட்டம் (28.9 சதவிகிதம்) இந்த பிரச்சனைகளை எந்த அணி வெற்றி பெற்றாலும் தீர்க்க முடியாது என்று அதிக அளவிலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சம பலத்தில் திமுக-அதிமுக

திமுக அணியும், அதிமுக அணியும் தற்போது சமவலுவுடன் களத்தில் நிற்பதாகவும், கட்சி ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் சமசெல்வாக்குடன் இருப்பதாலும், இதுவரையிலும் முடிவெடுக்காத நிலையில் உள்ள 13.1 சதவிகித வாக்காளர்களின் முடிவே இவர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.திருமங்கலம் தேர்தலை போல, தாங்கள் நன்கு ‘கவனிக்க’ப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பெரும்பான்மையான வாக்காளர் களிடம் இருப்பதாகவும், அந்த எதிர்பார்ப்பும் இலங்கை பிரச்சனையை கையாளும் முறையும், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்று லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

இலங்கை விவகாரத்தில் திடீர் திருப்பமாக விடுதலைப் புலிகள் ஆதரவு அரசியல் கட்சியான தமிழர் தேசிய கூட்டமைப்பை (TNA) இந்தியா பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால், போர் நிறுத்தத்துக்கு இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போருக்கும் உதவிக் கொண்டிருப்பதாகக் கூறி இந்த அழைப்பை ஏற்க அந்தக் கட்சி மறுத்துவிட்டது.இந்தக் கட்சிக்கு இலங்கை நாடாளுமன்றத்தி்ல் 22 எம்பிக்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் அமைச்சர்களையும் சந்தி்க்க காத்துக் கிடந்தும் கூட அவர்களை சந்திக்க யாரும் முன் வரவில்லை.

இந் நிலையில் தமிழகத்தில் இலங்கை விவகாரம் காங்கிரஸ்-திமுக கூட்டணியை மொத்தமாக பதம் பார்க்கப் போவது உறுதி என பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறுவதையடுத்து ‘டேமேஜ் கண்ட்ரோலில்’ குதித்துள்ளது மத்திய அரசு.இந்த வகையில் திடீரென வரும் 14, 15ம் தேதிகளி்ல் தன்னை சந்திக்க வருமாறு இந்திய வெளியுறுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இந்தக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பிரச்சனை பற்றிப் பேச பலமுறை இலங்கை சென்ற மேனன் ஒரு முறை இந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பு நிராகரிப்பு:

இந் நிலையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது பேச்சுவார்த்தைக்கான நேரமல்ல என அந்தக் கூட்டமைப்பின் எம்பியான ஸ்ரீகாந்தா கூறியுள்ளார்.அவர் கூறுகையில், இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல, போருக்கும் துணை புரிந்து கொண்டு்ள்ளது. இந்தப் போரில் அப்பாவி மக்கள் கொலையாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவுடன் பேச நாங்கள் விரும்பவில்லை.

போரை நிறுத்த இந்தியா ஏதாவது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்திய அதிகாரிகளை சந்திப்போம் என்றார்.அதே போல இந்தக் கூட்டமைப்பின் திரிகோணமலை எம்பியான துரைரத்தினசிங்கம் கூறுகையில், இது மிகத் தாமதமாக வந்துள்ள அழைப்பு. இந்திய அதிகாரிகளையும் தலைவர்களையும் நாங்கள் சந்திக்க வரும்போது மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் செத்து மடிந்திருப்பார்கள். பாதுகாப்பு வளையத்திலேயே ராணுவம் நடத்தும் குண்டு வீச்சுக்கு குழந்தைகளும் பெண்களும் பலியாகிக் கிடப்பார்கள்.இதனால் முதலில் பாதுகாப்பு வளையத்தில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று இலங்கையை இந்தியா தடுத்து நிறுத்தினால் வேண்டுமானால் பேச்சுவார்த்தை குறித்து யோசிக்கலாம். தாற்காலிக போர் நிறுத்தத்துக்காவது இந்தியா வழி செய்ய வேண்டும் என்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்

மக்களவை தேர்தலில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது மதுரை தொகுதியில் மு.க.அழகிரியும்,பெரம்பலூரில் நடிகர் நெப்போலியனும், ராமநாதபுரத்தில் நடிகர் ரித்தீஷûம் போட்டியிடுகின்றனர்.  மதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்த எல்.கணேசன், செஞ்சி ராமச் சந்திரன், மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.

மக்களவை தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் திமுக,காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் திமுகவுக்கு 21 இடமும், காங்கிரசுக்கு 16 இடங்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும், முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டன.

அதன்படி திமுக போட்டியிடும் 21 இடங்களுக்கு கடந்த 3 நாட்களாக  கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவால யத்தில் நேர்காணல் நடைபெற்றது. முதலமைச்சரும், திமுக தலை வருமான கருணாநிதி தலைமையில் இந்த நேர்காணல் நடந்து முடிந்தது. நேர்காணலுக்கு பின் செய்தியாளர் களிடம் பேசிய கருணாநிதி, திமுக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். அதன்படி இன்று 21 வேட்பாளர் களை கொண்ட திமுகவின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி மதுரை மக்களவை தொகுதியில் மு.க.அழகிரி போட்டி யிடுகிறார். நடிகர் நெப்போலியன் பெரம்பலூர் தொகுதியிலும், நடிகர் ரித்தீஷ் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், ஆ.ராசா நீலகிரி தொகுதியிலும், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சை தொகுதியிலும் போட்டியிடு கின்றனர். இந்த வேட்பாளர் பட்டியலில் பல புதுமுகங்களும் இடம் பிடித்துள்ளனர்.


வேட்பாளர் பட்டியல் வருமாறு:-

1. வடசென்னை-டி.கே.எஸ். இளங்கோவன். 2. மத்திய சென்னை- தயாநிதி மாறன். 3. தென் சென்னை-ஆர்.எஸ்.பாரதி.   4. ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு. 5.திருவள்ளூர்-காயத்ரி ஸ்ரீதரன். 6. அரக்கோணம்-ஜெகத் ரட்சகன்.   7. கிருஷ்ணகிரி-சுகவனம். 8. தர்மபுரி- தாமரைச் செல்வன். 9.நீலகிரி-ஆ.ராசா.  10. கள்ளக்குறிச்சி- ஆதிசங்கர்.   11. பொள்ளாச்சி-சண்முக சுந்தரம்.

12. பெரம்பலூர்-நடிகர் நெப் போலியன். 13. தஞ்சை-எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 14. திருவண்ணாமலை- வேணு கோபால். 15. நாமக்கல்-காந்தி செல்வன். 16.கரூர்-கே.சி. பழனிச்சாமி.

17.மதுரை- மு.க.அழகிரி. 18. நாகை- ஏ.கே.எஸ்.விஜயன், 19. ராமநாதபுரம் – நடிகர் ஜே.கே.ரித்தீஷ். 20. தூத்துக்குடி-எஸ்.ஆர்.ஜெயதுரை. 21. கன்னியாகுமரி ஹெலன் டேவிட்சன். இந்த பட்டியலை முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.
மதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்த எல். எல்.கணேசன், செஞ்சி ராமச் சந்திரன், மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு சீட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் யாருக்கும் திமுக பட்டியலில் இடம் ஒதுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 மந்திரிகளுக்கு  சீட் இல்லை
திமுக வேட்பாளர் பட்டியலில் நான்கு மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.  மேலும் சில எம்.பி.க்களுக்கும் சீட் அளிக்கப்படவில்லை. முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்ட திமுக வேட்பாளர் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பழனி மாணிக்கம் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, வெங்கடபதி, ராதிகா செல்வி ஆகியோருக்கு இந்த முறை இடம் அளிக்கப்படவில்லை.
மேலும் செ.குப்புசாமி, கிருஷ்ண சாமி, பவானி ராஜேந்திரன் ஆகி யோருக்கும் சீட் கிடைக்கவில்லை.

மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா டுடே-மார்க்-எசி நீல்சன் ஆகியவை இணைந்து நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கூட்டணிக்கு 190 முதல் 199 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 172 முதல் 181 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.மூன்றாவது அணிக்கு 169-178 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு 21 இடங்களும், திமுக கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. திமுக, சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜன் சக்தி மற்றும் இடதுசாரிகள், பாமக ஆகியவை ஆதரித்தால் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும் என்கிறது கருத்துக் கணிப்பு.

உத்தரப் பிரதேசத்தில்…:

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கடந்த தேர்தலில் 11 இடங்களில் வென்றது. இம்முறை அவர் 30 இடங்களைப் பிடிப்பார். சமாஜ்வாடிக் கட்சி 29 இடங்களில் வெல்லும். இது கடந்த தேர்தலைவிட 6 இடங்கள் குறைவு. பாஜகவுக்கு 14 இடங்கள் கிடைக்கும். இது கடந்த தேர்தலைவிட 4 இடங்கள் அதிகம். காங்கிரசுக்கு 2 இடங்கள் குறைவாகக் கிடைக்கும்.

பஞ்சாபில்..

பஞ்சாபில் பாஜக-சிரோமணி அகாலிதளம் கூட்டணி 10 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் மட்டும் வெல்லும்.

 ஹரியாணாவில்…

 ஹரியாணாவில் காங்கிரஸ் 8 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் மட்டுமே வெல்லும். தமிழகத்தில்…

தமிழகத்தி்ல் அதிமுக கூட்டணிக்கு 21 இடங்களும் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும். தேமுதிக பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது.

 டெல்லி…

டெல்லியில் காங்கிரஸ் 6 இடங்கள், பாஜக ஒரு இடத்தில் வெல்லும்.

ஆந்திரா..

ஆந்திராவில் காங்கிரஸ் 21 இடங்களிலும், தெலுங்கு தேசம்-டி.ஆர்.எஸ். கூட்டணி, சிரஞ்சீவி கட்சி ஆகியவை 18 இடங்களிலும் வெல்லும். இதன்மூலம் காங்கிரசுக்கு கடந்த தேர்தலைவிட 8 தொகுதிகள் குறையும். கடந்த முறை தெலுங்கு தேசத்துடன் இணைந்து 5 இடங்களில் வென்ற பாஜகவுக்கு இம்முறை ஒரு இடமும் கிடைக்காது.

கர்நாடகம்…

 கர்நாடகத்தில் ஆளும் பாஜக 18 இடங்களில் வெல்லும். காங்கிரசுக்கு 6 இடங்களும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 4 இடமும் கிடைக்கும். இதன்மூலம் காங்கிரஸ் 2 இடங்களை இழக்கிறது. பாஜக கடந்த தேர்தலில் வென்ற அதே இடங்களை வெல்கிறது.

 கேரளா..

கேரளத்தில் இடதுசாரிக் கூட்டணிக்கு 8 இடங்களே கிடைக்கும். கடந்த தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்லாத காங்கிரக்கு இம்முறை 12 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது.

மேற்கு வங்கம்..

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-மம்தா பானர்ஜி கூட்டணிக்கு 16 இடங்களிலும் இடதுசாரிகளுக்கு 26 இடங்களும் கிடைக்கும். இதன்மூலம் இடதுசாரிகளுக்கு 9 இடங்கள் இழப்பு ஏற்படும். காங்கிரசுக்கு 10 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் வென்ற பாஜகவுக்கு இம்முறை அதுவும் கிடைக்காது.

பிகார்..

 பிகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணிக்கு 21 இடங்கள் கிடைக்கும். லாலு-பாஸ்வான் கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்கும். காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைக்காது.

 ஒரிஸ்ஸா..

 ஒரிஸ்ஸாவில் கடந்த முறை 2 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரசுக்கு இம்முறை 9 இடங்களும் ஆளும் பிஜூ ஜனதா தளத்துக்கு 10 இடங்களும் கிடைக்கும். கடந்த முறை 7 இடங்கள் வென்ற பாஜகவுக்கு இம்முறை 2 இடங்களே கிடைக்கும்.

மகாராஷ்டிரா..

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்-சரத்பவார் கூட்டணி 26 இடங்களில் வெல்லும். பாஜக-சிவசேனா கூட்டணி 21 இடங்களில் வெல்லும். இதன்மூலம் இம்முறை பாஜக-சிவசேனா கூட்டணிக்கு 3 இடங்கள் குறையும்.

 குஜராத்…

 குஜராத்தில் பாஜக 17 இடங்களில் வெல்லும். இது கடந்த தேர்தலை விட 3 தொகுதிகள் அதிகமாகும். கடந்த முறை 12 இடங்களில் வென்ற காங்கிரஸ் இப்போது 9 இடங்களில் வெல்லும்.

ராஜஸ்தான்..

ராஜஸ்தானில் பாஜக 13 இடங்களில் மட்டுமே வெல்லும். கடந்த முறை இங்கு 21 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 4 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் இம்முறை 12 இடங்களில் வெல்லும். இவ்வாறு கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களிலும் பாஜக கூட்டணி 184 இடங்களிலும் இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் 125 இடங்களிலும் வென்றது நினைவுகூறத்தக்கது

நன்றி தட்ஸ் தமிழ்…

அதிருப்தியில் கதர் சட்டைகள்

சூரியக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நடந்து முடிந்து விட்டாலும் சலசலப்பு இன்னமும் ஓயவில்லை.காலம் காலமாக தங்கள் வசமிருந்த ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி (முன்பு நாகர்கோயில்) மக்களவைத் தொகுதிகள் தற்போது சூரியக் கட்சி எடுத்துக் கொண்டிருப்பது, கதர் சட்டைகள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளதாம். இதனால், சம்மந்தப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் கதர் சட்டைப் பிரமுகர்கள் சோர்ந்து போயுள்ளனராம். தொகுதி ‘கை’விட்டு போனதன் பின்னணியில், தென் மாநில விவகாரங்களை கவனிக்கும் அஞ்சா நெஞ்சர் இருக்கலாம் என்பது அவர்களது சந்தேகமாம். அஞ்சா நெஞ்சரின் மகள் கன்னியாகுமரியில் நிறுத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களிலும் பேசப்படுகிறது.

***

நொந்துபோயிருக்கும் புயல்

இலைக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தைகள் ஜரூராக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மீது புயல் தலைவர் அதிருப்தியில் இருக்கிறாராம். நேற்று வந்த மாம்பழக் கட்சித் தலைவருக்கு ராஜ மரியாதை அளித்து, கேட்ட தொகுதிகளை வாரி வழங்கியுள்ள தலைவி, தனது விஷயத்தில் இன்னமும் சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறதாம். கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் எதிர் முகாமிற்குத் தாவி வருவதால் இம்முறை இடங்கள் கேட்டுப் பெறுவதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறதாம். தோட்டத்தில் நேற்றிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்க, 5 தொகுதிகள் என்ற முடிவு இன்று மாலை வெளியாகும் என்கிறார்கள்.

***

அடுத்த பிரமுகருக்கு குறி

இதுவும் புயல் கட்சியைப் பற்றிய தகவல்தான். ஏற்கனவே தொகுதிப் பங்கீடு விஷயத்தில் கவலையில் ஆழ்ந்திருக்கும் கலிங்கப்பட்டியாருக்கு, மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பம்பரக் கட்சியின் தென் மாவட்ட எம்.எல்.ஏ. ஒருவரை தங்கள் பக்கம் இழுக்க அறிவாலய வட்டாரம் தீவிரம் காட்டி வருகிறதாம். இதற்காக, சம்மந்தப்பட்ட நபரை அஞ்சாநெஞ்சரே தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம். விரைவில், அடுத்த இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

***

இடம் மாறும் சிறுத்தை?

சிதம்பரத்தில்தான் போட்டி என்ற உறுதிப்பாட்டில் இருந்த சிறுத்தைத் தலைவர், தற்போது விழுப்புரத்தில் களமிறங்கலாமா என்று யோசித்து வருகிறாராம். இதுவரை உறவாடி வந்த மாம்பழக் கட்சியை எதிர்த்து சிதம்பரத்தில் நிற்பது சங்கடமாக இருக்கும் என்பதால், இந்த யோசனையைப் பரிசீலித்து வருவதாக சிறுத்தைக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நன்றி வெப்துனியா

டாக்டர் ராமதாஸை ‘டாக்டர் அண்ணன்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறிப்பிட்டார். அதே போல ஜெயலலிதாவை பாமக நிறுவனரும் மீண்டும் ‘அன்புச் சகோதரி’ என்றார்.
போயஸ் தோட்டத்தி்ல் தன்னை ராமதாஸ் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:

மக்களைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று அதிமுக-பாமக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.பாமக நிறுவனர் அண்ணன் டாக்டருக்கும் எனக்கு நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்குவது என்றும் 2010ம் ஆண்டில் ஒரு ராஜ்யசபா இடத்தை அவர்களுக்கு ஒதுக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று ஒரு மகிழ்ச்சியான நாளாகும். 8 வருடங்களுக்குப் பிறகு அண்ணன் என்னை சந்தித்து கூட்டணி உடன்பாட்டை செய்து கொண்டுள்ளார்.

நாடெங்கும் இது ஒரு வெற்றிக் கூட்டணி, வெல்ல முடியாத கூட்டணி என்பதை உணர்ந்துள்ளார்கள் என்றார்.மற்ற கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்து கேட்டபோது, மற்ற தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒரு சில தினங்களில் உடன்படிக்கை ஏற்பட்டு விடும் என்றார்.

(மீண்டும்) ‘அன்புச் சகோதரி’:

பின்னர் ராமதாஸ் கூறுகையில், அதிமுக பொதுச் செயலாளர் அன்புச் சகோதரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது வெற்றிக் கூட்டணியாகும். புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெல்லும்.

அது சாதாரண வெற்றியாக இருக்காது. மாபெரும் வெற்றியாக இருக்கும் என்றார்.

1999ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது முதல் பாமக இதுவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்ற கணக்கில் அணிகளை மாற்றி வந்துள்ளது.

2001 …

2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக.ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பாமக.

காரணம்: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் அவரை சந்திக்க கோட்டைக்கு சென்றார் ராமதாஸ். முதல்வர் அறைக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவே இல்லை. காரணம் அவர் ஜெயலலிதாவை சந்திக்கப் போனது பாமகவுக்கு ராஜ்யசபா சீட் கோரி. இதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் ராமதாஸ்.அடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து திமுக கூட்டணிக்கு வந்தார்.

2004…

2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது.இந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரானார்.

2006…

2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ்.ஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும்.

2008 …

2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.

2009…

2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஒருமுறை அணி மாறியுள்ளது பாமக. இந்த முறை அதிமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்..

5 ஆண்டுகள் முன்பு வரை சென்னையில் மாநகர பேருந்துகளில் பெரும்பலானவை சாதாரண
பேருந்துகளாக வலம் வந்தன. அ.தி.மு.க ஆட்சியில் M போர்டு பேருந்துகள் என்பது
அறிமுகப்படுத்தப்பட்டு மினிமம் டிக்கெட் விலை ரூ 3 ஆக உயர்த்தப்பட்டது. இவ்வகை பேருந்து

பேருந்துகளில் மாதாந்திர பயணச்சீட்டு செல்லாது என அறிவிப்பு வேறு.இவ்வகை பேருந்துகள் மிகக்குறைவாகவே அ.தி.மு.க ஆட்சியில் இயக்கப்பட்டது.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட M சர்வீஸ் பேருந்துகளை அதிகமாக்கியது.மாதாந்திர பயணச்சீட்டு செல்லும் என அறிவிப்பு செய்யப்பட்டது.இந்த அறிவிப்பு என்னை போன்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏனெனில் சாதாரண பேருந்து + M சர்வீஸ் பேருந்து என இயக்கப்ப்டுவதால் சிரமமின்றி போய் வரலாம் + நெரிசல் குறைவாகும் என்கிற எண்ணம். ஆனால் போகப்போக தான் புரிந்தது ஆட்சியாள்ர்களின் எண்ணம். சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு M சர்வீஸ்களும்,எக்ஸ்பிரெஸ் சர்வீஸ்கள்
அதிகரிக்கப்பட்டு கட்டணங்கள் மறைமுகமாக உயர்த்தப்பட்டது.ஆனால் நெரிசல் மிகுந்த நேரங்களில் சாதாரண பேருந்துகள் & M சர்வீஸ் குறைவாக இயக்கப்பட்டு எக்ஸ்பிரெஸ் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகிறது.இக்காரணத்தால் சாதாரண பேருந்துகள் & M சர்வீஸ் பேருந்துகளில் நெரிசல் நேரங்களில் ஏற முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் நமது மாநகர போக்குவரத்து கழகம் டீலக்ஸ் பஸ்களை அறிமுகப்படுத்தியது.முதலில் எண்ணிக்கை குறைவாகவும்,திருவள்ளூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளாக இயக்கப்பட்டது.பின்பு இதன் சர்வீஸ்கள் மாநகருக்குள் அதிகரிக்கப்பட்டு நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிகமாக இயக்கப்ப்டுகிறது.இவ்வகை பேருந்துகளில் சாதாரண பேருந்தை விட இரட்டிப்பு கட்டணம் வேறு.இக்காரணங்களினால் சீசன் டிக்கெட் பெரும் அவதிக்குள்ளானார்கள். நெரிசல் நேரங்களில் சாதாரண பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் சீசன் டிக்கெட் வைத்திருப்போர் நிலைமை பரிதாபம்தான்.அந்த நேரங்களில் டீலக்ஸ் பேருந்துதான் அதிகமாக இயக்கப்படுகிறது. முதலில் இவ்விசயத்தை எதிர்க்கட்சிகள்கடுமையாக கண்டனம் தெரிவித்து பின் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன.ஆட்சியில் இருப்பவர்க்ளுக்கு இதை பற்றி என்ன கவலை.தெருவுக்கு தெரு மதுபான கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை இதில் காண்பிப்பார்களா?…….

சுவாமி, தேனியில் ஜெயலலிதாவின் பொதுக்கூட்டத்தையும் பேச்சையும் `லைவ்’வாக சன் நியூஸ் சேனலில் பார்த்தீர்களா, இல்லையா?”

“சேனலை மாற்றிக் கொண்டிருந்தபோது தற்செயலாகத்தான் பார்த்தேன். நேரடி ஒளிபரப்பு. நம்பவே முடியவில்லை. ஏன் இந்த மாற்றம்? என்ன பின்னணியாம்?”

“விரிவாகவே சொல்கிறேன்… அறிவாலயத்தில் சன் டி.வி. இருந்தபோது, தமிழகத்தில் எந்த இடத்திலிருந்தும் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்காக 14 ஓ.பி. வேன்கள் வாங்கியிருந்தனர். இடமாற்றத்தின்போது இவையனைத்தும் மாவட்ட நிருபர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், குறிப்பிடும்படியாக எந்த ஒளிபரப்பும் இல்லை. உள்ளபடியே ஜெயலலிதாவின் தேனி கூட்டத்தை ஜெயா டி.வி.தான் நேரடியாக ஒளிபரப்பவுள்ளதாகக் கூறிக்கொண்டிருந்தார்கள். திடீரென்றுதான் `நாம் ஒளிபரப்பினால் என்ன?’ என்ற யோசனை சன் நெட்வொர்க்கில் உதித்ததாம். உபயம் முரசொலி செல்வம்தானாம். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொண்டு, உரிய வகையில் ஒப்புதல் பெற்றார்களாம்.”

“இது ஜெயலிதாவுக்குத் தெரியுமா?”

“அவருக்குத் தெரியாமல் அங்கே அணுவும் அசையுமா? ஆக, கலைஞரை வாங்கு வாங்கென வாங்கிய ஜெயலலிதாவின் உரை, சன் நியூஸ் உதவியுடன் உடனுக்குடன் ஒளிபரப்பானது. இரவே இது மிகப் பெரிய சர்ச்சையாக மாறிவிட்டிருக்கிறது. உடனடியாக, இதை ஈடு செய்யும் வகையில் திங்கள்கிழமை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தைக் கலைஞர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியையும் சன் நியூஸ் நேரடியாக ஒளிபரப்பியது.”

“எதனால் இப்படியெல்லாம் நடக்கிறதாம் பெண்ணே?”

“இதுபற்றி விசாரித்தபோது, நாங்கள் தொழிலைத் தொழிலாக நடத்துகிறோம். எங்களுக்கு கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், வைகோ எல்லாரும் ஒன்றுதான். சென்னையில் நடைபெறவுள்ள தே.மு.தி.க.வின் இளைஞரணி மாநாட்டை ஒளிபரப்புவது பற்றிக்கூட பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு நல்ல எதிர்க்கட்சிக்குரிய வகையில் செயல்படுவோம் என்று கூறுகிறதாம் சன் நெட்வொர்க் வட்டாரம்.”

“அப்புறம் ஏன் மதுரையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட வைகோவின் பேச்சு திடீரென்று நிறுத்தப்பட்டதாம்?”

“அது மிகவும் கடுமையாக இருந்த நிலையில், இந்த அளவுக்கு தி.மு.க.வை எதிர்க்க வேண்டுமா என்கிற தடுமாற்றம் வந்துவிட்டதாம். அதனால்தான் பாதியில் நிறுத்தப்பட்டதாம்.”

“இதனிடையே, தி.மு.க.விலிருந்து தயாநிதிமாறன் நீக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு வதந்தி பரவியதே?”
“ஆமாம் சுவாமி. `லைவ்’ ஒளிபரப்பு `கட்’டான சிறிது நேரத்தில் தான் இந்த வதந்தி. எனினும் பின்னர் `இல்லை’ என்று உறுதியானது. ஆனாலும் இதுபற்றிய சர்ச்சை தொடரும் என்றுதான் நினைக்கிறேன்…”

“ஆக, ஒரு புதிய பாதையில்தான் மாறன் பிரதர்ஸ் பயணிக்கிறார்களா?”
“ஆமாம். மேலும், அரசின் அலட்சியம், செயல்படாத் தன்மை, ஊழல் போன்ற செய்திகளைத் தருவதற்காக அவர்களுடைய நாளிதழில் தனி டீமே ஏற்படுத்தப்பட்டிருக்கிறதாம். சன் நெட்வொர்க்கிலும் இவ்வாறு உருவாக்கப்படுகிறதாம். வலுவான செய்தி தருவோருக்கு பரிசெல்லாம்கூட உண்டாம்.“கலைஞர் மிகுந்த கோபத்தில் இருப்பாரே?”
“அப்படித்தான் சொல்கிறார்கள். அந்தத் தொலைக்காட்சியிலுள்ள மன்னரான நபர் மீதுதான் கலைஞருக்குக் கடுங்கோபமாம். ஏற்கெனவே, பத்தாண்டுகளுக்கு முன், நீண்ட இடைவேளைக்குப் பிறகு கட்சித் தலைமை அலுவலகத்துக்கு ஜெயலலிதா வந்ததை விலாவாரியாக ஒளிபரப்பியதற்காக இவரைக் கலைஞர் கடிந்துகொண்டிருக்கிறாராம். தேர்தல் நேரத்தில் ராமதாஸ் செய்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கடிந்திருக்கிறாராம். உறவு சுமுகமாக இருந்தபோதே நிலைமை அவ்வாறெனில், இப்போது கேட்கவா வேண்டும்?”

“ஏற்கெனவே, இவர்களுக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்டிருந்ததே?’இதுதொடர்பாக, சன் டி.வி. நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக ஆசிரியர் என்ற முறையில் முரசொலி செல்வம் எழுதிய விளக்கக் கடிதமொன்றை காவல்துறையினரிடம் திங்கள்கிழமை அவர் சார்பில் வந்த சுமார் 30 வழக்கறிஞர்கள் ஒப்படைத்திருக்கின்றனர். இதனிடையே, இந்தப் பிரச்னைகள் பற்றியெல்லாம் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா மூலமாக சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்குத் தெரிவிக்கப்பட்டு, தொழில்ரீதியிலான உதவிகளைத் தவிர்க்குமாறு தி.மு.க. தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாம்.”

“என்ன சொன்னார்களாம்?”

`சோனியாவே முதல்வரிடம் பேசி, `உங்களை மீறி எதுவும் நடைபெறாது’ என்று உறுதியளித்திருக்கிறாராம். இவற்றுக்கு நடுவே மற்றொன்றையும் தெரிந்துகொள்ளுங்கள். கலைஞர் டி.வி.யிலும் நேரடி ஒளிபரப்புக்கான ஓ.பி. வேன்கள் வாங்குவது பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்களாம்

நன்றி குமுத்ம் ரிப்போர்ட்டர்

இதே மாதிரி சன் நெட்வொர்க் நடுனிலையோடு செயல்பட்டால் கலைஞர் இனி அரசு டி.டி.எச்ஆரம்பித்து பொதுமக்களுக்கு சேவை செய்வார். மற்ற சேவையெல்லாவற்றையும் மறந்து விடுவார்

மேகச் சிறை கிழித்து மேலெழும்பும் `தியாகச்’ சூரியனே!’, `மருதுவை எங்களுக்கு மீட்டுத்தந்த மகத்தான தலைவா!’ என்பது போன்ற போஸ்டர்கள் மதுரையில் அண்மையில் அமளிதுமளிப் பட்டன.

“மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனைத் தெரியும்.. ஆனால் யார் இந்த மருது? அந்த மருதுவை மீட்டவர் யார்?” என்றெல்லாம் மதுரை மக்கள் குழம்பிக் கொள்ளவில்லை. மருது என்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் `உள்ளே’ சென்று தற்போது சிறை மீண்டிருப்பவர்களில் ஒருவர் என்பது மதுரை மக்களுக்கு நன்றாகவே தெரியும். மருதுவை வாழ்த்தி வரவேற்று அச்சடிக்கப்பட்ட சில போஸ்டர்களில் அவருக்கு `நல்லமருது’ என்று அமர்க்களமான அடைமொழியும் தரப்பட்டிருந்தது.

அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏழாண்டு சிறைத்தண்டனை முடித்த கைதிகளை விடுவிக்க அரசு உத்தரவிட்டது. அந்த ஹோதாவில் லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த மருது, சோங்கு முருகன், மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் விடுதலையாகி உள்ளனர். இவர்களது விடுதலையைக் கொண்டாடும் விதத்தில்தான் மதுரை முழுக்க இப்படி போஸ்டர்கள். இதில் நாம் நுழையும் முன்னால், 1997-ல் மதுரையை உலுக்கிய லீலாவதி படுகொலையை நம் மனக்கண் முன் ஒருமுறை ஓடவிட்டுக் கொள்வோமே!

மதுரையில் கைத்தறி நெசவுத் தொழிலை மட்டுமே நம்பி வாழும் சௌராஷ்டிரா சமூகத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் லீலாவதி. வறுமை காரணமாக பத்தாவது வரை மட்டுமே படித்தவர் இவர். தன் இருபதாவது வயதில் ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினரான குப்புசாமி என்பவரைக் கைப்பிடித்தார் லீலாவதி. அதுவரை தினமும் 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதிக்கொண்டிருந்த லீலாவதியை மெல்ல பொதுவுடைமைப் பாதைக்குத் திருப்பினார் கணவர்.

கணவரின் வழிகாட்டலால் கைநெசவுத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் போன்றவற்றின் உறுப்பினராக மாறிய லீலாவதி, 1987-ல் சி.பி.எம். கட்சியின் உறுப்பினர் ஆனார். அதன்பின் மாநகர் மாவட்டக்குழு உறுப்பினர், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர், மாவட்டப் பொருளாளர் என பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.

குப்புசாமி – லீலாவதி தம்பதியருக்கு கலாவதி, துர்கா, டான்யா என மூன்று மகள்கள். மதுரை வில்லாபுரத்தில் 32 ஒண்டுக்குடித்தனங்கள் கொண்ட ஒரு குடியிருப்பில் ஒரே ஓர் அறையில் இந்த ஐவரைக் கொண்ட குடும்பம் வாழ்ந்தது. அறையின் நடுவே நெசவுத்தறி. அதைச் சுற்றி பெட்டி படுக்கைகள், அடுப்பு, சமையல் பாத்திரங்கள். இரவில் தறிக்குக் கீழே தூக்கம். லீலாவதி நெசவு செய்வார். குப்புசாமி எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில்தான் வந்தது மதுரை மாநகராட்சித் தேர்தல். வில்லாபுரம் பகுதி வேட்பாளராக லீலாவதியை கட்சி நிறுத்தியது. மக்கள் செல்வாக்கால் 59-வது வார்டில் அமோக வெற்றி பெற்றார் லீலாவதி. வில்லாபுரம் பகுதிக்கு எப்படியாவது குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடைத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினார் லீலாவதி. அந்த வார்டில் 58 இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கப்பட வேண்டும் என்றார். இது அந்தப் பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்த சிலரை கொதிநிலைக்குக் கொண்டு சென்றது.

1997-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி! அன்று காலையில் வழக்கம்போல மாநகராட்சி மண்டல அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பிய லீலாவதி, தனது மூன்று மகள்களுக்கும் காபி தயாரித்துக் கொடுத்தார். பின்னர் காலை உணவு தயாரிப்பதற்காக எண்ணெய் வாங்க, பாட்டிலை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பலசரக்குக் கடைக்குக் கிளம்பினார். அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததுதான் தாமதம். ஒரு கொலைகாரக் கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு அரிவாள்களால் சரமாரியாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே சடலமானார் லீலாவதி.

இந்தக் கொலை தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த முத்துராமலிங்கம், மருது, சோங்கு முருகன், பாம்பு முருகன், மீனாட்சி சுந்தரம், அண்ணாதுரை ஆகியோர் கைதானார்கள். இவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இதில் முத்துராமலிங்கம் இறந்து விட்டார். பாம்பு முருகன் விடுதலையாகிவிட்டார். இந்த நிலையில்தான் தற்போது அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருது, சோங்கு முருகன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் இனிதே விடுதலையாகி உள்ளனர். பரோலில் சென்றபோது விதிகளை மீறியதால் அண்ணாதுரை மட்டும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்த மூன்று பேரின் விடுதலை, சி.பி.எம். கட்சியினரைக் கோபத்தில் முகம் சிவக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ள சி.பி.எம். கட்சி மாநிலச் செயலாளர் என். வரதராஜன், அந்தக் கடிதத்தில், `மக்கள் பிரச்னைக்காகப் போராடியதன் காரணமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கொலை செய்யப்பட்டவர் லீலாவதி. அவரது வழக்கில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட மூவர் விடுதலை செய்யப்பட்டது வேதனைக்குரியது. இந்த நிகழ்வு எங்களது கட்சித் தோழர்களின் மனங்களைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே, இந்த மூவரின் தண்டனைக் குறைப்பு உத்தரவை அரசு ரத்து செய்யவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த முதல்வர் கலைஞர், `லீலாவதி கொலை வழக்கு விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யாரை வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்று கூறியதோ அவரையே அரசு நியமித்தது. அந்த வகையில் தன் கட்சியினர் தண்டிக்கப்பட தி.மு.க. அரசு காரணமாக இருந்தது. தற்போது அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்யப்பட்ட அனைவரும் ஏழாண்டு தண்டனையை நிறைவு செய்தவர்கள்’ எனக் கூறியிருந்தார்.

மருது, சோங்கு முருகன், மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் விடுதலை பற்றி லீலாவதி குடும்பத்தினர் என்ன நினைக்கிறார்கள்? இதை அறிந்து கொள்ள அவரது குடும்பத்தினரை நாம் சந்திக்க முயன்றோம். லீலாவதியின் ஒரு மகள் அரசு ஊழியராகப் பணியாற்றும் நிலையில், இன்னொரு மகள் சென்னையில் ஒரு மருத்துவ மையத்தில் வேலை செய்கிறார். ஒரு மகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பப் பிரச்னை காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், லீலாவதியின் கணவர் குப்புசாமியை அவர் வேலை செய்யும் பாத்திரப் பட்டறையில் நாம் சந்தித்தோம். ஆரம்பத்தில் பேசவே தயங்கிய அவர் பின்னர் பேசினார்.

“அந்த மூன்று பேரையும் சட்டப்படி விடுவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு நான் என்ன சொல்ல முடியும்? அதற்கு மேல் நான் பேசவும் கூடாது. பத்திரிகைகள்தான் பேச வேண்டும். லீலாவதியை நாடு முழுவதும் கொண்டு சென்றது பத்திரிகைகள்தானே? இது சமூகப்பிரச்னை. இதில் நான் ஏதாவது சொல்லி, அதைத் தனிப்பட்ட பிரச்னையாக மாற்ற விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து கருத்துச் சொல்வதும் சரியாக இருக்காது” என்றவர், “உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு, அதன்படி பொறுப்புக்கு வந்தவர்களில் ஒருவர் லீலாவதி. அப்படி பொறுப்புக்கு வந்து இந்திய அளவில் முதலில் பலியானவரும் அவர்தான். மக்கள் சேவையில் ஈடுபடும் பெண்களுக்கு அச்சுறுத்தல் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், பெண்கள் அதிகாரத்துக்கு வரத் தயங்குவார்கள்” என்றார் அவர்.

குடும்பச் சூழல் குறித்துக் கேட்டபோது.. “பித்தளைப் பாத்திரம் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். பொருளாதாரரீதியாக எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார் கசப்பான புன்னகையுடன்.

`மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த விடுதலை தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப் போகிறதா?’ என அக்கட்சியின் நகரச் செயலாளர் அண்ணாதுரையிடம் கேட்டபோது.. “எங்கள் கருத்தை மாநிலச் செயலாளருக்குத் தெரிவித்திருக்கிறோம். மாநில நிர்வாகிகள்தான் முடிவெடுப்பார்கள்” என்றார் அவர்.

மக்களுக்காகப் பாடுபட்ட லீலாவதி கொலை சம்பவத்தை மதுரை மக்கள் முற்றாக இன்னும் மறக்காத நிலையில், இன்னொரு பக்கம் சிறை மீண்டவர்களை வாழ்த்தி வரவேற்கும் வண்ணமயமான போஸ்டர்கள் என்பது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது.

திமுகவுடன் கூட்டணி அமைத்து கும்மியடித்த கம்யூனிஸ்ட்கள் இந்த விசயத்தில் என்ன செய்வார்கள்? ஒன்றுமே செய்ய முடியாது. மதுரையின் அதிகாரம் முதல் அமைச்சரை விட மிகவும் பெரிது.

நன்றி. குமுதம் ரிப்போர்ட்டர்.

அறிஞர் அண்ணா நூற்றாண்டையொட்டி, முதல்வர் கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என அறிவித்தார். ஏழைகளின் பசிபோக்கும் திட்டம் என்று அறிவித்த போதும் தமிழகம் முழுதும் பெரிய அளவில் மக்களிடையே மகிழ்ச்சி இல்லை. காரணம், இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் அரிசி உண்மையிலேயே முழுமையாக மக்களுக்கு போய்ச் சேரவில்லை என்பதுதான் அதிர்ச்சித் தகவல்.

ரேஷன் அரிசி, தமிழகம் முழுவதும் உள்ள அரிசிக் கடத்தல் கும்பல்களால் கேரளாவிற்கும், உள்ளூர்கடைகளுக்கும், ஹோட்டல்களுக்கும், பாலீஷ் செய்து `கர்நாடகா பொன்னி’ என்ற பெயரில் பேக்கிங் செய்து அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

கிராமப் புறங்களில் மாதத்தில் இரண்டு நாள் மட்டுமே கார்டுகளுக்கு அரிசி போடுகிறார்கள். அடுத் தடுத்த நாட்களில் வந்தால்” இம்மாதத்துக் கான அரிசி போட்டு முடிச்சிட்டோம். இனி அடுத்தமாதம்தான். இப்ப அரிசி இல்லை” என திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். `நாங்கள் அரிசியே வாங்கலையே எப்படி தீர்ந்துபோகும்’ என நியாயம் கேட்க முடியாது. ஆனால் அந்த அரிசியெல்லாம் மூட்டை மூட்டையாகக் கடத்தப்படுகின்றன.

ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை அளவுக்குத்தானே அரிசி ஒதுக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது எப்படி மூட்டை மூட்டையாய் ரேஷன் அரிசியை கடத்துகிறார்கள்? அந்த ரகசியத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ரேஷன் கடை ஊழியர் அதிர்ச்சியூட்ட விளக்கினார்.

“சார்! ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது 20லிருந்து 50 வரை பொதுமக்கள் பெயரில் பயன்படுத்தாத போலி கார்டுகள் இருக்கும். சின்ன கிராமம் என்றால் பத்து முதல் இருபத்தைந்து கார்டு வரை இருக்கும். இந்த கார்டுகளில் பெரும்பாலான கார்டுகளுக்கு 35 கிலோ என (வறுமைக்கோட்டிற்குள் உள்ளவர்களுக்கு) இருக்கும்.

அடுத்து அரிசி கடத்தும் நபர்கள் ஒரு கடைக்கு குறைந்தது பத்துப் பேர் இருப்பார்கள். இவர்கள் கார்டுக்கு 50 ரூபாய் மாத வாடகை கொடுத்து, அரிசி வாங்காத கார்டுகளை அடகு வாங்கி வைத்திருப்பார்கள். இன்னும் வெளியூர் சென்றவர்களிடம் ஆயிரம், ரெண்டாயிரம் கொடுத்து விலைக்கு வாங்கிவிடுவார்கள். இப்படி கடத்தல் ஏஜெண்டுகள் கொண்டு வரும் போலி கார்டுகளுக்கு அரிசி கேட்கும்போது கார்டுக்கு 25 ரூபாய் கூடுதலாகத் தரவேண்டும். இந்த நபர்கள் கடையின் சம்பளம் வாங்காத ஊழியர்களாக பணியாற்றுவார்கள்.

அந்தச் செல்வாக்கில் அரிசி வந்தவுடனே குத்திக் குத்திப் பார்த்து நல்ல அரிசி மூட்டைகளைத் தனியாக அடுக்கி வைத்துவிடுவார்கள். இப்படி சிறப்பு ஒதுக்கீடு அரிசி கிலோ ஐந்து ரூபாய். அதோடு கடையில் உள்ள போலி கார்டுகளுக்கும் ஒதுக்கி நல்ல அரிசியை எடுத்து வைத்துவிடுவோம்” என்கிறார்.

“சார் நம்ம கார்டுக்கு அரிசி வாங்கப் போனா ரெண்டு நாள்ல வாங்காட்டி தீர்ந்து போச்சுன்னு திருப்பி அனுப்பிடுறாங்க. அதனால மாசத்துல ரெண்டுநாள் வேலையைக் கெடுத்து வரிசையில நின்னு வாங்கணும். இல்லாட்டி பள்ளிக்கூடத்துக்கு லீவை போட்டு பிள்ளைகளை வாங்கச் சொல்வோம்.

அதுலயும் கோழிக்குப் போடுற புழுத்த பழுப்பு அரிசியை கொடுக்குறாங்க. கேட்டா `ஒரு காப்பியே அஞ்சு ரூபா. உனக்கு ஒத்த ரூபாய்க்கு இந்த அரிசி பத்தாதா?” என விரட்டுகிறார்கள். அதனால கார்டையும் கிலோவுக்கு கூடுதலா 4 ரூபாயையும் குடுத்திட்டு வந்திட்டா நல்ல அரிசியா வீட்டுக்கு வந்திடும். ஆக ஒரு கிலோ அரிசிக்கு அஞ்சு ரூபாய் கொடுத்தாதான் கஞ்சி காய்ச்சிக் குடிக்க முடியும். இல்லாட்டி ரெண்டு ரூபாய்க்கும், ஒரு ரூபாய்க்கும் வாங்குறது கோழிக்கும், மாட்டுக்கு அரைச்சு ஊத்தவும்தான் ஆகும்” என்றார், கண்ணீர் விடாத குறையாக ரேஷன் கடை ரெகுலர் கஸ்டமர்.

சரி எப்படிக் கடத்துகிறார்கள்?

போலி ரேஷன் கார்டுகளில் வரவு வைத்து பதுக்கும் அரிசிகளை கிலோ 7 ரூபாய் விலை கொடுத்து வாங்கிக் கொண்டு போய் கிலோவுக்கு ஒரு ரூபாய் வீதம் செலவு செய்து `பாலீஷ்’ போட்டால் பளிச் என பொன்னி அரிசி ரேஞ்சுக்கு வந்துவிடும். அதை லோக்கல் கடைகளுக்கு கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். கடைக்காரர்கள் கடை அரிசி என பாலீஷ் செய்த ரேஷன் அரிசியை கிலோ 17 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள்.
கேரளாவுக்கு மொத்தமாக லாரிகளில் கடத்துபவர்கள் கிலோ 9 ரூபாய் என வாங்கிப்போய் கேரளாவில் கிலோ 15 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

இதில் தேனி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருச்சி மாவட்டங்களில் பெருமளவில் கடத்தப்பட்டு வேறு பெயரில் வெளிமார்க்கெட்டுக்கும், கேரளாவிற்கும் கடத்தப்படுகின்றன.
லாரிகள், டெம்போக்கள், சிறுசிறு மூட்டைகளாகக் கட்டி பஸ்களில் என்று பலவிதமாகக் கடத்துகிறார்கள். கேரளாவிற்குச் செல்லும் ரயிலில் அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. தேனி பகுதியில் நிறைய ரெய்டு இருப்பதால் சில இடங்களில் மலைப்பாதைகளில் கழுதைகள் மூலம் கடத்துகிறார்கள். தற்போது கேரளாவிற்குச் செல்லும் பால் லாரிகளில் கேன்களில் பாலுக்குப் பதிலாக அரிசியைப் போட்டு சீல் வைத்து கடத்துகிறார்கள். சிமெண்ட் மூட்டை எனச் சொல்லி, அரிசி மூட்டைகளைப் பதுக்கி அதனைச் சுற்றி தார்ப்பாயை மூடி நூதனமாகக் கடத்துகிறார்கள்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இரு ரேஷன் கடைகளில் ரேஷன் கடை ஊழியர்களே போலியாக 1200 ரேஷன் கார்டுகளைத் தயாரித்து ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் திருடியுள்ளது தெரியவந்தபோது அதிகாரிகளே ஆடிப்போய்விட்டார்கள்.

தமிழகத்தை இருளில் மூழ்கடித்த நிலைமையை மாற்றத்தான், இந்த இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் அரிசித் திட்டம் என விமர்சனம் எழுந்தாலும், கிராமங்களில் வாழ வழியற்ற எத்தனையோ குடும்பங்களுக்கு இது வரப்பிரசாதமாய்த்தான் அமைந்துள்ளது. ஆனால் நியாய விலைக் கடைகளிலிருந்து பொதுமக்களுக்கு அரிசி முழுமையாக போய்ச் சேரவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
`தமிழகத்தில் ரேஷன் அரிசிக் கடத்தலே இல்லை’ என அரசு தரப்பிலிருந்து அவ்வப்போது அறிக்கைகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தாலும், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக கடத்தல் அரிசி பிடிபட்டது என்ற செய்திகள் அனுதினமும் வருவது அரிசிக் கடத்தல்களின் சாட்சியாக நிற்கின்றன..

நன்றி.குமுதம்

தேர்தல் வருவதைத்தான் இந்த இலவங்கள் காட்டுகின்றன.

தமிழக கங்கிரஸ் & கம்யூனிஸ்ட்களின் நிலை

நன்றி குமுதம்.காம்

அமெரிக்கப் பொருளாதாரம் நொறுங்கி வருகிறது என்பதனை பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறோம். இப்போது அதன் பகாசுர வங்கிகள் திவாலானதைத் தொடர்ந்து சர்வதேச நிதிக் குழுமம் (ஏ.ஜி.எஸ்) என்ற மிகப் பெரிய காப்பீட்டுக் கழகம் (இன்சூரன்ஸ்) மஞ்சள் கடுதாசி கொடுத்துவிட்டது.அந்த நிறுவனம் தனியார் நிறுவனம். நாட்டின் மானத்தைக் காக்க அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசே உயிர்ப்பிச்சை அளிக்கப் போகிறது.

இத்தனைக்கும் பின்னர் `வங்கி, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீடுகளை அதிகரிப்போம்’ என்று நமது நிதி அமைச்சர் சிதம்பரம் சங்கல்பம் செய்கிறார். இன்சூரன்ஸ் துறையைத் தங்கள் நாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்து விட வேண்டும். இல்லையேல் வர்த்தக உறவுகள் பாதிக்கும் என்று 1989_ம் ஆண்டு முதலே அமெரிக்கா இந்தியாவை மிரட்டி வருகிறது. அதற்குத் தலைவணங்கி திவால் கம்பெனிகளுக்குத் திலகமிட மன்மோகன் சிங் அரசு தயாராகி வருகிறது.ஏற்கெனவே அமெரிக்க நடுத்தர வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களெல்லாம் மூடப்பட்டு விட்டன. இன்னும் சில தினங்களில் இன்னும் பல நிதி நிறுவனங்கள் நெருக்கடியில் மூச்சுத் திணறும் என்கிறார்கள்.அந்த நிறுவனங்களைத்தான் நமது நிதி அமைச்சர் அழைக்கிறார். அங்கே அடிபட்ட புலிகளை இங்கே அழைத்து வந்து இலவச சிகிச்சை அளித்து சிம்மாசனத்தில் ஏற்றுவார்களாம். இதற்குப் பெயர்தான் சிதம்பரத்தின் சீர்திருத்தங்கள் என்பதாகும்.அமெரிக்காவில் திவாலான ஏ.ஜி.எஸ். என்ற சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனம் இங்கே டாடாவுடன் சேர்ந்து இன்சூரன்ஸ் வணிகம் செய்வது எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த ஏ.ஜி.எஸ். கூட்டு நிறுவனத்தில் இங்கே இன்சூரன்ஸ் எடுத்தவர்களுக்கு யார் நட்ட ஈடு தருவது? அதற்கு ஏற்பாடு செய்வதாக நிதி அமைச்சர் சொல்கிறார்.

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் வங்கிகளும் திவாலாவதும் மக்கள் பணத்தைச் சுருட்டிக் கொள்வதும் புதிதல்ல. நமது தேசம் விடுதலையடைந்தபோது 400 தனியார் மற்றும் அன்னிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதில் பெரிய நிறுவனமான பிர்லா இன்சூரன்ஸ் கம்பெனியே ஊழலில் சிக்கியது. பாலிசி நிறைவு பெற்றவர்களுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் பணம் தர முடியவில்லை. எல்லாமே ஊழல்தான் என்பதனை அறிந்த பிரதமர் நேரு, அவற்றை ஒரே இரவில் ஒரே உத்தரவில் தேசியமயமாக்கினார்.அதன்பின்னர் எல்லா இன்சூரன்ஸ் நிறுவனங்களும் ஒரே நிதி நிறுவனமாக, அரசு நிறுவனமாக, மக்கள் நிறுவனமாக இணைக்கப்பட்டன. அதுதான் இந்திய காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி. என்பதாகும்.அந்த ஆலயம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. அதன் அற்புத சாதனைகளை உலகம் உற்றுப் பார்க்கிறது. நேரு பெருமகன் உருவாக்கிய அந்த எல்.ஐ.சி. நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு ஆறு லட்சம் கோடியே 54 லட்சமாகும். சென்ற ஆண்டு 116 சதவிகிதம் வளர்ச்சி கண்ட இந்த நிறுவனம், இந்த ஆண்டு 150 சதவிகித வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1956_ம் ஆண்டு எல்.ஐ.சி. பொதுத் துறை நிறுவனமாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. 5 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், மத்திய அரசிற்கு மட்டும் வைப்புத் தொகையாக 4 ஆயிரத்து 922 கோடி ரூபாய் அளித்திருக்கிறது. சாலை, மின்சார வசதிகளுக்காக மட்டும் இந்த ஆண்டு 11 ஆயிரத்து 630 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது.நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எத்தனை ஆயிரம் கோடிகளையும் அள்ளித் தரத் தயார் என்று எல்.ஐ.சி. கூறுகிறது. ஆனால், உலக வங்கியில் கடன் வாங்குவதில்தான் மன்மோகன் சிங் அரசு சுகம் காண்கிறது.அமெரிக்காவின் தலைவாசலில் உள்ள ஆறு தென்அமெரிக்க நாடுகள் உலக வங்கிப் பணிகளை முடித்துக் கொண்டுவிட்டன. அந்த வங்கியில் வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லை; கை கொடுங்கள் என்று பல ஆப்பிரிக்க நாடுகள் சீனத்திடம் கேட்டன. அந்த நாடுகளை சீனம் மீட்டிருக்கிறது.இங்கே எல்.ஐ.சி., நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கரம் கொடுக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், உலக வங்கியில் கடன் வாங்கி ஒழுங்காக வட்டி கட்டுகின்ற நாடு இந்தியாதான். அதே வட்டித் தொகை இன்னொரு முதலீடாக இந்தியாவிற்கே திரும்பி வருகிறது. வெட்கக் கேடு.இன்சூரன்ஸ் துறையில் இந்தியா இமய வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனால் நமது நிதி அமைச்சர் என்ன சொல்கிறார்? பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு 320 பில்லியன் டாலர் தேவையாம். அவ்வளவு பெரிய தொகையை நமது எல்.ஐ.சி. நிறுவனம் மட்டும் தரமுடியாதாம். எனவே, மக்களின் சேமிப்பைத் திரட்ட அங்கே திவாலான அன்னிய இன்சூரன்ஸ் கம்பெனிகளை இங்கே அழைத்து வருவார்களாம். அவை 49 சதவிகித அன்னிய முதலீடுகளோடு வருமாம். அதற்காக நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வருவார்களாம். இந்த வாதத்தில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?

இங்கே எல்.ஐ.சி. என்ற காமதேனு இருக்கும்போது எதற்கு வெளிநாட்டு கிழட்டுக் காளைகள்?

நெய்வேலி, சேலம், பெல் நிறுவனங்களான அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்க தண்டோரா போட்டவர்தான் நமது நிதி அமைச்சர். அதற்கு அவர் என்ன காரணம் கூறினார்? நாட்டின் மக்கள் நலப் பணிகளுக்கு பணம் வேண்டுமாம். அதற்காக இந்த மக்கள் நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்கப் போகிறோம் என்றார். அதனை உழைக்கும் மக்கள் நடத்திய இயக்கங்கள் தடுத்து நிறுத்தின.இப்போது இந்த தேசத்தை வளப்படுத்த அமெரிக்க திவால் கம்பெனிகளை அழைத்து வருவதற்கு அனுமதி கேட்கிறார். அதே சமயத்தில் இந்தியச் செல்வந்தர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்து தொழில்கள் தொடங்கலாம் என்கிறார். அதற்கு ஏற்றாற்போல் ரிசர்வ் வங்கியின் கோட்பாடுகளே தலைகீழாகப் புரட்டிப் போடப்படுகின்றன.இன்னொரு கொடுமையைக் கேளுங்கள். இந்திய உழைக்கும் மக்களின் வைப்பு நிதி பல லட்சம் கோடிகள் குவிந்திருக்கின்றன. இந்த நிதியை ஆரம்பத்தில் நமது ரிசர்வ் வங்கி நிர்வகித்தது. அதன் பின்னர் நமது ஸ்டேட் வங்கி நிர்வகித்தது. இப்போது இந்த நிதியை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் நிதி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் போகிறார்கள்.

நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக முலாயம் சிங்கின் சமாஜ்வாதிக் கட்சியைத் திருப்பி விட்டவர் அனில் அம்பானி. உழைக்கும் மக்களின் உதிரத்தில் _ வியர்வையில் விளைந்த பல லட்சம் கோடிகளை அவரிடம் அர்ப்பணிக்கப் போகிறார்கள்.அடுத்து, முதலீடே இல்லாமல் பல லட்சம் கோடிகளை நிர்வகிக்கப் போவது ஹெச். எஸ். பி. சி. என்ற அமெரிக்க வங்கியாகும். இப்போது இந்த வங்கி இமைகளே முள்ளாகி இதயமே நஞ்சாகி அங்கே அலறிக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு மட்டும் இந்த வங்கி சந்தித்த நட்டம் 78,540 கோடி ரூபாய்களாகும்.இங்கே நிதித் துறையில் விளையாட சிதம்பரங்கள் அனுமதித்த மெர்லின்ச் வங்கி இன்றைக்கு அமெரிக்காவில் 1,54560 கோடி நட்டத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

அதே சமயத்தில் அணுசக்தி உடன்பாட்டைத் தொடர்ந்து நான்கு லட்சம் கோடிக்கு அமெரிக்க அணுமின் உலைகளையும் இதர கருவிகளையும் வாங்க மன்மோகன் சிங் அரசு தயாராகி வருகிறது.எப்படியோ, நொறுங்கிவரும் பொருளாதாரத்தைக் காத்திட மன்மோகன் சிங் – சிதம்பரம் கம்பெனியை அமெரிக்கா பெரிதும் நம்பி இருக்கிறது. பார்ப்போம்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்.

தமிழ்கூறும் நல்லுலகில் எந்த நகராட்சிக்கும் இதுவரை கிடைக்காத பெருமை தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குக் கிடைத்திருக்கிறது. அங்கே `கவுன்சிலர்கள் கமிஷன் கேட்டு என்னை கவிழ்க்கப் பார்க்கிறார்கள்’ என்று நகராட்சி பெண் சேர்மன் ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்த அதிசயம்(!) நடந்திருக்கிறது. `நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது?’ என்று அரசிடம் விளக்கம் கேட்டு அதிர வைத்திருக்கிறது கோர்ட்.

சின்னமனூர் நகராட்சியில் மொத்தம் 27 கவுன்சிலர்கள். இதில் தி.மு.க.-14, அ.தி.மு.க..-7, காங்கிரஸ் -3, தி.மு.க. ஆதரவு சுயேச்சைகள்-3. இது பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி என்பதால் 22-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தமிழ்ச்செல்வி அங்கே சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் நகராட்சிக் கூட்டங்கள் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தன. அதன்பிறகுதான் தமிழ்ச்செல்விக்கு `கட்டிங்’ ரூபத்தில் பிரச்னை அரும்ப ஆரம்பித்தது. “கட்டிங், கமிஷன் எல்லாவற்றையும் நகராட்சிக்குத் தொடர்பில்லாத தி.மு.க. புள்ளி ஒருவரே இங்கே அள்ளிக் கொள்கிறார். எங்களுக்கு கால்காசு கூட கையில் வருவதில்லை” என்று அலுத்துக் கொண்ட கவுன்சிலர்கள் “கமிஷன் வாங்கித் தா!” என்று கட்சிப்பாகுபாடின்றி தமிழ்ச்செல்விக்கு டார்ச்சர் தர ஆரம்பித்தனராம்.

இதுபற்றி தி,மு.க. மாவட்டச் செயலாளர் மூக்கையாவிடம் புகார் செய்தார் தமிழ்ச்செல்வி. அவர் பேச்சு நடத்தியும் பெரிதாக பலன் எதுவும் விளையவில்லை. இதற்கிடையே கடந்த இரண்டு மாதங்களாக நகர்மன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் கவுன்சிலர்கள் புறக்கணிக்க ஆரம்பித்தனர். இதுபற்றி முப்பெரும் விழாவுக்குப் பின் கலைஞர் முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்தான், “கட்டிங் வாங்கித் தராவிட்டால் உங்கள்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்” என்று 24 கவுன்சிலர்கள் கையெழுத்துப் போட்டு தமிழ்ச்செல்விக்கு கடிதம் அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இனிமேலும் தாமதித்தால் தன்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வந்து விடும் என்ற எண்ணத்தில் கவுன்சிலர்கள் கமிஷன் கேட்டு தன்னை டார்ச்சர் செய்வதாக ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து விட்டார் தமிழ்ச்செல்வி. இதுபற்றி ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதற்கிடையில் தமிழ்ச்செல்வி எதிர்ப்பணியைச் சேர்ந்த 24 கவுன்சிலர்களும் ஆந்திரா, கர்நாடகம் என இன்பச் சுற்றுலா கிளம்பி விட்டனர். நகராட்சி மண்டல இயக்குனர் சந்திரசேகரன் செப்டம்பர் 24-ம்தேதி சின்னமனூர் நகராட்சியில் விசாரணை நடத்தப் போகிறார் எனத் தெரிந்ததும் இவர்கள் அனைவரும் சின்னமனூர் திரும்பினர். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக சந்திரசேகரன் அந்த விசாரணையை அக். 20-ம் தேதிக்குத் தள்ளி வைத்ததால் இன்பச்சுற்றுலாவை விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர புறப்பட்டு விட்டனர் அந்த கவுன்சிலர்கள்.இதற்கிடையே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரும் கட்டிங்குக்காக கட்சிமாறி தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்ச்செல்வியை டார்ச்சர் செய்து வருவதாக உள்ளூர் இரட்டை இலைகள் உள்ளக் கொதிப்பில் இருக்கிறார்கள். இதுபற்றி அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவரிடம் விசாரித்தோம்.

“தமிழ்ச்செல்வி நல்லவர்தான். ஆனால் கவுன்சிலர்களாகிய நாங்கள் தேர்தல் சமயம் போட்ட காசையாவது இப்போது எடுக்க வேண்டாமா? இங்கே சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய கமிஷன் கூட கவுன்சிலர்களுக்குக் கிடைப்பதில்லை. இங்கே அத்தனை கமிஷனையும் அள்ளுவது தி.மு.க. உள்ளூர் நிர்வாகி ஒருவர்தான். அவர் அழகிரியின் மகன் துரை தயாநிதியை அழைத்துவந்து கூட்டம் நடத்தி, `தான் அழகிரி ஆள்’ என்று பம்மாத்துப் பண்ணி வசூல் வேட்டை நடத்துகிறார்.அந்தப் புள்ளியின் மாமா, மாநில அமைப்புச் செயலாளர் என்பதுடன் ஸ்டாலினுடைய ஆள் என்பது இவருக்கு வசதியாகப் போய் விட்டது. மாமனும் மருமகனும் கட்சி மா.செ.வுக்குக் கூட கட்டுப்படாமல் எல்லா கட்டிங்கையும் வாங்கிக் குவிக்கிறார்கள். இதனால் சேர்மன் செயல்படக்கூட முடியவில்லை. அதனால்தான் அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் போவதாகக் கடிதம் எழுதினோம்” என்றார் அவர்.

நாம் தமிழ்ச்செல்வியைச் சந்தித்துப் பேசினோம். “கட்சியில் கலைஞர் பெண்களுக்கு இடஒதுக்கீடு தந்ததால் இந்தப் பதவிக்கு வந்தவள் நான். ஆனால் பதவிக்கு வந்தபின் நடைமுறையில் என்னைப் போன்ற பெண்கள் இங்கே படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. கட்சியின் மூத்த நிர்வாகிகள், அதிகாரிகள் எங்களைப் படுத்தும் பாட்டை வெளியே சொல்ல முடியாது. கமிஷன் பிரச்னையைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் கூட்டத்துக்கே வருவதில்லை. `நான் ஆபீஸ் பக்கமே வரமாட்டேன். நீங்களே ஒரு குழுவைப் போட்டு கூட்டம் நடத்துங்க’ என்று நான் சொன்னதையும் கவுன்சிலர்கள் ஏற்கவில்லை. எனக்கு எதிராகக் கடிதம் எழுதி என்னை கையெழுத்துப் போடச் சொன்னார்கள். நான் ஒப்புக் கொள்ளவில்லை.

இதுபற்றி மா.செ.விடம் சொல்லி அவர் பேச்சு நடத்தியும் புண்ணியமில்லை. முப்பெரும் விழாவுக்குப் பின் கலைஞர் இதுபற்றி முடிவு அறிவிப்பார் என்றிருந்த நிலையில், என்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக 24 கவுன்சிலர்களும் கையெழுத்துப் போட்டு எனக்குக் கடிதம் அனுப்பி விட்டார்கள். அதனால்தான் கோர்ட்டுக்குப் போனேன்” என்ற தமிழ்ச்செல்வி, “எனக்கு அனுபவம் போதவில்லை. நான் என் கணவர் கூத்தபெருமாளின் கைப்பாவையாக இருக்கிறேன் என்கிறார்கள். நானும் இந்த நகராட்சிக்கு எத்தனையோ நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த நகராட்சி கலைக்கப்பட்டு ஒருவேளை நான் வீட்டுக்குப் போக நேரலாம். அதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் கலைஞர் கண்ட ஒரு கனவு பொய்த்துப் போகிறதே என்ற கவலைதான் எனக்கு” என்றார் அவர் கலங்கிய கண்களுடன்.இதுபற்றி தி.மு.க. மாவட்டச் செயலாளர் மூக்கையாவிடம் நாம் பேசியபோது, “சேர்மன்- கவுன்சிலர்கள் என இருதரப்பையும் அழைத்துப் பேசினேன். இருதரப்பும் பிடிவாதம் பிடித்ததால் இணக்கம் ஏற்படவில்லை. எனது ரிப்போர்ட்டை தலைமைக் கழகத்துக்கு அனுப்பி விட்டேன். இதுபற்றி சென்னையிலும் விசாரித்தார்கள். இதில் இனி இறுதி முடிவெடுக்க வேண்டியது கலைஞர்தான் என்ற நிலையில், கவுன்சிலர்கள் அனுப்பிய கடிதம் காரணமாக தமிழ்ச்செல்வி கோர்ட்டுக்குப் போய் விட்டார். `இந்த நகராட்சியை அரசு ஏன் கலைக்கக் கூடாது’ என கோர்ட் கேள்வி எழுப்பும் அளவுக்குப் பிரச்னை போய்விட்டது” என்றார் அவர் வருத்தத்துடன்.
`கவுன்சிலர்கள் கமிஷன் கேட்டு என்னை கவிழ்க்கப் பார்க்கிறார்கள்’ என்று கோர்ட்டில் வழக்குப் போட்ட முதல் பெண் சேர்மன் தமிழ்நாட்டில் தமிழ்ச்செல்வியாகத்தான் இருப்பார். தி.மு.க. மட்டுமில்லாது அ.,தி.மு.க. தரப்பும் தமிழ்ச்செல்வியை அனுதாபத்துடன்தான் பார்க்கிறது. ஆனால் அவர் கோர்ட் படியேறி விட்டாரே? என்ற கோபம் கட்சித் தலைமைக்கு உள்ளது. நகராட்சி கலைக்கப்படுமா? என்ற கேள்வியும் கிறுகிறுக்கிறது

நன்றி குமுதம்.ரிப்போர்ட்டர்

அரிசி, மக்களை மட்டுமல்ல, அரிசி வியாபாரிகளையும் கூட பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கிறது. விஷயம் இதுதான். “ரேஷன் அரிசிக் கடத்தல் லாரியைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று எங்கள் அரிசி லாரியை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதாவது, ஆந்திராவிலிருந்து இறக்குமதியான `அம்சா’ என்ற அரிசி ரகத்தின் பதினைந்து டன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்னை வழியாக குடந்தைக்கு வந்து கொண்டிருந்தது அந்த லாரி. அதை கடலூர் வட்ட வழங்கல் அதிகாரியும் வருவாய்த்துறை அதிகாரிகளும் நெய்வேலி கேட் அருகே மடக்கிப்பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸிடம் ஒப்படைத்து பொய்வழக்குப் போட்டுவிட்டார்கள்” என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள் டெல்டா பகுதி அரிசி வியாபாரிகள். மேலும், அந்த லாரி டிரைவரையும் கிளீனரையும் கைது செய்த போலீஸ், சென்னையிலிருந்து அரிசி ஏற்றி விட்ட ரவி, அரிசியைப் பெற்றுக்கொள்ளவிருந்த மீரான் பாய், லாரி ஓனர் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதான் அரிசி வியாபாரிகளைக் கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த மாதம் இருபத்துமூன்றாம் தேதி கும்பகோணத்தில் ஒட்டுமொத்த அரிசி வியாபாரிகளையும் படை திரட்டிய தஞ்சை மாவட்ட அரிசி வியாபாரிகள் சங்கத்தினர், `வழக்கை வாபஸ் வாங்கி லாரியை விட வேண்டும். இல்லையென்றால், கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனுகொடுப்போம். நடவடிக்கை எடுக்காவிட்டால் டெல்டா மாவட்டங்களில் மாபெரும் கடையடைப்புப் போராட்டம் நடத்துவோம்” என்று முழங்கியிருக்கிறார்கள்.

நாமும் கும்பகோணத்திற்கு விரைந்தோம். பிடிபட்ட லாரியில் அரிசி ஏற்றிவிட்ட மொத்த வியாபாரியான சென்னையைச் சேர்ந்த ரவி இருந்தார்.அவரிடம் பேசினோம். “நான் பதினைந்து வருஷமாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். நல்ல அரிசி மூட்டைகளை மட்டும் அனுப்பிய லாரியை எதற்காகவோ – யாருக்காகவோ மடக்கிப் பிடித்து பொய்வழக்குப் போட்டிருக்கிறார்கள். இதனால் எனக்கு நான்கு லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும். என்னைப் பற்றி நான் கூறுவதை விட வியாபாரிகளிடம் கேளுங்கள். என் மேல் வழக்கு இருப்பதால் நான் பேசுவது நல்லதல்ல” என்று முடித்துக் கொண்டார்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
அடுத்து தஞ்சை மாவட்ட அரிசி வியாபாரிகள் சங்கச் செயலாளரான சேகரிடம் பேசினோம். “தினமும் தமிழகத்திற்கு நூறு முதல் முந்நூறு வரை அரிசி லாரிகள் வருகின்றன. அப்படி வரும் லாரிகளில் என்ன ரகம்? யாருக்கு அனுப்பப்படுகின்றது? கடைக்காரரின் முகவரி, தொலைபேசி எண் என எல்லாவற்றையும் ரசீதில் குறிப்பிட்டுத்தான் அனுப்புவார்கள். அன்று ரவியும் இந்த விவரங்களையெல்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுத்தான் அனுப்பியுள்ளார். கடலூர் உணவுப் பொருள் கலப்படத் தடுப்பு போலீஸார் அதைப் பிடித்து பொய்வழக்குப் போட்டுவிட்டார்கள். ரவியைப் பற்றி எங்களுக்குத் தெரியும். அவர் ரேஷன் அரிசியை அனுப்பமாட்டார். எனவே லாரியை விடுவித்து வழக்கை வாபஸ் பெறாவிட்டால் தொடர் கடையடைப்புப் போராட்டம் நடத்துவோம்” என்றார். அரிசி வியாபாரிகள் சங்க குடந்தை நகரச் செயலாளர் குருநாதன் பேசும் போது, “நல்ல அரிசிக்கும், ரேஷன் அரிசிக்கும் வித்தியாசம் தெரியாத அதிகாரிகள் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இருக்கிறார்கள். அதே சமயம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏ.டி.ஜி.பி.யாக வந்திருக்கும் ராதாகிருஷ்ணன் தனது அதிரடி நடவடிக்கைகளால் வெகுவாக ரேஷன் அரிசிக் கடத்தலைத் தடுத்துவிட்டார். இதனால், அதிகாரிகளுக்கு மாமூல் வரத்து குறைந்துவிட்டது. இதனால் நல்ல அரிசி லாரிகளை மடக்கிப் பணம் பறிக்கப் பார்க்கிறார்கள். இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை” என்றார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அரிசி புரோக்கர் கருணாகரன் நம்மிடம், “இந்த சம்பவத்திற்குப் பிறகு நான் அரிசி அனுப்புவதையே நிறுத்திவிட்டேன். இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் வரை அரிசி அனுப்புவதாக இல்லை. மாதத்திற்கு ஒரு கேஸ் கணக்குக் காட்டவேண்டும் என்பதற்காகலாரியைப் பிடித்தார்களா? இல்லை பணம் பறிக்கும் நோக்கத்தில் பிடித்தார்களா? என்று தெரியவில்லை. லாரியைப் பிடித்ததும் தகவல் கொடுக்க வேண்டும். உடனே அரிசி உரிமையாளர்களை வைத்துக்கொண்டு அரிசியை லேப் டெஸ்ட் செய்ய வேண்டும். இதில் எதையும் செய்யவில்லை. இதிலிருந்தே அதிகாரிகளின் தகிடுதத்தம் தெரிகிறது” என்றார். குடந்தையைச் சேர்ந்த அரிசி மொத்த வியாபாரி செல்வராஜ், “லாரி போலீஸில் பிடிபட்டால் வெளியே வர ஒரு வருஷம் ஆகும். இதற்குப் பயந்து யாரும் லாரி கொடுக்கப் பயப்படுகிறார்கள். இதனால் அரிசி லோடு வருவதே நின்று போய்விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் ஐந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை அரிசி விலை ஏற வாய்ப்புள்ளது. நாகையில் அலாவுதீன் என்பவரது இருபது மூட்டை பச்சரிசியைப் பறிமுதல் செய்த உணவுப் பொருட்கள் கடத்தல் பிரிவு போலீஸார், இருபத்திரண்டாயிரம் ரூபாயை லஞ்சமாக மிரட்டி வாங்கியுள்ளார்கள். அவர்களின் போக்கு கண்டிக்கத்தக்கது. எனவே, அரசுதான் தலையிட்டு எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்றார். சென்னையைச் சேர்ந்த லாரி ஓனரான கிருஷ்ணமூர்த்தி, “குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த லாரியை ஒரு வருடத்திற்கு வெளியே எடுக்க முடியாது. அதுவரை லாரிக்கு வாடகையை யார் தருவது? அதனால் இந்தப் பிரச்னை முடியும் வரை எந்த லாரியையும் அனுப்புவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றோம்” என்றார்.

கடலூர் மாவட்ட வழங்கல் அதிகாரியான பரிமளத்திடம் பேசினோம். “சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை மடக்கி உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தோம். அவர் அந்த லாரியில் இருந்த அரிசியை லேபுக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், அது ரேஷன் அரிசி என்று தெரிய வந்ததாம். மற்றதை அவரிடமே பேசிக்கொள்ளுங்கள்” என்றார். உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரிடம் பேசினோம். “அந்த லாரியைப் பிடித்த கையோடு, வட்ட வழங்கல் அதிகாரி அதை லேபில் ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுத்தார். அதை வைத்து கேஸ் ஃபைல் செய்தோம். அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றவரிடம், `மாமூலுக்காக நல்ல அரிசியை, ரேஷன் அரிசி என்று மடக்கிப் பிடித்தீர்களாமே?’ என்றோம். “அய்யய்யோ! பணத்திற்காக நாங்கள் பிடிக்கவில்லை” என்றார். இந்தப் பிரச்னை குறித்து உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் கேட்டோம். “அப்படியா? நான் ஒன்றும் கேள்விப்படவில்லையே?” என்று பட்டும்படாமல் பேசியவர், ஒரு செல்நம்பரைக் கொடுத்து, “இது என்னோட பி.ஏ. நம்பர், மற்ற கதையை அவரிடம் கூறுங்கள்” என்று துண்டித்துவிட்டார்.

இதற்கிடையே கடந்த இருபத்துநான்காம் தேதி ஊத்துக்குளியிலிருந்து கோவைக்கு ஆடுதுறை 36 ரக அரிசியை ஏற்றிவந்த லாரியை அங்குள்ள போலீஸார் சிறைப் பிடித்து வைத்திருக்கிறார்களாம்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி படம் ரிலீஸ் இல்லை. ஆனால், ரஜினி கொடுக்க இருக்கும் அறிவிப்பு, தங்களுக்கு தீபாவளிப் பரிசாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் ரஜினி ரசிகர்களை பற்றிக் கொண்டுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் தங்களை சந்திக்க இருக்கும் ரஜினி, முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

இப்படி நம்புவதற்கு காரணம்?

ரஜினி மன்ற மாவட்டத் தலைவர்கள் சுமார் 12 பேர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் சத்யநாராயணாவை சில நாட்களுக்கு முன் சென்னையில், ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து பேசினராம். அப்போது தலைவரை (ரஜினியை) தாங்கள் சந்தித்தே ஆக வேண்டும், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் எனக் கூறி சத்யநாராயணாவை வற்புறுத்தினராம். ஒரு அறிவிக்கப்படாத முற்றுகைப் போராட்டத்தையே மாவட்டத் தலைவர்கள் அங்கு நடத்தியுள்ளனர்.

நிலைமையை உணர்ந்து கொண்ட சத்யநாராயணா, அமெரிக்காவில் எந்திரன் படப்பிடிப்பில் இருந்த ரஜினியிடம் போனில் தெரிவிக்க, உடனே ரஜினி, எந்திரன் படப்பிடிப்பின் முதல் ஷெட்யூல் முடிந்து செப்டம்பர் கடைசியில் சென்னைக்கு வந்து விடுவதாகவும், அக்டோபர் மாத முதல் வாரத்தில் ரசிகர்களை சந்திக்கலாம் என கூறியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் ரஜினி, தான் கூறியதைப் போலவே கடந்த சனிக்கிழமை சென்னைக்கும் திரும்பி விட்டார். இதைத் தொடர்ந்துதான் ரஜினி ரசிகர்களிடையே ஒருவித பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையே, ரஜினிக்கு பாப்புலாரிட்டி குறைந்திருப்பதாக வெளியான ஒரு கருத்துக் கணிப்பும் ரஜினியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாம். இவையெல்லாம் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற இருப்பதாகக் கூறப்படும் ரசிகர்கள் சந்திப்பில் அலசி ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் ரஜினி முக்கிய முடிவை அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. மேலும், ரஜினி என்றைக்கும் ரஜினிதான். அவர் எப்போதுமே உச்சம்தான் என்பதை உணர்த்தும் வகையில் அது இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

அதுவே, அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பு என்றால் ரசிகர்களுக்கு தீபாவளிதான். எனவேதான் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், அப்படி ஒரு அறிவிப்பை ரஜினி வெளியிடுவாரா? அல்லது…வழக்கம் போல கதம் கதம் தானா?. இவற்றுக்கெல்லாம் வரும் வாரத்தில் விடை தெரிந்து விடும்.

இன்றைய அரசியல் நிலவரம் பற்றி லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது. மக்களின் மனநிலையை அந்தக் கணிப்பு உணர்த்தி இருக்கிறது என்று சொல்லலாம். எச்சரிக்கையும் கூட.

2006-ம் ஆண்டு இறுதியில் மக்கள் மத்தியில் தி.மு. கழகத்திற்கு ஏறத்தாழ 40 சதவிகித ஆதரவு இருந்ததாக இதே கருத்துக் கணிப்பாளர்கள் முன்னர் தெரிவித்தனர். பிறகு, அடுத்த ஆண்டு மே மாதம் அந்த ஆதரவு 31 சதவிகிதமாகக் குறைந்திருப்பதாகக் கூறினர். தற்போது 25.8 சதவிகிதத்தினர் மட்டுமே தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

22 மாதங்களில் தி.மு.க.வின் செல்வாக்கு 14 சதவிகிதம் குறைந்திருக்கிறது. அதே சமயத்தில், 2006-ம் ஆண்டு அ.தி.மு.க.விற்கு ஏறத்தாழ 24 சதவிகித ஆதரவு இருந்ததாகவும் இப்போது 38 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகவும் அந்தக் கணிப்பு கூறுகிறது.

இதுவரை இந்திரா காந்தி மறைவைத் தொடர்ந்தும் ராஜீவ் காந்தியின் மறைவைத் தொடர்ந்தும் நடந்த இரண்டு தேர்தல்களில்தான் தி.மு.கழகத்தின் செல்வாக்கு 24 சதவிகிதமாகக் குறைந்தது. அதற்கு அப்போது வீசிய அனுதாப அலையே காரணம். ஆனால், இதர எல்லாத் தேர்தல்களிலும் எத்தகைய அரசியல் தட்பவெப்பநிலையிலிருந்தாலும், தி.மு.கழகத்தின் செல்வாக்கு 30 சதவிகிதமாகவே இருந்து வருகிறது. ஆனால் அந்தச் செல்வாக்கு 25 சதவிகிதமாக இறங்கியிருப்பதாகக் கருத்துக் கணிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

அதே சமயத்தில் தமிழக அரசு செயல்படுத்திவரும் நலத்திட்டங்களுக்கு 74 சதவிகித மக்கள் ஆதரவு அளிப்பதாகக் கூறுகிறார்கள். இன்னும் 15 சதவிகித மக்களுக்கு அந்தத் திட்டங்களின் சிறப்புக்கள் எட்டவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.

அரசின் திட்டங்களுக்கு இந்த அளவு வரவேற்பு இருக்கும்போது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி எப்படி அதிகரிக்கும் என்ற கேள்வி எழும்.
அண்மைக் காலமாக மகளிர் பாசறை, இளைஞர் பாசறை என்று கிராம அளவில் அடிப்படை அமைப்புகளை அ.தி.மு.க. உருவாக்கி வருகிறது. அந்த அமைப்புக்களில் அங்கம் பெறுகிறவர்கள் பெரும்பாலும் கழக வீட்டுப் பிள்ளைகளென்றாலும் 20 சதவிகிதம் பேர் புதியவர்கள் என்பதனை மறுக்க முடியாது.

மக்கள் பிரச்னைகளின் அடிப்படையில் தினசரி ஏதாவது ஒரு நகரத்தில் அ.தி.மு.க. ஏதாவது ஒரு போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கு மக்கள் மன்றத்தில் எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறது என்று கணிப்பதை விட, அந்தக் கழகம் தொண்டர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுத்து வருகிறது என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதனால் அதன் வாக்கு வங்கி 38 சதவிகிதமாக உயர்ந்துவிட்டதா? அமரர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர், அதன் வாக்கு வங்கி சராசரி 25 சதவிகிதம் என்ற அளவில் நின்றிருக்கிறது. ஆனால், கடந்த 22 மாதங்களில் அதன் வாக்கு வங்கி கூடுதலாக 14 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அண்மைக் காலம் வரை விலைவாசி உயர்வுதான் பிரதான பிரச்னையாக இருந்தது. அதனை மின்வெட்டு இப்போது பின்னுக்குத் தள்ளி முன்னணிக்கு வந்திருக்கிறது. இன்றைக்கு மின் தட்டுப்பாட்டை ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு ஜீவனும் உணருகின்றன. நகரங்களில் இருப்பவர்களுக்கு அதன் எதிரொலி அவ்வளவாகக் கேட்காது. ஆனால், பட்டிதொட்டிகள் குமுறுகின்றன.

மின்துறை அதிகாரிகள் துணையுடன் பெரிய ஆலைகள், தொழிற்சாலைகள் மின்சாரத்தைத் திருடுவதாக பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. இன்று வரை மின்சாரத் திருடர்களைப் பிடிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மக்கள் அபரிமிதமாக மின்சாரத்தைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுச் செயல்பட்டால் மின் பற்றாக்குறையையும் விலைவாசி உயர்வையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்த இரண்டு காரணங்களாலேயே சகல துயரங்களிலும் சஞ்சரிப்பதாக சாமானிய மக்கள் கருதுகிறார்கள். அதன் விளைவாக, அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி சிகரத்திற்கு உயர்ந்திருப்பதாகச் சித்திரிக்கிறார்கள். அந்த அடிப்படைப் பிரச்னைகளை சரியாகச் சமாளிக்கவில்லையென்றால், அந்தச் சித்திரமும் உயிர் பெற்று எழும். கருத்துக் கணிப்பு பல்லக்கில் ஏறும்.

இன்றைய அரசு நல்லதே செய்கிறது என்று முக்கால்வாசிப்பேர் கருத்துச் சொல்கிறார்கள். ஆனால், விலைவாசியையும் மின்தட்டுப்பாட்டையும் பார்க்கும்போது முகம் கருக்கிறார்கள். அதனைத்தான் லயோலா கல்லூரியின் கணிப்பாளர்கள் கணக்கிட்டுச் சொல்கிறார்கள்.

அடுத்து மக்கள் சொல்லும் குற்றச்சாட்டு மலைக்க வைக்கிறது. ஊராட்சி நிர்வாகம் முதல் மேல்நிலை நிர்வாகம் வரை செயல்பாடுகள் சீர்கேடு அடைந்திருக்கின்றன என்கிறார்கள். இதில் என்ன வேடிக்கையென்றால், எல்லா அமைப்புக்களிலும் சர்வ கட்சியினரும் பிரதிநிதிகளாக வீற்றிருக்கிறார்கள். இன்ன பணிக்கு இவ்வளவு கப்பம் என்று அவர்கள் நிர்ணயிக்கிறார்கள். குடிதண்ணீர் குழாய் இணைப்பு முதல் கட்டட வரைபட அனுமதி வரை கப்பங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதனை அனைத்துக் கட்சியினருமே பகிர்ந்து கொள்கிறார்கள்.

சின்னமனூர் நகராட்சி, தி.மு.க. நிர்வாகத்தில் இருக்கிறது. அந்த நகராட்சியை ஏன் கலைக்கக்கூடாது என்று கோர்ட் கேட்கிறது. பிரச்னை என்ன? எல்லாப் பணிகளுக்கும் தங்களுக்குக் கப்பங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சர்வ கட்சியினரும் கேட்கின்றனர். ஆனால், அதனை நகராட்சித் தலைவியால் செயல்படுத்த முடியவில்லை. காரணம், அவர் கப்பம் பெறுவதில்லை. ஆனால் நகர்மன்றத்திற்கே தொடர்பில்லாத ஆளும்கட்சிப் பிரமுகர், காண்ட்ராக்டர்களிடமிருந்து கப்பங்களை வசூலித்துக் கொள்கிறார் என்கிறார்கள்.

எனவே, இங்கே ஒரு சின்னமனூர் வெடிக்கிறது. இன்னும் பல சின்னமனூர்கள் வெடிக்கும் நிலையில் இருக்கின்றன. கப்பம் பெறுவது கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சியினரும்தான். அதனால் ஏற்படும் அதிருப்தி ஆளும் கட்சியைத் தாக்குகிறது.

இனிமேல் தேர்தலையே சந்திக்க வேண்டியிருக்காது. இதுதான் கடைசித் தேர்தல். ஆகவே, காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வோம் என்று நகரங்களும் ஒன்றியங்களும் செயல்படுகின்றன.

நகரச் செயலாளராகவோ ஒன்றியச் செயலாளராகவோ ஒருவரே தொடர்ந்து வருகிறார். அத்தகைய தொகுதிகள் தேர்தலில் சோதனையைச் சந்திக்கும். ஏனெனில், தொடர்ந்து செயலாளர்களாக வருபவர்கள் தொண்டர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களை நெருங்க முடியாத பொதுமக்களும் பொருமிக் கொண்டிருக்கிறார்கள்.

2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வைத் தாக்கிய புயல், மதுரையில்தான் மையம் கொண்டிருந்தது. மீண்டும் அந்தப் புயல் இப்போது அங்கே கருக்கொண்டிருப்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன என்கிறார்கள். காலத்தோடு செயல்படவில்லையென்றால், அந்தப் புயல் தென்பாண்டி மண்டலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

இப்படிப் பல்வேறு காரணங்களால் ஏற்படும் அதிருப்தி, அ.தி.மு.க.வின் செல்வாக்கை உயர்த்திக் காட்டுகிறது. பொதுவாக, வடமாநிலங்களில் பி.ஜே.பி. அரசு மீது மக்கள் அதிருப்தி கொள்ளும்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். காங்கிரஸ் அரசு மீது மக்கள் கோபம் கொள்ளும்போது பி.ஜே.பி. ஆட்சிக்கு வரும். அதே நிலைதான் தமிழகத்திலும் நிலவுகிறது. ஆளும் கட்சி தவறுகளைச் சரி செய்தால் அதற்கு வாய்ப்பு இருக்காது. அதற்குக் காலமும் இருக்கிறது.

நன்றி ரிப்போர்ட்டர்

பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு முதல் கட்டமாக 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சட்டத்தை மாநில அரசுகள் கடுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்துள்ள அன்புமணியை நாம் பாராட்ட வேண்டும். அரசு அலுவலகங்கள், திரையரங்குகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் புகைபிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியா முழுமைக்கும் பொருந்தும். அதேபோல் குடிப்பழக்கம் எவ்வளவு கேடு விளைவிக்கும் என்பதனை உணர்த்த, இந்தியா முழுமைக்கும் அவர் சட்டம் கொண்டு வருவது சாலச் சிறந்ததாக இருக்கும்.

அன்புமணி சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் புகையிலைப் பொருட்களுக்குத் தடைவிதிப்பது பற்றி ஆலோசிப்போம் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் என்று அறிவித்திருக்கிறார். அதற்கு இவ்வளவு காலதாமதம் தேவைதானா?

முந்தைய வாஜ்பாய் ஆட்சியில் பா.ம.க.வும் அங்கம் பெற்றிருந்தது. தலித் எழில்மலை சுகாதார அமைச்சராக இருந்தார். அப்போது பான்பராக் என்ற போதைப் பாக்கு தடை செய்யப்படும் என்று ஒரு செய்தி வந்தது. அவ்வளவுதான். பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து போதைப் பாக்குகளைத் தயார் செய்யும் கோடீஸ்வரர்கள் ஆடிப்போய் விட்டனர்.

எனவே, அவர்கள் பம்பரமாய்ச் சுழன்றனர். யார் யாரைச் சந்திக்க வேண்டுமோ அவர்களையெல்லாம் சந்தித்தனர். அதிகார தேவதைகளுக்கு கோடி அர்ச்சனைகள்தான்.

அதன் பின்னர் அப்படி ஒரு சட்டத்தைச் செயல்படுத்தும் எண்ணமே மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிந்த பின்னர் தான் அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பான்பராக்கிற்குத் தடை என்ற செய்தி எங்கிருந்து, எப்படிப் பரப்பப்பட்டது என்பதனை காலப்போக்கில் அறிந்தனர். `அடடா, ஏமாந்து விட்டோமே’ என்று நொந்து கொண்டனர். ஆனால், அவர்கள் கொட்டிய பணம் எங்கெங்கோ பாதாளம் வரை பாய்ந்தது.

இப்போது புகையிலைப் பொருட்களைக் கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி `படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்கிறார்.

இப்போது பொது இடங்களில் புகை பிடித்தால் 200 ரூபாய் அபராதம் என்று அறிவித்திருக்கிறார். இதனை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்கிறார்.

இதேபோன்று பீடிக்கட்டுகளில் மண்டைஓடு படம் போட வேண்டும். அதுவும் பீடிக்கட்டு லேபிளின் முக்கால் பகுதியை அந்த மண்டைஓடு ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அதன் அளவைக்கூடக் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆனால், அதனைக் கண்டு பீடி முதலாளிகள் பயம் கொள்ளவில்லை. இன்றைக்கு இந்தியாவிலேயே மிகப்பெரிய பீடி முதலாளி யார் தெரியுமா? மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சராக இருக்கின்ற பிரபுல் படேல் குடும்பம்தான். வட இந்திய மாநிலங்களில் செல்வாக்குப் பெற்ற படேல் பீடிகளும் இன்னும் இதர பிராண்ட் பீடிகளும் அவர்களுடைய உற்பத்திதான். மத்தியப் பிரதேசம், மராட்டிய மாநிலங்களில் இன்னும் பகாசுர பீடிக் கம்பெனி முதலாளிகள் இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது, நம்முடைய ஊர் பீடி முதலாளிகளெல்லாம் சுண்டைக்காய்கள்.

மத்திய சுகாதாரத்துறையின் மண்டை ஓட்டுச் சின்ன அறிவிப்பைக் கடுமையாக அவர்கள் எதிர்த்தனர். அரசியல் செல்வாக்குள்ள அவர்கள், பான்பராக் வியாபாரிகளைப் போல் பதற்றம் கொள்ளவில்லை. புரிந்து கொண்டனர்.

இன்னொரு பக்கம், இந்தியா முழுமையும் லட்சோபலட்சம் குடும்பங்கள் பீடி சுற்றும் தொழிலை நம்பியே வாழ்கின்றன. ஆந்திரா, கேரளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் அவர்கள் சங்க ரீதியாகத் திரண்டு இருக்கின்றனர். எனவே, பீடிக்கட்டில் முக்கால் பகுதியை ஆக்கிரமிக்கும் மண்டைஓட்டுச் சின்னத்தை அவர்களும் எதிர்த்தனர். போராடவும் தயாராயினர்.

`பீடிசுற்றும் தொழிலை நாங்கள் விட்டு விடத் தயார். அதற்குப் பதிலாக வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தாருங்கள்’ என்று அவர்கள் கேட்டனர்.

ஒரு பக்கம் பீடி முதலாளிகள், இன்னொரு பக்கம் பீடி சுற்றும் தொழிலாளர்களின் எதிர்ப்பு. இது மத்திய அரசை சிந்திக்க வைத்தது. ஆந்திரா சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியது. பீடிக்கட்டுகளில் மண்டை ஓட்டுச் சின்னம் வந்தால் வெற்றி பெறவே முடியாது என்பதனை அந்த மாநில காங்கிரஸ் கட்சி எடுத்துக் கூறியது.

மன்மோகன் சிங் அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த இடதுசாரிக் கட்சிகள் மண்டை ஓட்டுச் சின்னத்திற்கான சட்டத்திருத்தத்தை கடுமையாக எதிர்த்தனர். பீடிக்கட்டே தெரியாது. மண்டை ஓடுதான் தெரியும் என்பதனை எடுத்துக் கூறினர்.

இதன் விளைவாக, மத்திய சுகாதாரத்துறை சார்பாகக் கொண்டுவரப்பட்ட சட்டம், இப்போது குளிர்பதனப் பெட்டியில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்தச் சட்டத்திருத்தம் இனி செயலுக்கு வராது என்று மத்திய அரசும் உறுதி அளித்திருக்கிறது.

லட்சியங்கள் சிறந்தவைகளாக இருக்கலாம். அதனை செயல்படுத்துவதற்கான நோக்கங்களையும் பார்க்க வேண்டும். விளைவுகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

புகை பிடிக்க எங்கெங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதனை மத்திய சுகாதாரத்துறை சுட்டிக் காட்டியிருக்கிறது. அரங்கங்கள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு மையங்கள், உணவு விடுதிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றத் கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் என்று அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

அதே சமயத்தில் அதற்கு விதி விலக்கும் அளிக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட தங்கும் விடுதிகள், முப்பதுக்கும் அதிகமான இருக்கைகள் கொண்ட உணவு விடுதிகள், விமான நிலையங்களில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் புகைபிடிக்கலாம் என்று தெரிவிக்கிறது.

ஒரு சிறிய உணவு விடுதியில் பலர் புகை பிடிக்கிறார்கள் என்றால், அவர்களுடைய அபராதத் தொகையை ஆளுக்கு 200 ரூபாய் என்று விடுதியின் உரிமையாளரே செலுத்த வேண்டும் என்று அந்த அறிவிப்புக் கூறுகிறது.

மருத்துவமனைகளில், பொழுதுபோக்கு இடங்களில் புகை பிடித்தால் அபராதத் தொகையை யார் செலுத்த வேண்டும்? மருத்துவமனை அதிகாரிகளா? டாக்டர்களா?

பான்பராக் தடை செய்யப்படும் என்ற சேதி வந்ததும் என்ன நடந்தது? போதைப் பாக்கு விற்கிறாயா என்று பெட்டிக் கடைகளுக்கும் பல சரக்குக் கடைகளுக்கும் காவலர்கள் படையெடுத்தனர். லாட்டரிச் சீட்டுக்களைப் போல பதுக்கி வைத்து வியாபாரம் செய்வது போல போதைப் பாக்குகளை மறைத்து வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர்.

மதுபான உற்பத்தியை அனுமதிக்கிறோம். ஆனால் பாட்டில் மீது ஒட்டப்படும் லேபிளில் `குடி குடியைக் கெடுக்கும்’ என்று அச்சிட்டு சன்மார்க்கப் பிரசாரம் செய்கிறோம்.

பீடி, சுருட்டு, சிகரெட் உற்பத்தியை அனுமதிக்கிறோம். ஆனால் பீடிக்கட்டுகள் மீது மண்டை ஓடு படம் போட வேண்டும் என்கிறோம். இப்படித் தும்பை விட்டு வாலைப்பிடிக்கின்ற வேலைகளைத் தான் செய்கிறோம்.

ஊர்தோறும், பெட்டிக்கடை தோறும் பீடி, சிகரெட் விற்க அனுமதிக்கிறோம். விற்பதற்கும் தடையில்லை. வாங்குவதற்கும் தடையில்லை. ஆனால், புகை பிடித்தால் அபராதம் என்கிறோம்.

புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் என்பதனை ஏற்கலாம். ஆனால், மத்திய சுகாதாரத்துறை பட்டியல்போடும் பொது இடங்களின் உரிமையாளர்களுக்கும் கூட்டு அபராதம் என்பது எங்கோ இடிக்கிறது. பறக்கும் படை வேறு அமைக்கப்படுமாம்.

தபால்துறை அதிகாரிகள், மத்திய கலால், வருமானவரி_விற்பனை வரி, சுகாதாரத்துறை அதிகாரிகள், எல்லா மட்டங்களிலும் உள்ள ரயில் நிலைய அதிகாரிகள், தனியார் நிறுவனங்களில் தலைமை நிலைய அதிகாரிகள் என்று நீண்ட நெடும் பட்டியலே வெளியிட்டிருக்கிறார்கள். புகை பிடிப்பவர்கள் மீது இவர்களும் நடவடிக்கை எடுக்கலாமாம்.

இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட்டால் அது அன்புமணிராமதாசின் சட்டம் என்பது பாமரர்களுக்குத் தெரியாது. அந்தச் சட்டம் கடுமையாகச் செயல்படுத்தப்பட்டால், போலீஸ் ராஜ்யம் நடைபெறுகிறது என்று மாநில அரசைத்தான் மக்கள் வறுத்தெடுப்பார்கள். இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த இயலாது என்று பீகாரும் மராட்டிய அரசும் தெரிவித்து விட்டன. ஏனெனில், உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு குளறுபடியான சட்டம் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை

நன்றி ரிப்போர்ட்டர்

இவருக்கு தெரியாமல் இவர் பெயரை பயன்படுத்தி கெட்டப்பேர் உண்டாக்குறாங்களாம்..!!???

என்னத்தை சொல்றது.

நான் கிறிஸ்துவுக்கு எதிரானவன் கிடையாது. உண்மையையை எழுதிய கிறிஸ்துவர்க்கு நன்றி.

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராக இருப்பவர் கேனல் பானு. புலிகளுக்காகப் பல களங்களைக் கண்டு, வெற்றிகளைக் குவித்தவர்.

இலங்கை ராணுவம், புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி-யைப் பிடிக்க இப்போது இடையூறாக நின்று கொண்டிருப்பவர் தளபதி பானு. ஈழப்போர் முனையில் இருந்த அவரை மிகுந்த சிரமத்திற்குப் பின் நாம் பேட்டி கண்டோம். தமிழக இதழ் ஒன்றுக்கு அவர் அளிக்கும் முதல் பேட்டி இதுவே.

இலங்கைப் போரில் புலிகள் பின்-வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையா?

“நாங்கள் கூறினால் நம்பவா போகிறீர்கள்? பன்னாட்டு ஊடகவிய-லாளர்கள் எல்லாம் இங்கே வந்து பார்க்கட்டுமே. பார்த்தால் உண்மை தெரியும். இன்று வரை இலங்கை ராணுவம் எங்கள்மேல் போர் தொடுக்கவில்லை. அப்பாவி தமிழ்மக்கள் மீதுதான் தாக்குதல் நடாத்துகிறார்கள். சில இடங்களில் நாங்கள் தடுப்பு நடவடிக்கையில் இறங்குகிறோம். அவர்கள் பின்வாங்கி ஓடுகிறார்கள். இங்கே பாரிய (பெரிய) யுத்தம் நடப்பதாகக் கூறும் அவர்கள் வரைபடத்தை வைத்து அதை உறுதி செய்யட்டுமே.!”

தமிழ் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு இலங்கை அரசு அழைக்கிறதே? அதை தமிழ் மக்கள் ஏற்கிறார்களா?

“அப்படிப் போகத் துணியாமல்தான் அவர்கள் இங்கே அகதிகளாக இருக்கிறார்கள். ஏற்கெனவே மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை பகுதிகளில் ராணுவத்தை நம்பிச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர்களா நம் மக்கள்? அங்கே ராணுவச் சித்திரவதை தொடர்கிறது. ஒட்டுப்படைகள் (ராணுவத்துக்கு ஆதரவாக இயங்கும் தமிழ்க்குழுக்கள்) கையில் துவக்குகளோடு ஆள் கடத்தல், அழித்தொழிப்பு வேலைகளை ராணுவத்துடன் சேர்ந்து செய்கிறார்கள்.

அதனால்தான் வீடின்றி, உணவு, மருந்து கிடைக்காத நிலையிலும் தமிழ் மக்கள் கிளிநொச்சி நோக்கி நகர்கிறார்கள். அந்த மூன்றே முக்கால் லட்சம் மக்களும் யார்? 22 ஆயிரம் போராளிகளைப் பலி கொடுத்துள்ள குடும்பத்தினர்தானே? அதில் இருப்பது என் தாய், தந்தை, பிள்ளை, மாமன், மைத்துனன் தானே? அவர்கள் எப்படி அறுத்துக்கொண்டு போவார்கள்? அதனால்தான் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் அவர்கள் இங்கேயே நிற்கிறார்கள்.”

`பிரபாகரன் சரணடைய வேண்டும். தன்னையும் இயக்கத்தவர்களையும் அவர் காப்பாற்றிக் கொள்ள இதுதான் கடைசி வாய்ப்பு’ என்று மகிந்த ராஜபக்சே பேசியிருக்கிறாரே?

“இதைக் கேட்டு நாங்களும், எங்கட மக்களும் மட்டுமல்ல. சிங்கள ராணுவமே கூட சிரித்துக் கதைக்கிறது. ஒவ்வொரு அதிபருமே இப்படித்தான். பதவிக்கு வந்த மூன்றாண்டுகளுக்குள் பாரிய யுத்தம் ஒன்றை நடத்துவார்கள். அடிவாங்கி ஓடுவார்கள். தேர்தல் நெருங்கினால் `சமரசப் பேச்சு வார்த்தை, சமரசத் தீர்வு’ என்பார்கள். தேர்தலில் வென்றால் மீண்டும் மூன்றாண்டுகளுக்கு சண்டை பிடிப்பார்கள். வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே, அதற்காகத்தான் `இதோ நெருங்கிட்டோம். பிடிச்சிட்டோம். சரணடைங்க’ என்கிறார்கள்.”

புலிகளை முற்றாக அழித்தொழிக்காமல் ஓயப் போவதில்லை. புலிகளின் நாட்கள் எண்ணப்-படுகின்றன என்கிறார்களே சிலர்?

“நாங்களே நினைத்தாலும் இனி இந்த இயக்கத்தை அழிக்க முடியாது. `சரி போதும்’ என்று நாங்களே முடிவெடுத்தாலும் இனிமேல் இந்த இயக்கம் இலக்கை அடையாமல் ஓயாது. கரும்புலிகளின் எண்ணிக்கை நாளாந்தம் கூடுமே தவிர குறையாது. எமது இயக்கத்தின் பலம் ஆயுதமல்ல. மனஉறுதியும், உலகம் முழுவதும் வியாபித்துள்ள எங்கள் தமிழ் உறவுகளும்தான். அதனால் ராஜபக்சே அப்படிக் கதைக்கிறார் என்றால், அவர் கடைசிவரை கதைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.”

அமெரிக்கா, சீனா, கொரியா, இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து பெருமளவில் இலங்கை அரசு ஆயுதம் வாங்கிக் குவிக்கிறதே? அதைச் சமாளிக்கும் அளவுக்கு உங்களிடம் ஆயுத பலம் இருக்கிறதா?

(சிரிக்கிறார்) “அதுபற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்கள்தான் பிரேமதாசா காலத்திலிருந்தே வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறார்களே? அவர்கள் கஷ்டப்பட்டு வாங்கி பாதுகாப்பாகக் கொண்டு வந்து கடைசியில் எங்கட காலடியில் போட்டுவிட்டுத்தானே ஓடுவார்கள்? எங்களுக்கு எப்போதும் ஆயுதம் வாங்க வேண்டிய அவசியம் வந்ததே இல்லை. அவர்களது ஆயுதத்தைப் பிடுங்கித்தான் அவர்களை அடிக்கிறோம்.ஆனையிறவு சண்டையில் அவர்களிடம் இருந்து 152 மி.மீ. ஆட்லரி பீரங்கியைப் பிடுங்கினோம். பிறகு 122 மி.மீ. பீரங்கி. அவற்றை வைத்துத்தான் அவர்களை அடிக்கிறோம். ஒவ்வொரு பீரங்கிக்கும் இதுவரை இரண்டாயிரம் பேர்வரை மடிந்திருப்பான்கள். இப்படிப் பறித்த ஆயுதம் நிறைய இருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்.”

தடுப்பு நடவடிக்கை முடிந்து எப்போது தான் நீங்கள் சண்டை பிடிப்பீர்கள்?

“சிங்கள ராணுவத்தின் கை ஓங்கி விட்டது என்பது பொய்ப்பிரசாரம். நாங்கள் தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறோம். எங்கட தரப்பில் ஆயிரம் குண்டுகள் செலவானால் அவர்களிடமிருந்த பத்தாயிரம் குண்டுகளை நாங்கள் பறிக்க வேண்டும். இப்போது மழைக்காலத்துக்காகக் காத்திருக்கிறோம். பலத்த மழையில் அவர்களை அடித்தால்தான் சரிப்படும். தப்பி ஓடமுடியாமல் தண்ணீரில் விழுந்து அவர்கள் சாக வேணும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். எவ்வளவு மழை வெள்ளம் எண்டாலும் நாங்கள் களத்தில் நிற்போம். எங்கள் பயிற்சி அப்படி.”

கடந்த ஒரு மாதத்தில் `கொத்துக் கொத்தாகப் புலிகள் பலி’ என்ற செய்திகள்….?

“உண்மை ராஜபக்சேவுக்கே தெரியும். எங்கட தரப்பு வீரச்சாவுகளை நாங்கள் மறைக்க மாட்டோம். அவர்கள் கூறும் கணக்குப்படி பார்த்தால் எங்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கையையே தாண்டிவிடும் போலிருக்கிறது. ம். வேடிக்கைதான்….

அஸ்ஸாம் மாநிலம் இனக் கலவரங்களால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. இருவேறு இன ஆதிவாசி மக்களிடையே மோதல். இன்னொருபக்கம் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரம். அந்த மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதி எரிந்து கொண்டிருக்கிறது. சொந்த மண்ணிலேயே மக்கள் அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

என்ன காரணம்? நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, மாநில வட்டாரக் கட்சிகளுடன் பி.ஜே.பி. அணி அமைக்க முயற்சிக்கிறது. தவறில்லை. ஆனால், என்றோ மரித்து விட்ட இனப் பிரச்னைகளுக்கு இப்போது உயிர் கொடுக்க வேண்டுமா?

எப்போதெல்லாம் தேர்தல் கதவைத் தட்டுகிறதோ, அப்போதெல்லாம் இந்தப் பிரச்னையை பி.ஜே.பி. எரிய விடும். இப்போது அந்தத் திருப்பணியைத் தொடங்கியிருக்கிறது. பங்களாதேஷிலிருந்து குடியேறிய இஸ்லாமியர்களை அடையாளம் கண்டு அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று அந்தக் கட்சி கூறுகிறது. இதற்காகவே முன்னர் இயக்கம் நடத்தித் தேய்ந்து சிதறிப் போன மாநில வட்டாரக் கட்சிகளை அணி சேர்க்கிறது.

1947-ம் ஆண்டு நாடு விடுதலையடைந்த போது வங்கத்தில் ரத்த ஆறுகள் ஓடின. பங்களாதேஷ் என்று கிழக்கு வங்கம் பிரிந்து பாகிஸ்தானின் ஓர் அங்கமானது. இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு என்றனர். ஆனால் பிரிந்து சென்ற பங்களாதேஷில் வாழ விருப்பமின்றி ஆயிரக்கணக்கான வங்காளி இஸ்லாமியக் குடும்பங்கள் இந்தியப் பரப்பில் குடியேறின. அப்படிக் குடியேறிய மக்கள் அஸ்ஸாமில் கணிசமாக இருக்கின்றன.

ஆனால், இவர்களை நாடு கடத்தியே தீர வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது எழுப்பி, இனக் கலவரங்களுக்கு வழி வகுக்கிறார்கள். படுகொலைப்படலங்கள் தொடங்கிவிட்டன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மேற்கு வங்கத்திலும் மும்பையிலும் பி.ஜே.பி. இதே குரலை எழுப்பியது. பங்களாதேஷிகளை அடையாளம் கண்டு அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று பி.ஜே.பி. கோரியது. அந்தக் கோரிக்கையை செயல்படுத்த முடியாது என்று மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு அறிவித்தது. அங்கேயும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பங்களாதேஷிலிருந்து குடியேறிய மக்களின் மூன்றாவது தலைமுறையினர்தான் வாழ்கிறார்கள்.

இப்படிக் கோரிக்கை எழுப்பும் பி.ஜே.பி., மையத்தில் அமர்ந்து இந்தியாவை ஐந்து ஆண்டுகள் ஆண்டபோது செயல்படுத்தி இருக்கலாம். இன்னொரு பக்கம் அமர்நாத் ஆலயப் பிரச்னையை எழுப்பி காஷ்மீரையே கந்தக நெருப்பில் வாட்டிக் கொண்டிருக்கிறது.

ஒரிஸாவை பி.ஜே.பி.யின் சங்பரிவார அமைப்புகள்தான் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாநிலத்தில் 95 சதவிகித மக்கள் இந்துக்கள்தான். இரண்டு சதவிகிதம் கூட இல்லாத கிறிஸ்துவ மக்களால் அந்த பூமிக்கு ஆபத்து வந்திருக்கிறதாம்.

இப்போது அந்த மாநிலத்தின் கூட்டணி அரசில் பி.ஜே.பி. அங்கம் பெற்றிருக்கிறது. எனவே, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவா அமைப்புக்கள் முழுச் சுதந்திரத்தோடு செயல்படுகின்றன. எனவே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தேவாலயங்களைத் தகனம் செய்கிறார்கள். பாதிரிமார்களைப் படுகொலை செய்கிறார்கள். இயேசுவின் திருத்தொண்டை மேற்கொண்டிருக்கும் கன்னிப் பெண்களைக் கற்பழிக்கிறார்கள். இப்படி அவர்கள் இந்து சமயத்திற்குப் பாதுகாப்புத் தேடுகிறார்களாம். முதல்வர் நவீன் பட்நாயக்கால் இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. கானகங்களில் எரியும் நெருப்பில் பி.ஜே.பி. குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது.

நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக முடி சூடிக் கொண்ட பின்னர், எப்படி கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்ட ஆதிவாசி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அதே போல் ஒரிஸாவிலும் உயிரோடு எரிக்கப்படுகிறார்கள்.

ஒரு விஸ்வ ஹிந்து சாமியார் வனங்களுக்கு நடுவே ஆஸ்ரமம் அமைத்து, கிறிஸ்துவ ஆதிவாசி மக்களை இந்து மதத்திற்குத் திருப்பும் வேலையைச் செய்து கொண்டிருந்தார். இப்படி இவர்களே கட்டாய மதமாற்றம் செய்வார்கள். ஆனால் தேவாலயங்கள் மதமாற்றம் செய்வதாகக் கூறி, லங்கா தகனம் செய்வார்கள்.

அந்தச் சாமியாரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். அதனை அவர்களே பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். ஆனால் பி.ஜே.பி.யின் சங்பரிவாரங்களால் மாவோயிஸ்டுகளோடு மோதமுடியவில்லை. எனவே மீண்டும் தேவாலயங்களை எரிப்பது _ கிறிஸ்துவ மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது என்பன போன்ற வன்முறை வெறியாட்டங்களை நடத்துகிறார்கள். மாறுபட்ட மத உணர்வுள்ளவர்கள் என்பதற்காக மனிதர்களைக் கொலை செய்வது அவர்களுடைய குடும்பங்களையே தீயிட்டுக் கொளுத்துவது என்ன நியாயம்? கொலைச் செயல்தான்.

அந்த அதர்மம், அக்கிரமம்தான் நியாயம் என்று எந்த இந்து சமுதாயக் கோட்பாடும் சொல்லவில்லை. இன்றைக்கு இன்னும் ஒரிஸாவில் நடைபெறுவது இந்துத்துவா பயங்கரவாதம்! அதனை இன்று வரை மாநில அரசால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பில்லை. காவல் துறையின் உதவியை நாடினால் அவர்கள் கண்களை மூடிக்கொள்கிறார்கள். இதேபோன்று 2002-ம் ஆண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக குஜராத்தில் அரசு ஆதரவுடன் பயங்கரவாதம் ஏவி விடப்பட்டது. அப்போதும் கண்ணீரும் கம்பலையுமாய் அடைக்கலம் தேடிய மக்களுக்குக் காவல் துறை பாதுகாப்புத் தரவில்லை. கொடூரத் தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் மீதே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இப்போது ஒரிஸாவில் அதன் மறுபதிப்பு அரங்கேற்றப்படுகிறது.

இவ்வளவு பெரிய கொடுமை நடைபெறுவது நமது பிரதமருக்கு எப்போது தெரியும்? அவர் அமெரிக்காவில் புஷ் நாமாவளியை முடித்து விட்டு பிரான்சிற்கு வந்தார். அங்குதான் நிருபர்களும் பொது நல அமைப்புக்களும் ஒரிஸா தகனம் செய்யப்படுவதை அவருடைய கவனத்திற்குக் கொண்டு வந்தனர். `அப்படியா? அது கொடுமைதான்’ என்றார்.ஆனால், அவர் தாயகம் திரும்பிய பின்னர் என்ன நடவடிக்கை எடுத்தார்? ஒரிஸா அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி உலகமே குரல் கொடுத்து விட்டது. அதனைச் செய்தாரா? அதனைக் கூட மறந்து விடுவோம். மத்திய புலனாய்வுத் துறையினரை அனுப்பி அங்கு என்னதான் நடைபெறுகிறது என்பதனை அறிந்து அறிக்கை தரச் சொன்னாரா? இல்லை. `மத்திய படையினரும் மாநில காவல்துறையினரும் சேர்ந்து அங்கே அமைதியை நிலைநாட்டுவோம்’ என்று சமரசம் பேசுகிறார்.

என்ன காரணம்? சங்பரிவாரங்கள் முரட்டுத் தனமான, மூர்க்கத்தனமான இந்துத்துவாவைச் செயல்படுத்துகின்றன. பி.ஜே.பி. அதன் அரசியல் டார்பிடோ படையாகச் செயல்படுகிறது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசோ மென்மையான இந்துத்துவா கோட்பாட்டிற்குச் செயல்வடிவம் கொடுக்கிறது.ஆறுமுறை மத்திய அரசு எச்சரித்தும் ஒரிஸா அரசு கலவரத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. குஜராத் கலவரத்தின் போது எப்படி ஓர் இஸ்லாமியச் சகோதரியை பஜ்ரங்தள் பரிவாரங்கள் கூட்டாகக் கற்பழித்தனவோ, அதேபோல ஒரிஸா வனாந்தரங்களின் ஆதிவாசி மக்களுக்கு அரும் சேவை செய்து வந்த ஒரு கிறிஸ்துவ சகோதரியை அதே வானரசேனை கற்பழித்தது. இதனை விட வேறு தேசிய அவமானம் இருக்க முடியுமா?

கர்நாடகாவில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் பரிவாரங்கள் தொடர்ந்து மாதாகோயில்களைத் தாக்கின. மதமாற்றம் நடைபெற்ற இடங்களில்தான் அத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றதாக முதல்வர் எடியூரப்பாவே பொய் சாட்சி சொன்னார். கடந்த பத்து ஆண்டுகளாக கர்நாடகாவில் எவரும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதில்லை என்று சிறுபான்மை இன ஆணையம் தெரிவித்திருக்கிறது.மதக்கலவரங்களை நடத்தித்தான் தாங்கள் வளர முடியும் என்பதில் நரேந்திர மோடியிலிருந்து எடியூரப்பா வரை உறுதியாக இருக்கிறார்கள். தம்மை மதச் சார்பற்ற சக்தி என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சிக்கு வகுப்புவாத சக்திகளைச் சந்திப்பதற்கான திட்டமும் இல்லை. துணிச்சலும் இல்லை. அதனால் காஷ்மீர், அஸ்ஸாம், ஒரிஸா, கர்நாடகா என்று நாடு எரிந்து கொண்டிருக்கிறது.

நன்றி ரிப்போர்ட்டர்

அமர்க்களமாக நடந்திருக்க வேண்டிய தமிழ்த் திரையுலகினரின் பேரணியும், கண்டனப் பொதுக்கூட்டமும் முன்னணி நடிகர் _ நடிகைகள் யாருமே பங்கேற்காததால் மனக் கொதிப்புடனும் மன வருத்தத்துடனும் நடந்து முடிந்திருக்கிறது.

கடந்த 19-ம் தேதி, ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்தினரைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகினரின் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. ஏக எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட மூத்த – இளம் இயக்குநர்கள் மட்டுமே பெரும் அளவில் கலந்து கொண்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பக்கபலமாகவும் தங்கள் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்த இளம் இயக்குநர்கள், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத தமிழ்த் திரைப்பட நடிகர்களுக்கு எதிராகப் பொங்கி எழவும், காறி உமிழவும் தவறவில்லை.சென்னையிலிருந்து கடந்த 18-ம் தேதி மாலை சிறப்பு ரயிலில் ராமேஸ்வரத்துக்கு பாரதிராஜா புறப்பட்டபோது கூட, சில முன்னணி நடிகர்கள் நிச்சயமாக ராமேஸ்வரம் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் அவருக்குத் தரப்பட்டதாம்.மறுநாள் மதியம் ராமேஸ்வரத்திலுள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கு பாரதிராஜா வந்தபோது, வடிவேலு, ஜீவா தவிர வேறு எந்த நடிகரும் வரவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதும், “இப்படி நம்ப வெச்சு கழுத்தை அறுத்துட்டாங்களேய்யா. இன்னிக்கு நம்மை வாழ வெச்சுக்கிட்டு இருக்குறது தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் தானேய்யா. அந்த நன்றிக்காவது சில பேர் வந்திருக்கலாமேய்யா. கொஞ்சம் கூட உணர்வு இல்லையேய்யா அவங்ககிட்டே. அவங்களை நம்பி பெருசா ஏற்பாடெல்லாம் பண்ணி வெச்சிருக்கு. இப்படி ஏமாத்திட்டாங்களேய்யா” என்று ராம.நாராயணனிடம் கடுகடுத்தாராம் பாரதிராஜா.

பாரதிராஜாவின் கோபமும் உணர்வும் சேரன், அமீர், சீமான் உள்ளிட்ட இளம் இயக்குநர்களுக்கும் தொற்றிக் கொள்ள, தமிழ் முன்னணி நடிகர்களுக்கு எதிராக மேடையிலேயே அவர்கள் சாட்டையைச் சுழற்றினார்கள்.இயக்குநர் செல்வமணி பலபடி மேலேறி முன்னணி நடிகர்களைக் காறி உமிழ்ந்தார். “எங்கிட்டே ஒரு நடிகன், `நான் ராமேஸ்வரத்துக்கு வந்தா அங்கே `ஆய்’ போக முடியாது. அதுக்கான வசதி அங்கே இல்லே’ன்னு சொல்றான். இன்னொருத்தன், `ராமேஸ்வரத்துக்கு வந்தா உயிருக்குப் பாதுகாப்பு இல்லே’னு சொல்றான். ஏண்டா இங்கே வாழறவனெல்லாம் கொலைகாரனா? அருவா, வேல் கம்போடதான் சுத்திக்கிட்டு இருக்கானுங்களா? அவனுங்க பாஷையிலேயே சொல்றேன். பன்றிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாத்தான் வரும். நாங்க எல்லாருமே சிங்கம்டா!” என்று பொறி கலங்கும் அளவுக்கு யாருக்கோ வெடி வைத்துப் பேசினார் இயக்குநர் செல்வமணி.

பக்குவமாய்ப் பேசும் பாரதிராஜா கூட, அன்றைக்கு மேடையில் நடிகர்களுக்கு எதிராக கடுகடுத்த முகத்துடன் பாய்ச்சலைக் காட்டினார். அந்த அளவுக்கு பேசிய அத்தனை பேருமே, நடிகர்களை ஈழத் தமிழர்களின் துரோகிகளாகவும், நம்பிக்கை மோசடிக்காரர்களாகவும் சித்திரித்து வாங்கு வாங்கென்று வாங்கி விட்டுத்தான் ஓய்ந்தார்கள்.இவர்கள் இப்படி ஒட்டுமொத்தமாகப் பாய என்ன காரணம் என்பதை அறியும் நோக்கத்துடன் போராட்டத்திற்கு வந்திருந்த சினிமா டெக்னீஷியன்கள் சிலரிடம் பேசினோம்.

“பாரதிராஜா எவ்வளவு பெரிய இயக்குநர். அவர் ஆளாக்கிவிட்ட நடிகர்களெல்லாம் இன்றைக்கு அவருக்கு எதிரா இருக்கானுங்க. பாரதிராஜா ராமேஸ்வரத்துல பேரணி, பொதுக்கூட்டம்னு அறிவிச்சதுமே, `அந்த ஆளுக்குக் கிறுக்குப் பிடிச்சுடுச்சா’ன்னு கேட்ட நடிகர்கள்தான் அதிகம். இந்தப் பேரணி, பொதுக்கூட்ட அறிவிப்புக்குப் பின்னால அரசியல் இருக்கு. ராம. நாராயணன்தான் பின்னணியில இருந்து தி.மு.க.வுக்கு ஆதரவா திரையுலகினரை ஒண்ணு சேர்க்கறாரு. பாரதிராஜாவை பின்னால் இருந்து இயக்குவதே ராம. நாராயணன்தான்னு நடிகர்கள் பலரும் என் காது படவே பேசுறாங்க. ஆயிரம்தான் அரசியல் இருந்துட்டுப் போகட்டுமே, எடுத்திருக்கிற நோக்கம் எதுக்காகன்னு அந்த ஹீரோக்கள் யோசிச்சுப் பார்க்க வேணாமா? இலங்கையில ஈழத் தமிழர்களை சுட்டுப் பொசுக்கிட்டு இருக்காங்க. இதை யாரும் வாய் வார்த்தையா சொல்லலை. அங்கே நடக்கிற கொடுமைகளை சி.டி.யா போட்டு நடிகர்கள் கையில கொடுத்து, இதைப் போட்டுப் பார்த்துட்டு வாங்கன்னுதான் பாரதிராஜா சொல்லியிருக்காரு. அதைப் போட்டுப் பார்த்துட்டாவது ஹீரோக்கள் ராமேஸ்வரம் வந்துருக்கணுமா இல்லையா? `வர்றோம்… வர்றோம்’னு சொல்லிட்டு கடைசில கழுத்தை அறுத்துட்டாங்க. அந்த சி.டி.யைப் போட்டுப் பார்த்துட்டு கதறிக்கிட்டு ராமேஸ்வரத்துக்கு ஓடி வந்த பிரபல நடிகர்கள் இரண்டே பேருதாங்க. ஒருத்தர் வடிவேலு. இன்னொருத்தர் ஜீவா. இத்தனைக்கும் ஜீவா தமிழன் கிடையாது. அந்தப் பையனுக்கு இருக்கிற உணர்வுகூட மற்ற முன்னணி தமிழ் நடிகர்களுக்கோ, நடிகைகளுக்கோ இல்லாம போனது ரொம்ப ரொம்பக் கொடுமை சார்” என்று ஒரே மூச்சில் வெடித்து வெதும்பினார்கள், அந்த டெக்னீஷியன்கள்.
`நடிகர், நடிகைகளை இப்படி ஒரேயடியாக கரித்துக் கொட்டுவது நியாயமில்லையே. அவர்களும்தான் வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் வைத்திருக்கிறார்களே?’ என்று அவர்களிடம் கேட்டோம்.
“அது ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு உண்ணாவிரதப் போராட்டம் இல்லை. பாரதிராஜா, ராம. நாராயணன் மற்றும் எங்களுக்கு எதிராக, போட்டியாக நடத்தப் போகும் உண்ணாவிரதப் போராட்டம். ஈழத் தமிழர்களுக்காக உண்மையான உணர்வு உள்ளவர்கள் அவர்கள் என்றால், அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாரதிராஜா பேரணி, கண்டனப் பொதுகூட்டம் என்று அறிவித்ததற்கு முன்பே அறிவித்திருக்க வேண்டியதுதானே! எந்த நடிகருக்கும் ராமேஸ்வரத்துக்கு வர இஷ்டமில்லை. அதைக் காரணமாக வைத்து, `கோடி கோடியாகச் சம்பாதிக்க மட்டும் நடிகர்களுக்கு உலகத் தமிழர்கள் வேண்டும். ஈழத் தமிழர்கள் வேண்டும். ஆனால், அவர்களுக்காகக் குரல் கொடுக்க மட்டும் நடிகர்கள் வரமாட்டார்கள்’ என்று எங்கள் தரப்பில் நடிகர்களுக்கு எதிரான கருத்தை ஈழத் தமிழர்கள் மத்தியில் விதைத்து விடுவோமோ? என்று அஞ்சித்தான் நவம்பர் ஒன்றாம் தேதி ஈழத்தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கத் தயாராகி வருகிறார்கள் நடிகர்கள்.
அவர்கள் நடத்தப் போகும் அந்த உண்ணா நோன்பில் உண்மையில்லை. ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கும் உணர்வும் இல்லை. அப்படி அவர்களுக்கு உண்மையான உணர்வு இருந்திருக்குமானால் நடிகர்கள் சங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? நாங்கள் பேரணி, பொதுக்கூட்டம் நடத்திய இதே ராமேஸ்வரத்தில் அவர்களும் தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருக்க வேண்டும். அது எங்களுக்குப் போட்டியான போராட்டமாக இருந்தால்கூட, மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருப்போம். நடிகர்கள் வடிவேலுவுக்கும், ஜீவாவுக்கும் இருந்த உண்மையான உணர்வில் ஒரு பங்குகூட, கோடி கோடியாகச் சம்பாதிக்கும் எந்த நடிகர்கருக்கும் இல்லை என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு” என்று தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகக் கொட்டித்தீர்த்தார்கள், அந்த டெக்னீஷியன்கள்.

மொத்தத்தில் படுகொலை செய்யப்படும் ஈழத் தமிழர்களுக்காகவும், பிரபாகரனுக்கு ஆதரவாகவும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் ராமேஸ்வரத்தில் பேசிய அத்தனை திரைப்பட இயக்குநர்களும், நடிகர்களுக்கு எதிராகவும் கொதித்துவிட்டுத்தான் சென்னை திரும்பினார்கள்.
இந்நிலையில், நவம்பர் முதல் தேதி நடிகர்கள் சென்னையில் நடத்தப்போகும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் கலந்து கொள்வார்களா? அல்லது தார்மீக ஆதரவு என்று அறிக்கை மட்டும் விட்டுவிட்டு விலகி நிற்பார்களா? என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்புடன் கூடிய கேள்வி.

நன்றி ரிப்போர்ட்டர்.

இன்று காலை எனது பதிவை பார்த்தால் ராமேஸ்வரம் நடிகர்களின் பொறுப்பற்ற செயல் என்ற பதிவில் டாக்டர் ருத்ரன் அவர்களின் பின்னூட்டத்தை பார்த்ததும் எனது ஆச்சரியத்திற்கும் ,மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.நான் பதிவு எழுத ஆரம்பித்து 5 மாதங்கள் தான் ஆகிறது. பொதுவாக வேர்டு பிரெஸ் பதிவுகளுக்கு அவ்வளவாக பின்னூட்டம் வருவது கிடையாது பிளாக்கருடன் ஒப்பிட்டால். இப்போது அந்த குறை நீங்கிவிட்டது. டாக்டரின் பின்னுட்டத்தை இந்த படிவில் எப்படி ஏற்றுவது என்பது தெரியவில்லை, கம்பியூட்டர் அறிவு எனக்கு கம்மி. அதனால் எனது பதில் அதை பார்த்துக்கொள்ளுங்கள்.

 

somewhere most of the people seem to forget that innocent people are being the victims. eelam is now becoming more a saleable tag than a real concern, even in blogs. but these discussions are just exposing how people like harihara**think. let us go beyond these petty people and talk about how we can do something collectively and constructively. our focus should be on what to do instead of using glamour dolls as props for a short drama

From ராமேஸ்வரம்– நடிகர்களின் பொறுப்பற்ற செயல், 2008/10/22 at 7:19 மாலை

எனது பதிவான!!!! http://rajkanss.wordpress.com/wp-admin/post.php?action=edit&post=150 சங்கிலி என்பவர் எழுதிய பின்னூட்டத்தை பதிவாக வெளியிட்டுள்ளேன்.
கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் உண்மையான காரணங்கள் இவைதான்!
பார்த்தசாரதி
இலங்கை தமிழர்படும் இன்னல்களை நினைத்து தான் நிம்மதியும் இல்லாமல், நித்திரையும் இல்லாமல் தவிப்பதாக தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி சமீபத்தில் கூறியிருந்தார். அவரது இந்த கூற்றை பார்க்கும்போது, இந்த தள்ளாத வயதிலும் எவ்வளவு சாதுரியமாக அவரால் நடிக்க முடிகிறது என்ற வியப்புதான் ஏற்படுகின்றது. ஆனால் இலங்கை தமிழருக்காக கருணாநிதி நிம்மதியையும் நித்திரையையும் இழப்பதானால், அதனை அவர் எப்போதோ இழந்திருக்க வேண்டும். அதுவும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒரு பங்காளியாக இருக்கும் கருணாநிதிக்கு, நாலரை ஆண்டுகளாக வராத இலங்கை தமிழர் மீதான பாசம், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அந்த இரண்டரை ஆண்டுகளாக வராத அக்கறை, இப்பொழுது திடீரென பொத்துக்கொண்டு வந்தது ஏன் என்ற கேள்வியை தமிழக மக்கள் கேட்பதில் தவறேதும் இல்லை.
ஏறத்தாள கடந்த கால் நூற்றாண்டாக புலிகள் செய்துவந்த படுகொலைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருப்பது அல்லது அவர்களுடன் ஊடல்பாணியில் சரசம் விடுவது, கருணாநிதியின் அரசியல் நாகரீகத்தில் அல்லது ராஜதந்திரத்தில் ஒன்று. எனவே அதைவிட்டுவிடுவோம். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் மீது இப்பொழுது திடீரென சீறிப்பாயும் கருணாநிதி, இவ்வளவு காலமும் ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் என கேட்கும் உரிமை நமக்குண்டு. இலங்கை இராணுவம் கிழக்கு மாகாணத்தில் சம்பூரை கைப்பற்றியபோது,வாகரையை கைப்பற்றியபோது, குடும்பிமலையை கைப்பற்றியபோது, கொக்கட்டிச்சோலையை கைப்பற்றியபோது,திருகோணமலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது, வடக்கில் மன்னாரை விடுதலை செய்தபோது, துணுக்காயை கைப்பற்றி முறிகண்டிவரை முன்னேறியபோது, நிம்மதியையும் நித்திரையையும் இழக்காத கருணாநிதி, இப்பொழுது பிரபாகரனின் கடைசி இருப்பிடமான கிளிநொச்சியும் முல்லைத்தீவும் பறிபோகும் நிலையில், விழித்துக்கொண்டு வீராவேசம் கொள்வதற்கு காரணம் என்ன?
மேற்குறிப்பிட்ட இடங்களிலெல்லாம் இராணுவ நடவடிக்கையின்போது இலங்கைத்தமிழர்கள் கொல்லப்படவில்லையா? அல்லது அந்தப்பகுதிகளில் வாழ்பவர்கள் எல்லாம் இலங்கைத்தமிழர்கள் இல்லையா? அல்லது இப்போதைய வீராவேசத்துக்கு ஏதாவது சொந்த சுயநலம் காரணமாக இருக்கின்றதா என தமிழகத்தின் இதர அரசியல்வாதிகளும் அரசியல் விமர்சகர்களும் பத்திரிகையாளர்களும் ஆராய்வதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில் கருணாநிதியின் அரசியல் குள்ளத்தனம் அவ்வகையானது. ஆனால் தமிழகத்தின் விடயமறிந்த அரசியல் விற்பன்னர்களின் கருத்துப்படி, கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் பிரதான காரணம் வேறு இரண்டு முக்கிய விடயங்களாகும். ஓன்று, அவரது வருங்கால அரசியல் கூட்டணி சம்பந்தமானது. மற்றது, தமிழ்நாட்டின் அனைத்துதுறை மக்களையும் கடுமையாக பாதிக்கும் மின்சாரவெட்டு சம்பந்தமானது. இந்த மின்சாரவெட்டு கிராமப்புறங்களில் எட்டுமணிநேரம் அமுலாக்கப்படுவதினால், விவசாயம்,மாணவர்களின் கல்வி, சிறுதொழிற்துறை என சகல மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பொதுவாகவே கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கை வைத்திருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மேலும் செல்வாக்கை பெற்றுவிடுமோ என கருணாநிதி அஞ்சுகிறார். இது அவரது நிம்மதி மற்றும் நித்திரையின்மைக்கு ஒரு காரணம். ஆனால் இதையும்விட அவரை வாட்டிவதைப்பது தி.மு.க. தலைமையிலான அவரது அரசியல் கூட்டணியில் ஏற்பட்ட உடைவுதான்.
கடந்த தமிழக மாநில தேர்தலில் தி.மு.க. ஒரு மகா கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. அ.தி.மு.கவையும் ம.தி;மு.கவையும் தவிர, மிகுதி அனைத்து கட்சிகளும் தி.மு.க. தலைமையிலான அக்கூட்டணியில் இடம் பெற்றன. அப்படி இருந்தபோதும் கருணாநிதியால் ஏனைய கூட்டணிகட்சிகளின் உதவியுடன் ஒரு சிறுபான்மை அரசையே அமைக்கமுடிந்தது. 243 பேர் அங்கத்துவம் கொண்ட தமிழக சட்டசபையில், தி.மு.கவுக்கு வெறுமனே 96 ஆசனங்களே கிடைத்தன. தி.மு.கவுக்கு ஏற்பட்ட இந்த தோல்வியை கண்டு,அன்றே கருணாநிதிக்கு நிம்மதி போய்விட்டது. அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. மேற்கொண்ட அரச ஊழியர்கள், தொழிலாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் மீதான அடக்குமுறை காரணமாகவேஅ.தி.மு.கவுடன் அதிருப்தியுற்றிருந்த அரசியல்கட்சிகளை இணைத்து, தி.மு.கவால் இந்த மகாகூட்டணியை உருவாக்க முடிந்தபோதிலும்,அதற்கு மக்கள் எதிர்பார்த்த ஆதரவை வழங்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டின. மக்களுக்கு அ.தி.மு.க. மீது அதிருப்தி இருந்தபோதிலும்,தி.மு.கவுக்கு வாக்களிக்காததிற்கு கருணாநிதி உருவாக்கி வந்த குடும்ப அரசியலே பிரதான காரணம். அண்ணாதுரை,நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், சத்தியவாணிமுத்து போன்றோரால் பல தியாகங்களின் ஊடாக உருவாக்கிய தி.மு.கவை, கருணாநிதி தனது குள்ள தந்திரங்களின் மூலம் இதனது குடும்ப சொத்தாக மாற்றியபின்னர், சாதாரண தி.மு.க. உறுப்பினர்களுக்கு கட்சி மீதான பற்றுதல் விட்டுப்போய் நீண்டநாட்களாகிவிட்டன. இப்பொழுது கட்சியுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள், அரசபதவிகளுக்காகவும் அரசாங்க கொந்தராத்துக்களுக்காகவும், வேறு பிற சலுகைகளுக்காகவும் வந்து சேர்ந்தவர்களே. கட்சியில் எத்தனையோ சிரேஸ்ட உறுப்பினர்கள் இருக்க, தனது மகன் ஸ்டாலினை தனக்குப்பின் அடுத்த முதலமைச்சராக்க கருணாநிதி திட்டமிட்டு வேலை செய்து வருகின்றார். அத்துடன் தனது மகள் கனிமொழியை ராஐயசபா உறுப்பினராக்கியதுடன், அவரை மத்திய மத்திய அமைச்சரவையிலும் சேர்க்க முயன்று வருகின்றார். (ஆனால் கனிமொழியின் தயாரும்,கருணாநிதியின் மூன்றாவது மனைவியுமான ராசாத்தி அம்மாள், தனது மகளை கருணாநிதிக்குப்பின் முதலமைச்சராக்க வேண்டும் என வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு பெண்ணை நிறுத்துவது கூடுதலான பயனைக்கொடுக்கும் என கருணாநிதிக்கு நெருக்கமான சிலரும் ஆலோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கெனவே தயாநிதி மாறன் விவகாரத்தால் சீர்குலைந்திருக்கும் குடும்ப விவகாரம், இதனால் மேலும் சிக்கலுக்குள் உள்ளாகிவிடுமோ என்ற கவலையும் கருணாநிதியைப் பீடித்துள்ளது என விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர்)
இத்தகைய ஒரு சூழலில்,தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே அவருக்கு தினமும் தொந்தரவு கொடுத்துவந்த,ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியை கருணாநிதியே வெளியேற்றிவிட்டார். ‘இங்கில்லாவிட்டால் அங்கு’என்பது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் எழுதப்படாத விதி என்பதால், ராமதாஸ் அடுத்த தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பார் என்பது நிச்சயம். இந்த சூழ்நிலையில் கருணாநிதிக்கு மேலும் ஒரு துரதிஸ்டம் நிகழ்ந்துவிட்டது. அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுஆயுத ஒப்பந்த விவகாரத்தால், இடதுசாரி கட்சிகள் மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியபோது, கருணாநிதி அவ்வாறு செய்யாமல் அதை ஆதரித்து வாக்களித்து இடதுசாரிகளின் வெறுப்பை தேடிக்கொண்டுவிட்டார். அதனால் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் (சி.பி.ஐ.(எம்),சி.பி.ஐ.) தமிழ்நாட்டில் இனிமேல் தி.மு.கவுடனான கூட்டணி இல்லையென்று அறிவித்துவிட்டன. எனவே அவ்விருகட்சிகளும் கூட அடுத்த தேர்தலின்போது,அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது பெரும்பாலும் நிச்சயமாகிவிட்டது. அதை உறுதிசெய்வதுபோல ஒக்டோபர் 2ந் திகதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)இலங்கை தமிழர் பிரச்சினையை ஒட்டி ஏற்பாடு செய்த உண்ணாவிரதத்துக்கு தி.மு.க. அழைக்கப்படாததுடன், அ.தி.மு.கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் தாக்கத்தால் கவலைக்குள்ளான கருணாநிதி, ஒரு பத்திரிகை அறிக்கை மூலம் வெளிப்படையாகவே தனது கவலையை தெரியப்படுத்தியிருந்தார். அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்து உரையாடியுமிருந்தார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் உறவினரான தா.பாண்டியன், சென்ற தேர்தலின்போதே அ.தி.மு.கவுடன் கூட்டுச்சேரும் முயற்சியில் ஈடுபட்டவர் என்பது தமிழக அரசியல் வட்டாரங்கள் நன்கு அறிந்த ஒரு விடயம். இதனால் கருணாநிதியின் நிம்மதியும் நித்திரையும் மேலும் குலைவதற்கு இதுவும் ஒரு காரணம்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜயகாந்,தனது கட்சி யாருடனும் கூட்டுச்சேராது என்று அடிக்கடி சொல்லி வந்தாலும், (கருணாநிதி அவரது முதலாவது எதிரியாக இருப்பதால்) கடைசி நேரத்தில் ஜெயலலிதாவுடன் சேரக்கூடும் என்ற பயம் கருணாநிதிக்கு உண்டு. பெரும் செல்வாக்கு எதுவும் இல்லாவிட்டாலும்,திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் வெற்றிக்காற்று எந்தப்பக்கம் வீசுகின்றது என்று பார்த்து, அ.தி.மு.க. பக்கம் சேர்ந்துவிடுவார். பணத்துக்காக புலிகளுக்கு சார்பாக தீவிரமாக குலைத்துவந்தாலும், திருமாவளவன் அரசியல் இலாபத்துக்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர தயங்கப்போவதில்லை. ஏற்கனவே கடந்த தேர்தலின் போது,அ.தி.மு.க. அணியில் நின்று தேர்தலில் வென்றபின்னரே, சுயலாபம் கருதி திருமாவளவன் தி.மு.க. அணிக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை இவ்வாறு போனால் தி.மு.கவையும் காங்கிரசையும் தவிர்ந்த ஏனைய அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய மகா கூட்டணியாக அ.தி.மு.க. கூட்டணி அமைவதுடன், அடுத்த தமிழக அரசாங்கம் ஜெயலலிதா தலைமையில் அமையும் என்பதும் திண்ணம். இந்த தலையிடி நிலைமைதான் கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் பிரதான காரணம். உண்மையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) தன்னை உண்ணாவிரதத்துக்கு அழைக்கவில்லை என்றதும்தான், கருணாநிதிக்கு இலங்கை தமிழர்மீது திடீர் அக்கறை பிறந்தது. அதனால் சென்னை மாங்கொல்லையில் கூட்டம்போட்டு,தான் இலங்கை தமிழர்; பிரச்சினையில் அக்கறையுடன் இருப்பதாக காட்ட முயன்றார். அப்பொழுதும் அவருக்கு திருப்தி வரவில்லை. கூட்டணிக் கட்சிகள் தன்னுடன்தான் இருக்கின்றன என காட்டவேண்டுமே என எண்ணினார். அதற்காக சர்வகட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதில் அவரது முன்னைய கூட்டணி கட்சிகளான பா.ம.க.,இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் என்பன கலந்துகொண்டது அவருக்கு சற்று மகிழ்ச்சியேயாயினும், அவர்கள் தொடர்ந்தும் கூட்டணியில் இருப்பார்களா என்ற சந்தேகமும் அவரது மனதை அரித்துக்கொண்டே இருக்கின்றது. அதனால் இரு வாரங்களுக்குள் இலங்கையில் மத்திய அரசாங்கம் தலையிட்டு இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தாவிட்டால், தமிழக எம்.பிக்கள் இருவாரங்களுக்குள் பதவி விலகுவார்களென எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரசை விட்டு விலகவும் தயங்கமாட்டேன் என்றவொரு செய்தியை இடதுசாரிகளுக்கு தெரிவித்து, அவர்கள் அ..தி.மு.க. பக்கம் போகாமல் பார்த்துக்கொள்வது கருணாநிதியின் தந்திரமாகும்.
அத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.(எம்)) தமிழ் மாநில செயலாளர் என்.வரதராசன் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மகன் ஸ்டாலினையும் மகள் கனிமொழியையும் நேரடியாக அனுப்பி நலம் விசாரித்து வரச்செய்தார் அத்துடன் தேவையேற்பட்டால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியை மையமாக வைத்து நாடாளாவிய ரீதியில் உருவாக்க முயலும் மூன்றாவது அணியில் கூட, தான் இணையக்கூடும் என்ற சைகைகளையும் கருணாநிதி இடதுசாரிகளுக்கு காட்டிவருகின்றார். அதனால்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேருவதில் வெளிப்படையாக கோடிட்டுக் காட்டுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சற்று அடக்கி வாசிக்கிறது. அதற்கு காரணம் கருணாநிதி மூன்றாவது அணிக்கு தற்செயலாக வரக்கூடிய சூழல் உருவானால், அதை ஏன் கெடுப்பான் என்ற எண்ணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உண்டு. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள கூட்டணிக் குழப்பங்களால் நிம்மதியும் நித்திரையும் இழந்துள்ள கருணாநிதி, தன்னுடைய முன்னைய கூட்டணி கட்சிகளை தொடர்ந்தும் தன்னுடன் வைத்திருக்கும் ஒரு உத்தியாகவே, அடுத்ததாக இலங்கை தமிழர் பிரச்சினையை வைத்து மனித சங்கிலி போராட்டம் ஒன்றுக்கு ஒக்டோபர் 21ந் திகதி அழைப்பு விடுத்துள்ளார். (சென்னையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மனித சங்கிலி போராட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.) இப்போதைக்கு வேறு எந்தப்பிரச்சினையை வைத்து அவர்; கூட்டணி கட்சிகளை அழைத்தாலும், அவர்கள் முன்வரப்போவதில்லை என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆனால் தமிழகத்திலுள்ள் ஏறத்தாள எல்லாக்கட்சிகளும் இலங்கைத்தமிழர் பிரச்சினையை தூக்கிப்பிடித்திருப்பதால், அடுத்த தேர்தல்வரை கூட்டணி கட்சிகளை தன்பிடிக்குள் வைத்திருப்பதற்காக, இலங்கை தமிழர் பிரச்சினையை தொடர்ந்தும் ஒரு ஆயுதமாக பாவிப்பதே அவரது திட்டமாகும். இலங்கை தமிழர் படும் இன்னல்களால்தான், நிம்மதியையும் நித்திரையையும் தான் இழந்திருப்பதாக கருணாநிதி வெளியே சொல்லிக்கொண்டாலும், தன்னுடையதும் தனது குடும்ப வாரிசுகளினதும் அரசியல் எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வே அவரது அனைத்து அவலங்களுக்கும் அடிப்படைக் காரணங்களாகும். ஆனால் கருணாநிதி கையாளும் எந்தவிதமான தந்திரோபாயங்களும், அடுத்த தேர்தலில் அவரைக் காப்பாற்றி நிம்மதியையும் நித்திரையையும் கொடுக்கக்கூடிய சூழல் தமிழகத்தில் இல்லையென்பதே அங்குள்ள உண்மையான நிலவரமாகும்

http://www.thenee.com/html/221008-2.html

நன்றி குமுதம்

டெல்லியில் இலங்கைத் தூதரை நமது வெளியுறவுச் செயலாளர் சிவசங்கரமேனன்

 அழைத்தார். பேச்சுவார்த்தையின் மூலம் ஈழப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண

 வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நிலை என்பதனை எடுத்துரைத்தார். செய்தி

 வந்தது. இப்படிச் சொன்னது சிவசங்கரமேனன்தானா? நம்ப முடியவில்லை.

எந்த இலங்கைப் பிரச்னையென்றாலும் அங்குள்ள தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தித்தான் நேருவும் இந்திராகாந்தியும் முடிவெடுத்தனர். ஆனால், அதன்பின்னர் ராஜிவ்காந்தி காலத்தில் இந்தியா தடம் புரண்டது. ஈழப் பிரச்னையில் இந்திரா வகுத்த பாதையிலிருந்து இந்திய அரசு வழுக்குப் பாதையில் அடியெடுத்து வைத்தது.1987-ம் ஆண்டு இந்தியா - இலங்கை உடன்பாடு ஏற்பட்டது. அதன்பின்னர் ராஜிவ்காந்தி இலங்கை சென்றதும், மரியாதை அணிவகுப்பில் நின்ற ஒரு சிங்கள வெறியன் அவரைக் கொலை செய்ய முயன்றதும் மறக்கக்கூடிய நிகழ்ச்சியா? அதன்பின்னர் இந்திய ராணுவம் ஈழப் பரப்பில் இறங்கியது.

ராஜிவ் காந்தி காலத்தில் இலங்கையில் இந்தியத் தூதராக இருந்தவர்களில் ஒருவர் சிவசங்கரமேனன். இந்திய உளவுத் துறைத் தலைவராக இருந்தவர் எம்.கே. நாராயணன். இன்றைக்கு அதே மேனன் இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர், எம்.கே. நாராயணன் பிரதமரின் பாதுகாப்புத் துறை ஆலோசகர். ரொமேஷ் பண்டாரி என்பவர் இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்தார். சிங்கள இனவாத அரசு அவரது துணைவியாருக்கு விலை மதிப்புமிக்க வைர நெக்லசை வாங்கித் தந்ததாக பிரபல இந்திய ஆங்கில ஏடு எழுதியது.தீட்சித் என்று இன்னொருவர் தூதராக இருந்தார். பிரபாகரனைச் சுட்டுக் கொல்லும்படி யாழ்ப்பாணத்திலிருந்த இந்திய ராணுவத் தளபதிகளை நச்சரித்தார். அமைதியை நிலைநாட்ட வந்திருக்கிறோமே தவிர, பிரபாகரனைச் சுட்டுக் கொல்வற்காக அல்ல என்று தளபதிகள் மறுத்தனர்.
`பேச்சுவார்த்தைக்கு பிரபாகரனை அழைத்து வரும்போதே தீர்த்துக்கட்டுங்கள். மேலிடத்து உத்தரவு’ என்றார். மறுத்து விட்டனர்.
தனிப்பட்ட எவர்மீதும் குற்றம் கூற வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வுகளை இப்போது நாம் சுட்டிக்காட்டவில்லை. அன்னை இந்திராகாந்திக்குப் பின்னர் அரியணைக்கு வந்தவர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் ஈழ மக்களின் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சிங்கள இனவாத அரசு ஈழத் தமிழர்களை அழித்திட அடுத்தடுத்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. அதன் பின்னர்தான் ஈழத்து இளைஞர்கள் போர்க்குணம் கொண்டு புலிப் பாய்ச்சலுக்குத் தயாரானார்கள்.ராஜிவ்காந்தியின் மரணம் சிங்கள இனவாதிகளுக்கும், இங்குள்ள ஈழத்து எதிராளிகளுக்கும் ஆயுதமாகக் கிடைத்தது. அன்னை இந்திராவின் அந்த அருந்தவப்புதல்வனின் இழப்பை ஈடு செய்ய முடியாதுதான். இன்றைக்கும் நமது இதயங்களில் ரத்தம் கசிகிறது. ஆனால் அதனையே காரணம் காட்டி ஈழத் தமிழினத்தை அழிக்க வேண்டுமா? அதற்குத் துணை போக வேண்டுமா?

நடந்து போன துயர சம்பங்களைக் கடந்து இனி நடக்க வேண்டிய காரியங்களைக் காண்போம் என்ற மனநிலைக்கு அன்னை சோனியாவே வந்திருக்கிறார்.அன்னை இந்திராகாந்தியைப்  பலிகொண்டவன் ஒரு சீக்கியன். அதனைத் தொடர்ந்து ஆத்திரம், ஆவேசத்தில் நடந்த சீக்கியப் படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டோம். ஒரு சீக்கியன் செய்த பாதகச் செயலுக்காக ஒரு இனமே அழிய வேண்டுமா? அதனால்தான் ஒரு சீக்கியரையே நாட்டின் பிரதமராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஈழத் தமிழ் இனத்தை அழிக்கின்ற வேலைகளை சிங்கள இனவாத அரசு வெறிகொண்டு வேகப்படுத்தியிருக்கிறது. அதற்காக எத்தனையோ நாடுகளில் ஆயுதம் வாங்கிக் குவித்திருக்கிறது. அந்த ஆயுதங்களால் போரைத் தீர்மானிக்க முடியாது.ஆனால், இந்திய அரசு சிங்கள இனவாத அரசிற்கு பெரும் சேவகம் செய்திருக்கிறது. ஈழப் போராளிகளின் கடல் நடமாட்டத்தைக் கண்காணிப்பதே இந்திய கடற்படைதான் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனை சிங்கள கப்பற்படைத் தளபதியே பகிரங்கமாக அறிவித்தார்.

சிங்கள ராணுவத்தினருக்கு தமிழ் மண்ணிலேயே பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த அநியாயம் அம்பலமானதும் சிங்களவர்கள் வடமாநிலப் பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.கொழும்பிற்கு அருகிலுள்ள ராணுவ விமானத் தளங்கள் மீது ஈழப் போராளிகளின் சிட்டுக் குருவி விமானங்கள் தாக்குதல் தொடுத்தன. அதனைக் கண்டு சிங்களவன் சீற்றம் கொண்டதைவிட நமது இந்திய அதிகாரிகள்தான் அதிக ஆவேசம் கொண்டனர். எனவே, இந்திய - சிங்கள கூட்டு ரோந்து வேண்டும் என்றன. அப்படிச் சொன்னவரே சிவசங்கர மேனன்தான்.ஈழத்தில் தினம் தினம் சிங்கள விமானங்கள் குண்டுமாரி பொழிகின்றன. குடியிருப்புக்கள், பள்ளிகள், வயல்கள், கோயில்களை அழிக்கின்றன. குழந்தைகள் காப்பகம் கூட அழிக்கப்பட்டது. அப்போதெல்லாம் நமது இதயங்கள் படபடத்தன. டெல்லி அதிகாரிகளோ அதற்காகக் கண்டனம் கூடத் தெரிவித்ததில்லை. ஆனால் சிங்கள அரசுக்கோ ராணுவத்திற்கோ சேதம் என்றால் எல்லா உதவிகளையும் செய்தனர். இன்றுவரை செய்கின்றனர்.இதற்கு அவர்களைக் குற்றம் சாட்டக் கூடாது. நாமே குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டும். இங்குள்ள தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. உகாண்டாவில் குஜராத்திகளுக்குச் சோதனையென்றால் கட்சி வேறுபாடின்றி அணிதிரள்கின்றனர். ஜாம்பியாவில் மார்வாடிகளுக்கு ஆபத்து என்றால் மத்திய அரசே குரல் கொடுக்கிறது.இப்போது தமிழகம் ஈழத் தமிழர்களுக்காக அணி திரள்கிறது. முதல்வர் கூட்டிய சர்வகட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மத்திய அரசும் சோம்பல் முறிக்கிறது. அரசியல் மாச்சரியங்களால் இதயங்களைக் கருக்கிக் கொண்டவர்கள் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு தனிமைப்பட்டு வருகிறார்கள். அவர்களைப் பற்றி கவலை கொள்ளாது இப்போது உருவாகி இருக்கும் ஒற்றுமை வலிமை பெற வேண்டும். அந்த வலிமைதான் இந்திய அரசை அசைக்கும். ஈழத் தமிழர்களுக்குக் கரம் கொடுக்கும். ஈழத்துக் கதிரவனை மறைக்கும் கார்மேகங்கள் கலையும்.

அங்குள்ள தமிழர்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க இலங்கை அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று செய்தி வந்தது. அடுத்து நமது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புவிற்குப் பயணம். ஆஹா! இனி ஈழத்தின் கிழக்கு வெளுத்துவிடும் என்று நம்பினால் ஏமாந்துவிடுவோம். அதே சமயத்தில் அவர்களுடைய முயற்சியைப் பாராட்டுகிறோம்.தமிழகத்தில் ஈழப் பிரச்னை எதிரொலிக்கும் போதெல்லாம் நமது பிரதமர்கள் சிங்கள இனவாத அரசிற்கு வேதாந்தம் சொல்வார்கள். இதற்கு முன்னர் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்களாக இருந்த நரசிம்மராவ், நட்வர்சிங் போன்றவர்கள் கொழும்பிற்குப் பயணம் போய் வந்திருக்கின்றனர். அதனால் என்ன பலன் ஏற்பட்டது.இராமேசுவரத்திற்கு அப்பால் இந்தியக் கடலில் மிதக்கும் நமது போர்க் கப்பல்கள் இடம் மாற வேண்டும். அதனை நமது பிரதமர் செய்தால்தான் நம்பிக்கை பூக்கும். இந்திய ஆயுதங்கள் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் நிம்மதி பிறக்கும்.ஈழப்போராளிகளை எதிர்த்து சிங்கள ராணுவம் போர் புரிவதை நாம் விமர்சிக்கவில்லை. ஆனால் போராளிகளுடன் போர் என்ற பெயரால் எத்தனை ஆயிரம் அப்பாவி ஈழத்து மக்கள் மடிந்திருக்கிறார்கள்.ஈழப்போராளிகளின் பாசறைகள் தாக்கப்படுவது பற்றி நாம் கவலை கொள்ளவில்லை. ஆனால் லட்சோப லட்சம் தமிழ் மக்களை சிங்கள இனவாத அரசு அநாதைகளாக _ அகதிகளாக கண்ணீரும் கம்பலையுமாக அலையவிட்டுக் கொன்று குவிப்பதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

நாம் தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும். இல்லையேல் சிங்கள இனவாத அரசுடன்தான் கைகுலுக்கும். இதுதான் இதுவரை நாம் கண்ட நடைமுறை.

நன்றி ரிப்போர்ட்டர்.

நன்றி குமுதம்.காம்

உண்மையிலே கலைஞர் மின்வெட்டில் இருந்து தப்பவில்லை. கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தது ஈழ பிரச்சினையால். சட்ட்மன்ற கூட்டத்தொடரில் தெரியும் இவர்களின் நிலைமை.

நன்றி.குமுதம்

ழப் பிரச்னையை முன் வைத்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக்

 கூட்டத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்ற அனைத்து இயக்கங்களும் கலந்து கொண்டன.

ஈழப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டம் அறைகூவல் விடுத்தது. அதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும், குறிப்பிட்ட தேதிக்குள் செய்யப்படவில்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.இதன் எதிரொலி டெல்லி அதிகார வட்டத்திலும் கேட்டது. கொழும்பில் சிங்கள அரசும் பதற்றம் கொண்டது. வன்னிக் காடுகளில் வதைகின்ற மக்களுக்கு நம்பிக்கை ரேகையும் தெரிந்தது.அதன் பின்னர் சென்னையில் நடந்த மனிதச் சங்கிலி ஈழமக்களுக்கு ஆதரவான எழுச்சியை ஏற்படுத்தியது. அந்த மனிதச் சங்கிலியில் கல்லூரி மாணவர்கள், எந்த இயக்கத்தையும் சாராத பொது மக்கள், இளைஞர்கள், பள்ளிச் சிறுவர்கள் என்று சமுதாயத்தின் பல்வேறு கண்ணிகளும் தம்மை இணைத்துக் கொண்டன.மனிதச் சங்கிலியைப் பார்வையிட்ட கலைஞரைப் பார்த்து, மக்கள் ஆங்காங்கே எழுப்பிய ஒரே குரல் “தாங்கள்தான் ஈழமக்களின் கடைசி நம்பிக்கை” என்பதுதான்.

அனைத்துக் கட்சிக் கூட்ட செய்தி வந்ததுமே உலகத் தமிழர்கள் அனைவருமே நன்றிப் பெருக்கோடு முதல்வருக்கு வாழ்த்துச் சொன்னார்கள். காரணம், இனியாவது ஈழத்துச் செவ்வானம் சிவக்கும் என்று நம்பினார்கள்.தமிழகம் கொந்தளிக்கும் போதெல்லாம் சிங்களச் சீமான்கள் டெல்லிக்கு ஓடி வருகிறார்கள். தமிழ் நெஞ்சங்களின் நெருப்புச் சங்கீதத்தை நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய குறிக்கோள்.நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் பதவி விலகினாலே மைய அரசு ஆட்டம் காணும். எனவே குறிக்கப்பட்ட கெடு நெருங்க நெருங்க சிங்கள அரசுடன் பேச்சு வார்த்தை என்றனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிராணப் முகர்ஜி சிங்கள அதிபரின் தூதரைச் சந்தித்த பின்னர், தமிழகம் விரைந்தார். முதல்வரைச் சந்தித்தார். ஏதோ வரம் கொடுக்கும் தேவன் கரம் கொடுக்க வருகிறாரோ என்று நமது இதயங்கள் எதிர்பார்ப்பில் படபடத்தன.

போர் நிறுத்தம் பற்றிப் பேசினார்களா? பேசினார்கள். “ஈழப் போர்க்களத்தில் நாமும் ஒரு தரப்பினர் என்றால் போர் நிறுத்தம் பற்றிப் பேசலாம். எனவே போர் வேண்டாம் என்று நாம் எப்படிக் கோர முடியும்” என்று கலைஞரைச் சந்தித்த பின்னர் பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் தெரிவித்தார் இது முதல்வருக்கும் ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும். எனவேதான் “நாற்பதாண்டுப் போரை எப்படி நான்கு நாட்களில் முடிக்க முடியும்” என்று முதல்வர் கேட்டார். அதே கருத்தினை நிருபர்களிடம் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். எனவே, போர் நிறுத்தம் பற்றிப் பேசவே இல்லை என்பது சரியாக இருக்காது. இல்லையெனில் இருவரும் ஒரே கருத்தைத் தெரிவித்திருக்க முடியாது.போர் நிறுத்தம் பற்றி பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாக அறிகிறோம். போர் நிறுத்தம் என்றால், களத்தில் நிற்கும் இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். போரை நிறுத்து என்று சிங்கள அரசைக் கேட்பது ஒருகை ஓசை. வாதத்திற்காக அதனை சிங்கள அரசே ஏற்றுக் கொண்டாலும் விடுதலைப் புலிகள் போரை நிறுத்துவார்கள், மனித வெடிகுண்டுத் தாக்குதல்களை நிறுத்துவார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் தருவது?   இது ஒரு பிரச்னை.

விடுதலைப் புலிகளின் கேந்திரமான கிளிநொச்சியின் புறநகர்ப்பகுதி வரை சிங்கள ராணுவம் சென்றிருக்கிறது. இப்போது நடைபெறுவதுதான் இறுதிப்போர் என்பதனை இருதரப்பினரும் ஒப்புக் கொள்கின்றனர். எனவே, இந்த நிலையில் போர் நிறுத்தம் என்பதனை சிங்கள அரசு ஏற்கும் நிலையில் இல்லை. இது இன்னொரு பிரச்னை. எனவே, முடிவு தெரியாத சில புதிர்களை பிரணாப் முகர்ஜி போட்டுச் சென்றிருக்கிறார்.விடுதலைப் புலிகளுக்காக நாம் பரிந்து பேசவில்லை. ஆனால் அவர்களோடு யுத்தம் என்ற பெயரால் ஈழமக்கள் மீதும் அவர்களுடைய குடியிருப்புக்கள் மீதும்தான் சிங்கள ராணுவ விமானங்கள் குண்டு போடுகின்றன. இப்போது அந்த ராணுவம் கிளிநொச்சி மருத்துவமனை மீதே குண்டுகளை வீசியிருக்கிறது. ஏற்கெனவே செஞ்சோலை குழந்தைகள் காப்பகம் மீது குண்டு போடவில்லையா?அண்மையில் சென்னை வந்த இலங்கையின் அமெரிக்கத் தூதர் சொன்ன ஒரு கருத்தை மட்டுமே நினைவுபடுத்துகிறோம். அவர் சொன்னார்: “இந்தப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கலாம். ஆனால் அடிப்படைப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது. சில ஆயிரம் ஈழ இளைஞர்களாவது மீண்டும் கெரில்லாப் போர் நடத்தத் தலைமறைவாவார்கள். அந்த யுத்தத்தை வெல்வது கடினம். எனவே, இப்போது போர் உக்கிரம் பெற்றிருந்தாலும் இன்னொரு பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். தீர்வு காணப்பட வேண்டும்” என்று கொழும்பு நகரிலேயே குடியிருக்கும் அமெரிக்கத் தூதர் சொன்னார்.அவர் இன்னும் சொன்னார்: “சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களுக்கு அளவே இல்லை. எனவே இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை அமெரிக்கா நிறுத்தி விட்டது” என்றார். எந்த அளவிற்கு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கேள்வி கேட்பாரன்றி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள் என்பது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு நாட்டிற்குத் தெரிகிறது. ஆனால் எட்டிய தூரத்தில் இருக்கும் இந்தியாவிற்குத் தெரியவில்லையே? அதனால்தான் இலங்கையில் நடைபெறும் வன்கொடுமைகளுக்கு இதுவரை இந்தியா கண்டனம் கூடத் தெரிவித்ததில்லை.

“ஈழமக்களுக்கு இந்திய நிவாரண உதவிகள், அங்குள்ள வடக்கு _ கிழக்கு மாநிலங்களுக்கு இன்னும் அதிகாரப் பரவல் என்பதனையெல்லாம் இலங்கை அரசு செயல்படுத்தும்” என்று பிரணாப்முகர்ஜி தெரிவித்தார். நன்றி. மகிழ்ச்சி. தீபாவளிக்கு இனிப்புக் கொடுத்திருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஈழ மக்களின் துயரங்களைக் கலைஞர் வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கரமேனனும் கொழும்பிற்கு ஒரு நடைபோய் வந்தனர். கலைஞரைச் சந்தித்தனர்.அப்போது சிங்கள அரசு தெரிவித்த எந்தத் திட்டமாவது செயல்படுத்தப்பட்டதா? கிளிநொச்சி செல்லும் எண்-9 சாலையை சிங்கள அரசு இரண்டரை ஆண்டுகளாக மூடி விட்டது. அதனால் சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் எந்த உதவியும் வன்னிப் பகுதிக்குச் செல்ல முடியவில்லை. வழியிலேயே சிங்கள ராணுவம் பறித்துக் கொள்கிறது. இதனை உலகமே கண்டித்தது. ஆனால் இந்திய அரசு என்ன செய்கிறது. கண்டித்து வாய்ச் சொற்களாவது  உதிர்த்ததுண்டா?

ஆனாலும் அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலிக்குப் பின்னாலும் டெல்லித் தேர் நகரவில்லையென்றாலும் அசைவுகள் தெரிகின்றன. அந்த அசைவுகள் வேகம் பெற வேண்டுமெனில் அனைத்துக் கட்சி அமைப்பு தொடர்ந்தாக வேண்டும். களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகளுக்காக நாம் வாதாட வேண்டாம். கானகத்தில் தவிக்கும் ஈழமக்களுக்காக நேசக் கரம் நீட்ட வேண்டாமா? அதுதான் கொட்டும் மழையில் வெட்ட வெளியில் நிற்கும் இரண்டரை லட்சம் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

நன்றி ரிப்போர்ட்டர்.

cartoon_2052

நன்றி. குமுதம்.காம்

 

 

 

 

 

 

 

cartoon_207

நன்றி குமுதம்.காம்

 

இந்தப் பதிவிலுள்ள கடிதம் குமுதம் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் மெயிலில் இருந்து என்னுடைய மெயிலுக்கு வந்திருந்தது. கடிதத்தை படித்து முடித்ததும் எதுவும் சொல்ல இயலவில்லை. இயல்பு நிலைக்கு திரும்ப சற்று நேரமாகியது.
 
இக்கடிதத்தைபடித்தபொழுதுஎனதுவிழியிலிருந்துஎன்னையும்

அறியாமல்சிலகண்ணீர்த்துளிகள்பூமியில்விழுந்தன.

ஏதோஒருசெப்டம்பர்11அன்றைக்கு

,உலகின்ஏதோஒருமூலையில்நடந்தசம்பவத்தை

இன்னும்மறக்காமல்நாம்விவாதித்துகொண்டிருக்கிறோம்.

ஆனால்நம்காலடியில்உள்ளதேசத்தில்

நம்சொந்தங்களுக்குதினம்தினம்செப்டம்பர்11

நடந்துகொண்டிருப்பதைநாம்இன்றுவரைகண்டுகொள்ளவில்லை

அல்லதுகண்டும்காணாததுபோல்இருந்துகொண்டிருக்கிறோம்.

ஒருசீக்கியமாணவனின்மயிரைஅறுத்ததற்காகவெகுண்டெழுந்தசீக்கிய

இனம்எங்கே,

உன்தொப்புள்கொடிஉறவின்உயிரைஅறுத்தபின்னும்

வாய்மூடிவேடிக்கைபார்க்கும்நம்தமிழ்இனம்எங்கே!!!!!
இப்படிக்கு,
இக்கடிதத்தைபடித்தபிறகாவதுஉங்கள்நெஞ்சில்தமிழினப்பற்றுஎட்டிப்பார்க்கும்

என்றநம்பிக்கையில்உங்களில்ஒருவன்
(கண்கள் நிறையக் கனவுகளோடும்,துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்தரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறது)

நலமுடன் இருக்கிறீர்களா?உலகத் தமிழர்களே?

குண்டு விழாத வீடுகளில்,அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள்,இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?

எனக்குத் தெரியும்,என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின்குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக்கரைந்திருப்பீர்கள்……

எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது,உங்கள் வீட்டு வரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம்ஆடும்”மஸ்தானா,மஸ்தானாவின்” அரையிறுதிச் சுற்று முடிவுக்குவந்திருக்கும்.அண்ணனும்,தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா?அம்மா,அப்பாவின் மறைவுக்குப் பின்னால்,எனக்குத் தலை வாரிவிட்டு,பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை,நீண்டதேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும்,சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்……

அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு,நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை,இரவு பகல்ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்….அதனால் தான் எழுதவில்லை……….ஒலிம்பிக்தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும்,என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும்,அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது,எனக்கு உங்கள்நினைவு வந்தது…..அதுமட்டுமல்ல,இந்திய அரசுகளின் உதவியோடு,இலங்கை ராணுவத்திற்குநன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.

ஒரு பக்கம்,இரங்கற்பா எழுதிக் கொண்டு,மறுபக்கம்,நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும்உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?இன்னொரு முறைஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள்,சாவின் மடியில்எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிதையாவது கிடைக்கும் அல்லவா?

இன்னொரு தமிழகத்தின்மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது,குழந்தைகளையும்,கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒருவகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவதுகுறையட்டும்…….
மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலானவெளிச்சத்தில்,தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,குழந்தைகள்இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் “நேச நாட்டு” விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள்,உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடைபடுமே என்று தான் அப்போது எழுதவில்லை,

எங்கள் இனப் போராளிகளை கொன்றுகுவித்து,நிர்வாணமாக்கி,இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல்,எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் ” சார்க்” கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள்,பெண்களின் இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கியகேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள்,நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின்இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது,தமிழர்களே?அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு,செப்பயான் குளத்தில் முங்கிஎழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு,வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து,அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்துவிடுகிறேன் அகதி முகாமில்.

முகாமின்,தகரத் தடுப்புகளின் இடைவெளியில்தெரியும் பள்ளிக்கூடமும்,அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும்,அம்மாவின்மடியில் இருந்து,எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவுபடுத்தும். ஆயினும் பாழும் வயிறு,பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில்நிறுத்தி விடும்,அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்…….அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு,ஆனால் நீங்கள்பீஸாக் கடைகளின்,வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள்,எழுதத் தோன்றவில்லை…..எனக்கு….

அமைதியாய் விடியும் பொழுதும்,
அழகாய்க் கூவும் குயிலும்,
தோகை விரிக்கும் மயிலும்,
காதல் பேசும்கண்களும்,
தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,
தாமரை மலரின்தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன்வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,
அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,
கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழையநினைவுகளும்,

இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத்தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம்வேண்டாம் அண்ணா,என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு,உங்கள் வீட்டில் கிழித்துஎறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள்,உலகத்தமிழர்களே……..ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டுபோன இனத்தின் விடுதலையும்,துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும்இருக்கிறது.

வலி கலந்த நம்பிக்கைகளுடன்…
 
 
————————–
எங்கிருந்தோ வந்தது… உங்களுக்காக…
 
- பாண்டியராஜன்…

cartoon_2091நன்றி குமுதம்.காம்

ல்லூறுகளைப் போல வட்டமிட்டு குண்டுவீசும் போர் விமானங்கள், இன்னொரு பக்கம் எறிகணை, ஏவுகணை வீச்சு என்று எக்கச்சக்கப் பீதியில் கிடக்கிறது ஈழத்தின் வன்னிப்பகுதி. அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்குச் சூழ்ந்து கிடக்கிறது போர்மேகம். இந்த நிலையில், இருட்டைக்கிழிக்கும் ஒரு வெளிச்சக் கீற்றாய், வன்னிப் பகுதியில் உண்மை நிலவரத்தைக் கண்டறிய,  தன் உயிரையும் துச்சமாக மதித்து அங்கு சென்று திரும்பியிருக்கிறார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்த மூர்த்தி. கொழும்பு திரும்பியுள்ள அவரிடம் நாம் தொலைபேசி மூலம்  பேசினோம்…

கடும்போர் நடந்துவரும் வன்னிப்பகுதியில் குறிப்பாக கிளிநொச்சியில் என்ன மாதிரியான சூழ்நிலை நிலவுகிறது?

“உயிரைப் பணயம் வைத்து வன்னி சென்று, அங்கே பதினொரு நாட்கள் தங்கியிருந்து இரண்டு நாட்களுக்கு முன்புதான் கொழும்பு வந்தேன். நிலைமை அங்கே படுமோசமாக இருக்கிறது. மன்னார் தொடங்கி, கிளிநொச்சி வரை மக்கள் அங்கே நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, தம்மாபுரம், கண்டாவளை என பல கிராமங்களின் அருகே தோட்டக்காணிகளிலும், கழனிக்காடுகளிலும் மக்கள் தங்கியிருக்கிறார்கள்.

பலர் குடிசையோ, கூடாரமோ கூட அமைக்க வசதியில்லாமல் மரங்களின் அடியில் துணிகளால் பந்தல் அமைத்து அதன்கீழ் தங்கியுள்ளனர். நான் தங்கியிருந்த நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாம்புக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஓயாத குண்டுவீச்சு மற்றும் மழை காரணமாக பாம்புகள் இடம்பெயர்ந்து மக்களைக் காவு வாங்கி வருகின்றன. ஒரு வயதுக் குழந்தை முதல் கர்ப்பிணிகள் வரை பதினெட்டுப் பேர் இதுவரை பாம்புக்கடிக்கு பலியாகி இருக்கிறார்கள்.

இறந்தவர்களுக்காக அழக்கூட அங்கே நேரமில்லை. அடுத்த குண்டுவீச்சுக்கு அஞ்சி, அவசர கதியில் உடல்களைப் புதைத்துவிட்டு ஓடுகிறார்கள். நாளை உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையே மக்களிடம் இல்லை. பதுங்கு குழியே அவர்களின் வாழ்விடமாகிக் கொண்டிருக்கிறது.”

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரர் பசில் ராஜபக்ஷே இந்தியப் பிரதமரைச் சந்தித்தபோது, `மக்கள் மீது குண்டு வீசவில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகளை இலங்கை அரசு செய்கிறது’ என்றாரே?

“இந்தியாவை மட்டுமல்ல, உலக சமுதாயத்தையே  நம்பவைத்து ஏமாற்றும் வேலை இது. நான் அங்கே இருந்தவரை விமானக் குண்டுவீச்சுகள் அனைத்தும் மக்கள் மத்தியில்தான் நடந்தன. இருபது பொதுமக்கள் இறந்தே போனார்கள். 38 பேர் படுகாயமடைந்தார்கள். அவர்களுக்கான சிகிச்சை வசதிகூட அங்கே இல்லை.  கிளிநொச்சி நகர வைத்தியசாலையிலுள்ள முக்கிய மருத்துவக் கருவிகள் விஸ்வமடு, தம்மாபுரம் பகுதி பாடசாலைகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. அங்கும் மக்கள் போக முடியாத நிலைதான் உள்ளது.

காயமடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களை வவுனியா அல்லது கொழும்புக்குக் கொண்டுசெல்ல ராணுவம் தடை விதித்துள்ளது. அந்தப் பாதையில் தொடர் எறிகணைத் தாக்குதல் நடப்பதால் யாரும் போகவும் முடியாது. தவிரவும், அப்பகுதி முழுவதும் சிங்கள ராணுவத்தின் ஆழஊடுருவித் தாக்கும் படையினரின் கிளேமோர் (கண்ணிவெடி) தாக்குதல்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. அதோடு காயமடைந்தவர்களை எடுத்துச் செல்ல காவு வண்டிகளுக்கும் (ஆம்புலன்ஸ்) அங்கே தட்டுப்பாடு. அவற்றுக்கு எரிபொருள் தர ராணுவம் தடை போட்டிருக்கிறது. இந்தக் கொடுமைகள் எல்லாவற்றையும் வன்னியில் நான் கண்கூடாகப் பார்த்தேன்.

வன்னி பெருநிலப்பரப்பில் ஆறுலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூன்று லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்து இன்று அகதிகளாக நிற்கிறார்கள். அவர்களின் விவசாய நிலம் அழிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த வேலைக்கும் போக முடியாத நிலை. ஒரு வேளை உணவுக்கே அல்லாடும் நிலைதான் உள்ளது.”

இலங்கை அரசு நிவாரண உதவி தருவதாகச் சொல்லப்படுவது….?

“முழுப் பொய்! அங்கே பட்டினிக் கொடுமைகளைக் கண்கூடாகப் பார்த்தேன். தற்போது தாய்த் தமிழகத்திலிருந்து வரும் நிவாரணப் பொருள்கள் எம் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேருமா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.”

ராணுவக் குண்டுவீச்சை நேரடியாகக் பார்த்தீர்களா?

“ஆம்! விஸ்வமடு, புதுக்குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து விமானத் தாக்குதல்கள் நடப்பதைப் பார்த்தேன். கடந்த 31-ம்தேதி நான் கிளிநொச்சியில் இருந்தபோது ஜெயந்திநகரில் குண்டுவீச்சு நடந்து ஆறுவீடுகள் தரைமட்டமாயின. பத்து வீடுகளுக்கும் மேல் சேதமடைந்தன. பள்ளி மாணவன் ஒருவர் பலியானார். பலருக்குக் காயம். அதேநாள் புதுக்குடியிருப்பு வள்ளிவனம் பகுதியில் செல்வராஜா என்ற மாணவர் விமானக் குண்டுவீச்சுக்குப் பலியானார். பெரும்பாலான மக்கள் பதுங்கு குழிகளில் இருந்ததால் உயிர்தப்பினார்கள். அதுபோல இரண்டு பாடசாலை மாணவர்கள் அந்தநேரம் பதுங்கு குழியில் இருந்ததால் உயிர் தப்பினார்கள். குண்டுவீச்சுகளில் கால்நடைகள்தான் நிறைய பலியாகின்றன. அவற்றுக்குப் பதுங்கு குழியில் பதுங்கத் தெரியாதே?”

உண்மை நிலவரம் தெரிந்துவிடும் என்பதால் போர் நடக்கும் வன்னிப்பகுதியில் ஈ, காக்கையைக் கூட இலங்கை ராணுவம் அனுமதிப்பதில்லை. நீங்கள் மட்டும் எப்படிச் சென்றீர்கள்?

“மிகுந்த சிரமமெடுத்து உயிரைப் பணயம் வைத்துதான் சென்றேன். வன்னிப் பகுதியின் நுழைவாயிலில் உள்ள சோதனைச் சாவடியில்  அனுமதி கேட்டபோது, நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால்  நீண்டநேர யோசனை, விவாதத்திற்குப் பின் அனுமதி தந்தார்கள். வவுனியாவில் இருந்து கண்டி-யாழ் சாலையான ஏ-9 வழியாகத்தான் கிளிநொச்சிக்குச் செல்ல முடியும். அந்தப் பாதை முழுவதும் எப்போதும் எறிகணை வீச்சு நடந்து கொண்டே இருக்கும். பாதை வேறு சேதாரம். வழியில் நான் எறிகணை வீச்சில் சிக்கி இறந்துவிடுவேன் என்று நினைத்தே ஒருவேளை அவர்கள் அனுமதி தந்திருக்கலாம்.

நான் ஏ-9 சாலை வழியாகச் செல்லாமல் இன்னொரு பாதையைத் தேர்ந்தெடுத்துச் சென்றேன். அது சிங்கள ராணுவத்தின் ஆழஊடுருவும் படைப் பிரிவு சுற்றித்திரியும் இடம். அவர்கள் சில காலத்துக்கு முன் கிளேமோர் (கண்ணிவெடி) தாக்குதல்கள் மூலம் தமிழ் எம்.பி.க்கள் சிலரை  காவு வாங்கியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு ஒட்டுப்படை அணிகளும் (ராணுவத்துக்கு ஆதரவான தமிழ்க் குழுக்களும்) அங்கே சுற்றித் திரிகின்றன. இந்த ஆபத்துகள் இருந்தாலும், எம் மக்களின் அவலத்தை வெளியுலகிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பில் துணிந்து பயணித்தேன். நான் கடந்து சென்ற இரண்டு இடங்களில் கிளேமோர் தாக்குதல் நடந்ததாக அறிந்தேன். ஒரு வழியாகப் புலிகள் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்து விட்டுத் திரும்பியிருக்கிறேன்.”

புலிகளைச் சந்தித்தீர்களா? அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள்?

“உண்மையைச் சொல்வதென்றால் புலிகள் இன்னும் முழுமையான போரையே தொடங்கவில்லை. கிளிநொச்சியை நோக்கி நகரும் ராணுவத்தை அவர்கள் வழிமறித்துத் தாக்குகிறார்கள். அவ்வளவுதான். புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ராணுவம் திக்குமுக்காடுகிறது. ராணுவத் தரப்பில் பலர் பலியாகி இருக்கிறார்கள். ராணுவத்தின், வன்னி பெருநிலப்பரப்பு  நோக்கிய நகர்வு முறியடிக்கப்பட்டு வருகிறது. `இழந்த பகுதிகள் மீண்டும் புலிகள் வசம் வரும். அங்கே அமைதியாக வாழ்வோம்’ என்ற நம்பிக்கை புலிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கும் பாரிய அளவில் இருக்கிறது. அப்படி ஒரு முரட்டு வேகத்தில் புலிகளின் படை இருப்பதை நான் கவனித்தேன்.”

`நாச்சிக்குடாவை சுற்றி வளைத்துவிட்டோம். அக்கராயனைப் பிடித்துவிட்டோம். வன்னிப் பகுதியில் கால் சதவிகிதம் மட்டுமே புலிகளிடம் இருக்கிறது. விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்’ என்று அதிபர் ராஜபக்ஷே கூறுகிறாரே?

“`நாற்பத்தெட்டு மணிநேரத்தில் கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம்’ என்றார்கள். அது ஒரு வாரமாகி,  இப்போது மாதக்கணக்காகி விட்டது. சிங்கள ராணுவத்தின் நிலைமையை உணராத முட்டாளாகவே ராஜபக்ஷே இருக்கிறார். பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் அவர் கடைசிவரை இப்படிக் கூறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.புலிகள் சில பகுதிகளை விட்டு நகர்ந்திருப்பது உண்மைதான். ஆனால், பின்வாங்கி ஓடவில்லை. கிளிநொச்சிக்கு மேற்காக, அக்கராயன் குளத்திற்கு சற்று அப்பால் புலிகள் விலகி நிற்கிறார்கள். பாரிய எதிர்ப்பைக் காட்டவில்லை. அதுபோல வன்னேரிக்குளத்தைப் பிடித்துவிட்டதாக ராணுவம் கதையளக்கிறது. அங்கே சில நூறு மீட்டர் தூரம் ராணுவம் முன்னேறியிருப்பதே உண்மை. புலிகள் போருக்குத்  தேவையில்லாத இடங்களை இனம்கண்டு அந்தப் பகுதிகளிலிருந்து நகர்ந்திருக்கிறார்கள். போருக்கான பகுதிகள் அவர்கள் வசம்தான் இருக்கின்றன. ராணுவத்தால் அங்கே நுழைய முடியவில்லை.கிளிநொச்சிக்கு மேற்கே பல மைல் தூரத்தில் ராணுவம் நிற்கிறது. அங்குதான் கடும்போர் நடக்கிறது. அங்கே எல்லைமீறி உள்ளே நுழைய முயன்றால் கடும் விளைவு ஏற்படும் என்பது ராணுவத்துக்கும் நன்றாகத் தெரியும். இதனால் விமானப் படையை மட்டுமே பயன்படுத்தித் தாக்குகிறார்கள். இப்போது முறியடிப்புப் போர் நடத்தி வரும் புலிகள் முழுதாகப் போரில் இறங்கினால் ராணுவத்தின் நிலைமை படுமோசமாகி விடும். சர்வதேச சமுதாயத்தை ஏமாற்ற, ராணுவம் முன்னேறுவதாக ராஜபக்ஷே சும்மா கதையளந்து வருகிறார்.”

வன்னிப்பகுதிக்குச் சென்று திரும்பிய உங்களுக்கு  ராணுவத் தரப்பிடமிருந்து மிரட்டல் வந்ததா?

“இதுவரை இல்லை. ஆனால் அரசுக்கும், ராணுவத்திற்கும் நிச்சயம் என்மேல் கோபம் இருக்கும்.  வன்னிப்பகுதி போர்நிலவரம் வெளியுலகிற்குத் தெரியக்கூடாது என்பதற்காக அங்கே தொலைத்தொடர்பு வசதிகளை ராஜபக்ஷே துண்டித்து வைத்துள்ளார். தொண்டுநிறுவனங்களை அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறார். இதையும் மீறி எம் மக்கள் படும் அல்லல்களை நான் நேரில் சென்று பார்த்து அம்பலப்படுத்தியிருப்பதால் அரசும், ராணுவமும் என் மீது கோபத்தில்தான் இருக்கும். இன்று நான் உயிரோடு இருக்கிறேன். நாளை உயிரோடு இருப்பேனா? தெரியாது.”

இலங்கை மந்திரியான டக்ளஸ் தேவானந்தா ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், `தமிழ்த்  திரைப்படங்களைத் தடை செய்தவர் பிரபாகரன். அவருக்குப் போய் தமிழ் நடிகர்கள் ஆதரவு தருகிறார்களே? இந்திய தலையீட்டை ஆதரிக்காதவர் பிரபாகரன். தற்போது வன்னிப் பகுதி தமிழ் மக்களில் கால்பகுதி பேர்தான் புலிகள் வசமுள்ளனர். அவர்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்’ என்றெல்லாம் கூறியிருக்கிறாரே?

“இந்த டக்ளஸ் தேவானந்தா யார் என்பது உலகத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ராஜ பக்ஷேவின் கைக்கூலி. விலைபோன இனத்துரோகி. தாய்த் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதை ராஜபக்ஷே சீர்குலைக்கப் பார்க்கிறார். அதற்கு துரோகி டக்ளஸ் தேவானந்தா துணை நிற்கிறார். அப்படியொரு இனத் துரோக வேலையை டக்ளஸ் செய்யாவிட்டால் அவர் உயிரோடு இருக்க முடியாது. அவரைக் கொன்று விட்டு புலிகள்மேல் ராஜபக்ஷே பழியைப் போட்டு விடுவார். அதனால் கைக்கூலி வேலையை டக்ளஸ் செய்தே ஆக வேண்டிய கட்டாயம். அவரது அறிக்கையை தாய்த் தமிழக உறவுகள் ஏற்க மாட்டார்கள்.

அடுத்ததாக, தமிழ்த் திரைப்படங்களுக்கு புலிகள் எப்போதுமே எதிரானவர்கள் இல்லை. இங்கு இன்றளவும் தமிழ்த் திரைப்படங்கள் மக்களால் பார்க்கப்பட்டு வருகின்றன. ஆபாசமான சில காட்சிகள் மட்டும் குறைக்கப்படுகின்றன அவ்வளவுதான். அது நடிகர்களுக்கும் தெரியும். இதற்கு அடுத்தபடியாக பிரபாகரன் எப்போதும் இந்திய தலையீட்டை எதிர்த்தவரல்ல. சுயநிர்ணய உரிமை என்ற எம் மக்களின் நிலைப்பாட்டிற்கேற்ப பேச்சுவார்த்தையை ஆதரித்து வரவேற்றவர் அவர். அடுத்தாக புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வல்லுறவு, போதைப் பழக்கம் எதுவுமில்லை. நள்ளிரவு நேரத்தில் கூட ஒரு பெண் அங்கே தன்னந்தனியாக நடமாட முடியும். இதற்கு மாறாக, ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தினந்தோறும் ஆள்கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், டக்ளசின் குற்றச்சாட்டை ஒரு மட்ட
மான இனத்துரோக செயல்பாடு என்றுதான் கூற வேண்டும்.”  

நன்றி ரிப்போர்ட்டர்.

pg2a1

 

நன்றி.குமுதம்

சென்னையை அடுத்த புழலில் அண்ணல் அம்பேத்கருக்கு சிலை எடுத்திருக்கிறார்கள். அந்தச் சிலைக்கு இரவோடு இரவாக நாமம் போட்டுவிட்டனர். அந்த அநீதி காட்டுத் தீ போல் பரவியது.

`குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என்று தலித் சமூகத்தின் பல்வேறு இயக்கங்களும் அமைப்புகளும் நியாயமாகவே கோரிக்கை எழுப்பின.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் சற்று அவகாசம் கேட்டனர். ஆனாலும் மறியல், ஆர்ப்பாட்டங்கள் என்று அவசரப்பட்டனர். அரசு பஸ்களுக்குத் தீ வைக்கப்பட்டது. வேறு பல பஸ்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகின. ஐந்து மணி நேரம் போக்குவரத்து நிலைநின்றது. இதனால் எத்தனை ஆயிரம் மக்கள் பணிகளுக்குச் செல்ல முடியாமல் பரிதவித்தனர்? தாய்மைப் பேற்றின் தலைவாசலில் நின்ற எத்தனையோ சகோதரிகள் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியவில்லை.இத்தகைய கொந்தளிப்பிற்கு மத்தியில், புழல் இன்ஸ்பெக்டர் ரவி குற்றவாளிகளைக் கண்டுபிடித்தார். அம்பேத்கர் சிலைக்கு நாமம் போட்டவர்கள் அந்தச் சிலையின் பீடத்தில் தங்கள் பொன்னான கையெழுத்துக்களையும் பொறித்திருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தியது, ஓவியம் தீட்டுவதற்கான பேனா. அதே பேனாவால்தான் சிலைக்கு நாமமும் போட்டிருக்கின்றனர். தங்கள் கையெழுத்துக்களையும் போட்டிருக்கின்றனர்.

குற்றவாளிகள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் சில மாணவர்கள். வினை விதைக்க அவர்கள் இந்த விளையாட்டை நடத்தினார்களா? இந்த விளையாட்டு பல வினைகளை உருவாக்கும் என்று அறியாமல் செய்தார்களா? செய்த குற்றத்தை ஒரு மாணவன் ஒப்புக்கொண்டுவிட்டான்.
பள்ளத்தில் வீழ்ந்து கிடந்த மக்களுக்கு கரம் கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர்.  அந்த மேதை வகுத்துத் தந்த சட்டங்கள்தான் இந்த தேசத்தையே ஆள்கின்றன. பொட்டுப் பூச்சிகளாக நசுக்கப்பட்டுக் கிடந்த மக்களை மானமிகு மனிதர்களாக்கிய அந்தப் பேரறிஞனின் சிலையைக் களங்கப்படுத்தியவர்கள் யாராயிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தானே?

ஆனால், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி அமளி செய்தவர்களே, `வழக்கை வாபஸ் வாங்குகிறோம். விட்டுவிடுங்கள்’ என்று கோரினர். சென்னைப் புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட் மறுத்துவிட்டார். `மாணவர்கள் என்பதால் அவர்கள் ஜாமீனில் சென்று படிப்பைத் தொடர அனுமதிக்கிறோம்’ என்று அவர் உறுதிபடக் கூறிவிட்டார். கண்டிப்பான நடவடிக்கைகளால் அவர் பல மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.தவறு செய்தவர்களை ஜாதி பார்த்துத் தண்டிப்பதும் விடுவிப்பதும் என்றால் நீதி நிலைகுலைந்து போகாதா? நியாயம் தலைகுனிந்து போகாதா?சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த கற்கால யுத்தத்திற்குக் காரணம் என்ன? இதுவும் வழக்கமான மாணவர் மோதல்தான் என்று எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. ஜாதி உணர்வு எந்த அளவிற்கு படித்த மாணவர் உலகில் ஆழ வேரூன்றி இருக்கிறது என்பதனை அந்த மோதல் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் தேவர் ஜெயந்தியைக் கொண்டாட விரும்பினர். தவறில்லை. அதற்காக ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். அந்தப் பிரசுரத்தில், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் என்று குறிப்பிட்டனர். ஆனால், அம்பேத்கர் பெயரைக் குறிப்பிடவில்லை. இதனை இன்னொரு பிரிவினர் எதிர்த்தனர். அம்பேத்கர் பெயரையே உச்சரிக்க வெட்கப்படுகிறவர்கள் அவருடைய நினைவால் இயங்கும் கல்லூரியில் படிக்கலாமா? கேள்வி எழுந்தது. அந்தக் கல்லூரி அரசியல் களமானது.

பட்டிதொட்டிகளில் கூட இப்போது ஜாதி உணர்வுகள் மங்கி வருகின்றன. இந்த நிலையில், கல்விக் கூடங்களில் அந்த ஜாதித் தீயை வளர்க்கத் துடிக்கின்றனர். ஜாதிவாரியாக மாணவர்களே தங்களுக்குள் அமைப்புகளை உருவாக்கிக்கொள்கிறார்கள், ஏன்? ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட ஜாதிரீதியாக சங்கங்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.அதன் விளைவுதான் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஏற்பட்ட மோதல்களாகும். அந்த மோதல்கள் கோவையிலும் உசிலம்பட்டியிலும் எதிரொலித்தன. அங்கேயும் கல்விக் கூடங்கள் ஜாதி ரீதியான போர்க்களங்களாயின.ஆமாம். அவமானங்களை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறோம். அங்கே சிந்துகின்ற ரத்தத்தில் ஜாதி வேறுபாடு தெரியவில்லை. யார் யாருக்கு ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் எல்லா சமூகத்தினருமே கண்ணீர் வடிக்கிறார்கள். சோகமும் துயரமுமே அனைத்துத் தரப்பினருக்கும் சொந்தங்களாகிவிட்டன.

அங்கேயும் பஸ் மறியல், தீ வைப்பு. அநாதைக் குழந்தையை இதயம் இழந்தவர்கள் அடிப்பது போல் அரசு பஸ்களுக்குக் கொள்ளி வைக்கிறார்கள். அப்படி அரசு சொத்துக்கள் அழிக்கப்பட்டால் அதற்கு தண்டனை என்று முன்பு ஒரு விதி இருந்தது. அந்த விதி விலக்கப்பட்டுவிட்டதா? எங்காவது ஒரு கிராமத்தில் ஒரு சிறு மோதல் என்றாலும் பஸ் மறியல் - எரிப்புத்தான். இந்தக் கொடுமை கடுமையாக ஒடுக்கப்படவில்லையென்றால் அரசு பஸ்களை புதிய மயானங்களில்தான் காண முடியும்.சட்டம் பயின்று எதிர்காலத்தில் வழக்கறிஞர்களாக, நீதிமான்களாக வர வேண்டிய மாணவர்கள் மத்தியிலேயே வகுப்பு மோதல்கள் என்றால் நாமும் நாடும் பாதுகாப்பாக இருக்க முடியுமா? ஒரு பிரிவினர் பல்லாயிரம் ஆண்டுகளாக சேற்றில் அழுத்தப்பட்டு ஆமைகளாய், ஊமைகளாய் இருந்தவர்கள். இன்னொரு பிரிவினர் பிற்படுத்தப்பட்ட மக்களாக சமுதாயத்தின் பின்னே தள்ளப்பட்டு அல்லல்பட்டவர்கள். எண்ணிப் பாருங்கள். இவர்களுக்கு இடையே மோதல் என்பது இரண்டு கண்களுக்கு இடையே நடைபெறும் யுத்தம் அல்லவா?

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த கொடூரமான தாக்குதல்கள், எந்த அளவிற்கு சமுதாய முரண்பாடுகள் முற்றி வருகின்றன என்பதனை உணர்த்தவில்லையா? இதற்கு காவல்துறையால் மட்டும் தீர்வு காண முடியுமா? எதிர்காலத்தில் சட்டத்தின் காவலர்களாகப் போகிற மாணவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று எந்தத் தலைவராவது எடுத்துக் கூறுகிறாரா?அம்பேத்கர் சட்டக்கல்லூரி சம்பவத்திற்கு உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் என்று அரசு அறிவித்தால், `இல்லை, இல்லை  பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிதான் விசாரணைக்குத் தேவை’ என்று ஒரு தலைவர் அறிக்கை விடுகிறார். பணியில் இருக்கும் நீதிபதிக்கு இருக்கின்ற வேலைப் பளுவே போதாதா?சம்பவம் பற்றி சி.பி.ஐ.தான் விசாரணை செய்ய வேண்டும் என்று இன்னொரு அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.

ஜாதீய உணர்வு, வன்முறைக் கலாசாரத்திலிருந்து மாணவர்கள் விடுபட வேண்டும் என்று எந்தத் தலைவரும் இதுவரை வேண்டுகோள் விடுத்ததாகத் தெரியவில்லை. அறியாமையின் குழந்தைதான் ஜாதீய உணர்வுகள். அதனைத் தகர்க்க அண்ணல் காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தேசத் தலைவர்கள் எடுத்த முயற்சிகளெல்லாம் வீண்தானா?

 

நன்றி ரிப்போர்ட்டர்

cartoon_223

நன்றி ரிப்போர்ட்டர்

தமிழக அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் செம காமெடி மேட்டர் சொல்லியிருக்கார்.

“தேர்தலின் போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் இனிவரும் காலங்களில் ஓட்டு சேகரிக்க வரும்போது உங்களால் ( மக்களால்) ஒன்றும் கேட்க முடியாது”

ஆஹா … டீவியும் ,கேஸ் அடுப்பும் கொடுத்தா மக்கள் எல்லாவற்றையும் மறந்திடுவாங்கன்னு நினைத்துவிட்டார் போல.

cartoon_225

நன்றி குமுதம்.காம்

நம்ம நட்டுல எங்க குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே காவல்துறையினர் இது இந்த தீவிரவாத அமைப்பின் வேலையாக இருக்கலாம். ( அவங்களுக்குத்தான் ஏகப்பட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் மட்டும் தெரியுமே)

ஆனாலும் ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்திச்சு. அது இப்ப உண்மையாகி வருது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் 147 டாலராக இருந்த போது பெட்ரோல், டீசல் விலையை உச்சாணிக் கொம்பிற்கு உயர்த்தினார்கள். ஆனால், இன்றைக்கு பீப்பாய் 50 டாலராக வீழ்ந்து விட்டது. நியாயமாக பெட்ரோல், டீசல் விலையை சரிபாதிக்கும் கீழாகக் குறைக்க வேண்டும். ஆனால், நமது மன்மோகன் சிங் கம்பெனியாருக்கு விலையை உயர்த்தத் தெரியுமே தவிர, சத்தியமாகக் குறைக்கத் தெரியவே தெரியாது.

இன்றைக்கு மக்கள் என்ன கேட்கிறார்கள்? பெட்ரோல், டீசல் விலையைச் சரிபாதியாகக் குறையுங்கள் என்று தான் கேட்க வேண்டும். ஆனால் அப்படிக் கேட்கவில்லை. `ஐயா சாமி கடைசியாக பெட்ரோலுக்கு லிட்டர் 5 ரூபாய் என்றும், டீசலுக்கு ஒரு ரூபாய் என்றும் உயர்த்தியதையாவது குறைக்கக் கூடாதா?’ என்றுதான் மன்றாடுகிறார்கள். காதுகளுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டிருப்பவர்கள் கண்டு கொள்ள முடியுமா?`பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கெனவே இந்திய அரசின் எண்ணெய்க் கழகம் பெரும் நட்டத்தைச் சந்தித்து விட்டது. அதனைச் சரி செய்ய விலையை உயர்த்தியது உயர்த்தியதுதான். வாங்க வக்கில்லையென்றால் பாதயாத்திரையாகப் பயணம் போங்கள்’ என்று மன்மோகன் சிங் கம்பெனியார் தெரிவித்து விட்டனர்.

பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய், ஒரு ரூபாய் என்று குறைத்தாலும் ஏற்கெனவே ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியும். ஆனால் ஒரு முகேஷ் அம்பானி கோடி கோடியாக லாபத்தைக் குவித்துக் கொள்வதற்காக மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மறுக்கிறார்கள்.
இந்திய எண்ணெய்க் கழகம் நட்டத்தில் நர்த்தனமாடினாலும் அதனை மன்மோகன் சிங் சம்பெனியார் சகித்துக் கொள்வார்கள். ஆனால், அம்பானிகளுக்கும் அன்னிய எண்ணெய் நிறுவனங்களுக்கும் லாபத்தில் பைசா குறைந்தாலும் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்கள். அதுதான் அவர்களுடைய அரசியல் தர்மம். பொருளாதார நியாயம். அவர்கள் உத்தமபுத்திரர்கள்.

இன்றைக்கு இந்திய எண்ணெய்க் கழகத்தை எட்டுகின்ற அளவிற்கு முகேஷ் அம்பானி எண்ணெய் வணிகம் செய்கிறார். அவரே எண்ணெய் உற்பத்தியும் செய்கிறார். சர்வதேசச் சந்தை நிலவரப்படி அவர், ஒரு பீப்பாய் எண்ணெய் 50 டாலர்  என்றுதான் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் அவரோ இன்றும் 147 டாலர் என்ற விகிதத்தில்தான் வியாபாரம் செய்கிறார்.பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மன்மோகன் சிங் கம்பெனியார் மறுப்பதால் அம்பானிகளுக்கு மட்டுமல்ல, புதிதாக பெட்ரோல் நிலையங்களைத் திறந்திருக்கும் அன்னிய கம்பெனிகளுக்கும் லாபமோ லாபம், கொள்ளையோ கொள்ளை லாபம். அதற்கு மன்மோகன் சிங்-சிதம்பரம் கம்பெனியார் நம்மை மொய் எழுதச் சொல்கிறார்கள். விரல்விட்டு ஒரு சில தனியார் நிறுவனங்கள் செழித்து கொழிப்பதற்கு நாம் கப்பம் கட்ட வேண்டும் என்று அந்த கம்பெனியார் சொல்கிறார்கள்.

அதற்குக் காரணம் இருக்கிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சர்க்கரை ஆலை அதிபர்கள்தான் தேர்தல் நிதியை அள்ளிக் கொடுப்பார்கள். அதற்கு ஏற்றாற்போல் சர்க்கரை விலையை உயர்த்திக் கொள்வார்கள். ஆனால் இன்றைக்கு சர்க்கரை ஆலைகள் கசப்பான அனுபவங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.நியாயமாக பெட்ரோல், டீசல் விலையை சரிபாதிக்கும் கீழாக நிர்ணயிக்க வேண்டிய அம்பானிகள் லாபங்களைக் குவித்துக் கொள்ளட்டும் என்று மன்மோகன் சிங் கம்பெனியாரே வழிவகுக்கிறார்கள் என்றால் என்ன பொருள்? அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அம்பானிகள்தான் காங்கிரஸ் கட்சியின் கஜானாவாகச் செயல்படப் போகிறார்கள் என்று அர்த்தம். அதற்காக இரு சக்கர வாகனம் வைத்திருக்கின்ற சாமானிய மக்கள் கூட தண்டத் தீர்வை செலுத்துகிறார்கள். இனி விலையைக் குறைக்கலாம் என்று அம்பானிகள் உத்தரவிட்டால்தான் குறைப்பார்கள்.

எப்படியோ? அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கணக்கை முடித்து விடுவது என்பதில் மன்மோகன் சிங் கம்பெனியார் ரொம்பத் தெளிவாக இருக்கிறார்கள். அதற்காக உலகச் சந்தையில் எண்ணெய் விலை இன்னும் வீழ்ந்தாலும் நமது விழிகளைக் குத்தும் விலையை இறக்காமல் கட்டிக் காத்து வருகிறார்கள். அதுமட்டும்தானா?தனியார்மயம், தாராளமயம் என்ற கரகாட்டம் அமெரிக்காவிலேயே ஓய்ந்து விட்டது. அங்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் திவாலாகி விட்டன. ஒரு போர் வீரனின் மனைவி, மனைவியுமல்ல. விதவையுமல்ல என்பார்கள். அந்த அவலநிலையில்தான் எல்லா நிதி நிறுவனங்களும் அமெரிக்காவில் அல்லாடிக் கொண்டிருக்கின்றன.

தங்கள் ஞானத் தந்தையர் நாடு இப்படித் தலைவிரிகோலமாகத் தவிப்பதை மன்மோகன் சிங் கம்பெனியார் பொறுத்துக் கொள்வார்களா? அங்கே கல்லறைப் பயணத்திற்குக் காத்திருக்கின்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இங்கே உயிர்ப்பிச்சை அளிப்பது என்று தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறார்கள்.இந்திய இன்சூரன்ஸ் துறையில் இதுவரை 26 சதவிகித அன்னிய முதலீட்டைத்தான் அனுமதித்தார்கள். அந்த வரம்பை நீக்கி இனி 49 சதவிகிதம் அனுமதிக்கலாம் என்று மன்மோகன் சிங் கம்பெனியார் அதிகாரபூர்வமாக முடிவு செய்திருக்கின்றனர். ஆம். அதற்காகவே சென்ற மாத இறுதியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இனி அடுத்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. சிதம்பரமா? கொக்கா? இதே மசோதாக்களை அவர் 2004-ம் ஆண்டே தாக்கல் செய்யத் தயாரானார். ஆனால், அதனை இடதுசாரிக் கட்சிகளும் இன்சூரன்ஸ் துறை ஊழியர்களும் கடுமையாக எதிர்த்தனர். அதன் விளைவாக அப்போது பாம்பைப் பெட்டிக்குள் அடைத்தவர்கள், இப்போது பெட்டியைத் திறந்து விடப் போகிறார்கள். காரணம், இன்றும் இடதுசாரிகள் எதிர்த்தாலும் முலாயம் சிங் போன்ற அரசியல் வியாபாரிகளின் ஆதரவில் மசோதாக்களை நிறைவேற்ற சிதம்பரம் தயாராகி விட்டார்.

அமெரிக்காவின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான ஏ.ஐ.ஜி. திவாலானதையும், ஆனால் அதே நிறுவனம் இங்கே டாடாவுடன் இணைந்து கூட்டு வணிகம் செய்வதையும் ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருந்தோம். அங்கே ஏ.ஐ.ஜி. திவாலானாலும் இங்கே 74 சதவிகிதப் பங்குகளைத் தானே வைத்திருப்பதாகவும் முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று டாடா நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அதே ஏ.ஐ.ஜி. நிறுவனம் இனி 49 சதவிகிதப் பங்குகளைப் பெற்றால் அதற்கு என்ன உத்தரவாதம்?

அமெரிக்காவில் திவாலான ஏ.ஐ.ஜி. நிறுவனத்தின் 80 சதவிகிதப் பங்குகளை அரசே வாங்கியிருக்கிறது. அதில் தனியார் பங்கு 20 சதவிகிதம்தான். ஆனால், இங்கே அன்னிய நிறுவனங்கள் 49 சதவிகிதப் பங்குகளை வாங்க அனுமதிக்கப் போகிறார்கள்.அங்கே திவாலான இன்சூரன்ஸ் நிறுவனங்களை `வாராய் என் ராசா’ என்று அழைப்பதற்குத்தான் புதிய மசோதாக்களைக் கொண்டு வருகிறார்கள். ஆமாம். இவர்கள் இந்தியாவின் நலன்களைக் காக்கப் போகிறார்களா? அன்னிய திவால் கம்பெனிகளுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கப் போகிறார்களா?

இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இனி வெளிநாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்று இன்னொரு மசோதாவை சிதம்பரம் கூர் தீட்டி வைத்திருக்கிறார். அதற்கு என்ன தேவை?அண்மையில் இந்தியாஅமெரிக்கத் தனியார் நிறுவனங்களின் (indo-vs deo’s foizum ) தலைமை நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இன்சூரன்ஸ், வங்கி, பென்ஷன் துறைகளை அன்னிய மூலதனங்களுக்கு இன்னும் அதிகமாகக் கதவு திறந்து விட வேண்டும் என்று அமெரிக்கத் தொழிலதிபர்கள் வலியுறுத்தினர். இனி மன்மோகன் சிங் கம்பெனியார் சும்மா இருக்க முடியுமா?
நன்றி ரிப்போர்ட்டர்

cartoon_227

நன்றி குமுதம்.காம்

ஒகேனெக்கல் பிரச்சினையில் கர்நாடக அரசு தங்களுடைய சுயலாபத்துக்காக செயல்படுகிறது. நம்முடைய முதல்வர் இப்பிரச்சினையில் கர்நாடக தேர்தல் முடியாட்டும் என்றார். முடிந்துவிட்டது. இப்ப கேட்டா நாடாளுமன்ற தேர்தல் முடியட்டும் என்பார் போல.

இந்த நிலைமையில பிரதமர் இவ்விசயத்தில் தலையிடமாட்டார்னு காங்கிரஸ் சொல்லியிருப்பது காமெடியா இருக்குப்பா.

அவர் எந்த விசயத்துலதான் உருப்படியா தலையிட்டிருக்கார்?

pg2a2

 

நன்றி. குமுதம்

கம்யூனிஸ்ட்களுக்கு அதிமுக மேல ரொம்பத்தான் லவ் வந்திருச்சி. கல்யாணம் முடிந்ததும் பார்க்கலாம்( தேர்தல்).

சென்னையில் அடைமழையிலும் ரொம்ப பிசியா இருந்தது டாஸ்மார்க் மட்டும்தான். அதுல வர்ற வருமானத்தை வச்சிதான் நம்ம அரசு வண்டிய ஓட்டிக்கிட்டு இருக்கு, அதிலயே கைய வைக்க சொன்னா எப்படி டாக்டர் அய்யா.இப்பதான் உங்களுக்கு திமுகவிடமிருந்து கூட்டணி சிக்னல் கிடைச்சிருச்சே. அடக்கி வாசிங்க அப்பு.

ருத்துகணிப்புகள் ஒருவகையில் ஆரூடம் சொல்வது மாதிரிதான். அண்மையில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. ஏடுகளும் தொலைக்காட்சிகளும் விதவிதமான கருத்துக் கணிப்புகளை காணிக்கையாக்கின. காலையில் சூரியன் உதிப்பது உறுதி என்பது மாதிரி ஒபாமா வெற்றி என்பது ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், அவருடைய வெற்றி அளவிற்கு எல்லா ஊடகங்களும் யூக எல்லைக் கோடுகள் போட்டன. அனைத்துமே பொய்யாய் பழங்கதையாய் போய் விட்டன. அந்த எல்லைகளைத் தாண்டி ஒபாமாவின் வெற்றி அமைந்தது.

1967-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் அரசியலில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அண்ணா அமைத்த கூட்டணியை, செல்வாக்கின் சிகரத்தில் இருந்த வார ஏடு கிண்டல் செய்தது. ராஜாஜி, அண்ணா, காயிதேமில்லத், இதர கூட்டணித் தலைவர்கள் கழுதை மீது பயணம் செய்வதாகக் கேலிச் சித்திரம் தீட்டியிருந்தது. முன்பக்க அட்டையிலேயே முளைத்த அந்த நையாண்டி ஓவியம் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. ஆனால், ராஜாஜி அதிர்ச்சியும் கொள்ளவில்லை. ஆத்திரமும் கொள்ளவில்லை. `காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க நாங்கள் குதிரை மீது செல்ல வேண்டியதில்லை. கழுதை மீது போனாலே போதும்!’ என்றார். எல்லா ஏடுகளின் கருத்துக்கணிப்புக்களும் அவைகளின் ஆசை வெளிப்பாடுதான் என்பது மெய்யானது. உண்மைக்கும் கற்பனைக்கும்தான் எவ்வளவு பெரிய இடைவெளி? தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது.

அன்றைக்கு தொலைக்காட்சிகள் இல்லை. ஏடுகள்தான் இருந்தன. பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர். குறைந்தபட்சம் 15000 வாக்கு வித்தியாசத்தில் தோற்பது உறுதி என்று பெரும்பாலான ஏடுகள் தோள் தட்டின. அவரோ பதினெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குவேறுபாட்டில் வெற்றி பெற்றார்.குண்டடிபட்ட அவர், அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அவர் படுத்துக் கொண்டே வெற்றி பெற்றார். படுத்துக் கொண்டே வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தவர்கள் தோல்வியில் சுருண்டு படுத்து விட்டார்கள். கருத்துக்கணிப்புக்கள் அவர்களுக்குக் கை கொடுக்கவில்லை.

இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி குழுமம் எவ்வளவு பெரிய பத்திரிகை சாம்ராஜ்யம்? இந்தியா முழுமையும் எத்தனையோ ஆங்கிலப் பதிப்புக்கள். பெரும்பாலான மாநில மொழிகளில் நாளேடுகள். வார ஏடுகள்.அதன் அதிபர் கோயங்கா 1952-ம் ஆண்டு திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் சாமானிய மக்களின் தூதுவர்  - தொண்டர் திருக்குறள் முனுசாமியார்.

கோயங்கா காங்கிரஸ் வேட்பாளர். திருக்குறளார் உழைப்பாளர் கட்சி வேட்பாளர். கோயங்காவின் பிரசாரம் காட்டாற்று வெள்ளம். மக்கள் மருண்டு போனார்கள். ஊர் ஊருக்கு வாண வேடிக்கைகள்தான். வானத்திலிருந்தே ஹெலிகாப்டர்கள் தொகுதி முழுக்க துண்டுப் பிரசுரங்களை அள்ளி வீசின. கோயங்காவிற்காக எழுதிக் குவித்ததையெல்லாம் மக்கள் பொழுதைக் கழிப்பதற்காகப் புரட்டிப் பார்த்தார்கள். அவ்வளவுதான்.திருக்குறளாரின் தேர்தல் பணி தெளிந்த நீரோடை. அவருடைய மூலதனம் தமிழ்தான். சொல்லாற்றல் அவருடைய சொத்து.

தேர்தல் தீர்ப்பு என்ன? நான்கு முழ வேட்டி, ஜரிகைக் குல்லாவை வென்றது. திருக்குறளார் வெற்றி கண்டார்.வரலாறு கண்ட ஒரு சில நிகழ்வுகளையே நினைவூட்டினோம். எதற்காக? நாங்கள் கால்களை விட்டுக் கலக்கினால் கடல் கதிகலங்கிப் போகும் என்று நினைக்கின்ற ஊடக உரிமையாளர்கள் சிலரைப் பார்க்கிறோம்.

ஊடகங்கள் தீர்மானிக்கும் சக்தி அல்ல. அதே சமயத்தில் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். நடுநிலையோடு செயல்படும் வரை நன்மை பயக்கும். ஆனால் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டால், நமது சட்டைக்குள் புகுந்த கம்பளிப் பூச்சி ஆகிவிடும். தங்கள் மன எரிச்சலைத் தீர்க்க பிறருக்கு மன உளைச்சல் தருவது என்றால், அது ஊடகத்தின் - தர்மமாக நியாயமாக இருக்க முடியாது.தங்கள் அரசியல் கூட்டணிக்குள்ளேயே - ஏன் தங்கள் குடும்பத்திற்குள்ளேயே எப்படி ஊடகங்கள் குழப்பங்கள் விளைவிக்கப் பார்த்தன என்பதனை அண்மையில் தமிழக முதல்வர் வேதனையோடு வெளியிட்டிருந்தார். தமது கரம்பிடித்து வளர்ந்தவர்களே எப்படிக் காலை வாரிவிடக் காத்திருக்கிறார்கள் என்பதனை அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

எண்ணிக் கணக்குப் பார்க்க முடியாத அளவிற்கே கோடிகள் கொட்டும்போது அதிகாரத்தின் மீது ஆசை வருவது இயல்பு. அங்கே பந்தபாசங்களுக்கு மரியாதை இருக்காது. உழைப்பிற்கு மதிப்பே இருக்காது. எதிரே நிற்பவர்களை எதிரிகளாகத்தான் கருதுவர். ஒரே நேரத்தில் எல்லோரையும் ஓரம் கட்டுவது என்பது இயலாது. எனவே இப்போதைக்கு அவருக்கு அடுத்து நாம்தான். மற்றவர்களெல்லாம் தமக்குப் பின்னே இருப்பவர்கள். கணக்கில் வராதவர்கள் என்று கணக்குப் போட்டனர். என்ன அவசரம்?கலைஞரின் வாரிசாக யார் வரவேண்டும் என்று ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டனர். கலைஞர், பேராசிரியர், ஆற்காட்டார், ஸ்டாலின் என்று அந்த வரிசை தொடருகிறது. கழகத்தின் அடுத்த வாரிசு ஸ்டாலின்தான் என்று பேராசிரியரும் ஆற்காட்டாரும் ஏற்கெனவே வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும் ஊடக வெளிச்சத்தில் முண்டியடித்து முன்னேற ஸ்டாலின் விரும்பியதில்லை. வேறு சிலர் முயற்சித்தார்கள்.

`மு.க. அழகிரி ஆனாலும், கனிமொழி ஆனாலும் எனது அரசியல் வாரிசாக வருவதற்கு எந்த முயற்சிகள் எதிலும் ஈடுபடாத நிலையில், தேவையில்லாமல் வீண் வம்பினை விலை கொடுத்து வாங்குவதைப் போல் அவர்களுக்கு தமிழகத்தில் இரண்டு சதவிகிதம்தான் ஆதரவு என்பதாகச் செய்தி வெளியிட்டார்கள்’ என்று, கலைஞரே கனத்த இதயத்தோடு குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார்.அழகிரியோ கனிமொழியோ வாரிசுப் போட்டிக்கு வரவில்லை என்பதனை அவர் இங்கே தெளிவுபடுத்தி இருக்கிறார். பின்னர் எதற்கு அவசர அவசரமாக வாரிசு யார் என்று கருத்துக் கணிப்புக்களை அந்த ஊடகங்கள் வெளிச்சம் போட்டு வெளியிட்டன?

தந்தையின் வெளிச்சத்தில் அமைச்சரானவர் ஜி.கே.வாசன். தந்தையின் கரம்பற்றி அமைச்சரானவர் அன்புமணி. ஆனால், கலைஞரின் கரம் பற்றி ஸ்டாலின் வளர்ந்தவரல்ல. கழகத்தின் கரம்பற்றி வளர்ந்தவர்.கழகம் தொய்வு பெறுமோ என்ற கவலை பிறந்தபோது இளைஞர் அணியை உருவாக்கியவர். அந்த அணிதான் இன்றைக்கு தி.மு.கழகத்தின் நாடித்துடிப்பாக இருக்கிறது.நாடாளுமன்றத்தின் மூன்று தொகுதிகளைக் கொண்டது சென்னை மாநகரம். அந்த மாநகரத்தின் தீர்ப்பைப்பெற்று மேயராக செங்கோல் பிடித்தவர் ஸ்டாலின். இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் தீர்ப்பைப் பெற்றே அவர் உயருகிறார்.

அவரைவிட பல இளையவர்கள், புதியவர்கள் அமைச்சரான பின்னர்தான் அவர் மாநில அமைச்சரானார். கலைஞருடைய மகன் என்பதற்காக அந்தப் பதவி தேடி வரவில்லை. கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள அரசியல் உறவு, ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவல்ல. ஒரு அரசியல் தலைவருக்கும் முதன்மைத் தொண்டருக்கும் உள்ள உறவுதான். உழைப்பு ஸ்டாலினை உயர்த்துகிறது இதனை எந்த ஊடகமும் திரையிட்டு மறைக்க முடியாது; தடுக்கவும் முடியாது.

நன்றி. குமுதம் ரிப்போர்ட்டர்